loader

All News

கோலாலம்பூர்,மார்ச் 18-

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு, உணவகத் துறைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக பிரேஸ்மா தலைவர் டத்தோ முகமட் மொசின் தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் தற்போது செலவினச் சுமையை தாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றும், உடனடியாக உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவதில்லை என்றாலும், இந்த நிலையை எவ்வளவு நாள் தாங்க முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என அவர் கூறினார்.

இந்த நிலைக்கு நாங்கள் காரணமல்ல; உலகளாவிய சூழ்நிலைகளே காரணம். எனவே, அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், உணவகங்களில் விலை உயர்வை தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனால் சில உணவகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இத்துடன், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனை சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். 

அதேபோல், பிரதமரையும் சந்திக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு தொழிலாளர்கள் வேலைக்கு வராதது மேலும் சிக்கலை அதிகரித்துள்ளதாகவும், உணவகத் துறையை அரசு சாதாரண துறையாக பார்க்கும் போக்கு இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

ஆனால் உணவகத் துறை நாட்டின் முக்கிய துறைகளில் ஒன்றாகும் என்றும் டத்தோ முகமட் மொசின் மேலும் குறிப்பிட்டார்.

 

கோலாலம்பூர்,மார்ச் 16-
தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற Australian Open Squash Championship 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதற்காக மஇகா விளையாட்டு பிரிவு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

இந்த வெற்றி மிகவும் சிறப்புமிக்கதாகும். கடந்த 13 மாதங்களாக எந்தப் போட்டியிலும் பட்டம் பெறாமல் இருந்த நிலையை முறியடித்து, அவர் மீண்டும் சர்வதேச மேடையில் தனது திறமையையும் உறுதியையும் நிரூபித்துள்ளார் என்று விளையாட்டுப் பிரிவின் தலைவர் எண்ட்ரு டேவிட் தெரிவித்தார்.

இந்த சாதனை மலேசிய விளையாட்டு உலகிற்கு பெருமை சேர்ப்பதுடன், இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற ஊக்கமளிக்கும் உத்வேகமாகவும் அமைகிறது.

எஸ். சிவசங்கரி தொடர்ந்து மேலும் பல வெற்றிகளைப் பெற்று மலேசியாவின் பெயரை உலக விளையாட்டு அரங்கில் உயர்த்துவார் என்ற நம்பிக்கையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர், மார்ச் 16-

​மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் (MIYC) மற்றும் மலேசிய தேசியத்துவக் கழகம் (Akademi Kenegaraan Malaysia) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், வட மாநில இந்திய இளைஞர்களுக்கான சிறப்புத் தலைமைத்துவப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

 “KEM GENRLS 2.0” எனும் பெயரில், கெடா கூலிமில் உள்ள தேசியத்துவப் பயிற்சி மையத்தில் மூன்று நாட்கள் இந்த முகாம் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

​இதில் பினாங்கு மற்றும் கெடா மாநிலங்களைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள், ஆசிரியர் பயிற்சி வளாகங்கள் மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்கள் என மொத்தம் 94 பிரதிநிதிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


​இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். 

அவர் தனது உரையில், "நாட்டின் முக்கிய செயல்பாட்டு குறிகாட்டிகள் (KPI) வளர்ச்சிப் பாதையில் இருந்தாலும், மக்களின் சுபிட்சக் குறியீடு (KHI) இன்னும் முழுமையான இலக்கை எட்டவில்லை. குறைகளை மட்டுமே பார்க்காமல், முன்னேற்றத்திற்கான வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அரசாங்கம் வழங்கும் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமானவை; அவற்றைச் சரியாகப் பயன்படுத்தி இந்தியச் சமூகம் மேலோங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

​மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தலைவர் சேவைச் செம்மல் தனேஷ் பாசில் பேசுகையில், இந்திய இளைஞர்களைத் தேசிய அளவிலான இத்தகைய முகாம்களில் ஒருங்கிணைப்பது ஒரு சவாலான காரியம் என்றும், அதை ஒரு நல்வாய்ப்பாகக் கருதி இம்முகாமைத் தேசியத்துவக் கழகத்துடன் இணைந்து நடத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு 720 இளைஞர்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 930 இந்திய இளைஞர்களுக்கு இக்கழகம் வாய்ப்புகளை வழங்கியுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

​இத்திட்டத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த பிரவின் ராமகிருஷ்ணன் அவர்கள், முகாமின் ஒவ்வொரு அங்கத்தையும் நுணுக்கமாகத் திட்டமிட்டு வழிநடத்தினார்.

இளைஞர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்துவதையும், நாட்டின் மீதான பற்றை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த முகாம், அவரது தலைமையில் வெற்றிகரமாக நிறைவுற்றது.

கோலாலம்பூர், மார்ச் 16-

நம் நாட்டில் பல ஆண்டுகளாக மேடை நாடகம் போடப் படவில்லை. அந்த குறையை தீர்க்கும் வண்ணமாக, மேடைக்கு மேடை அரசியல் நாடகத்தை நடத்தி நடிகர் திலக்கத்தை மிஞ்சும் அளவிற்கு கை வண்ணத்தை காட்டி வருகின்றனர் அரசியல்வாதிகள்.

குறிப்பாக அரசாங்கத்தில் இருக்கும் ஜால்ரா அரசியல்வாதிகளுக்கு ஆஸ்கர் விருது வழங்கலாம்.

நாட்டில் பிரச்சினை செய்யும் 4 நபர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று எத்தனை போலீஸ் புகார் செய்து மக்கள் நாட்டு சட்டத்தை மதித்து இந்த அரசாங்கத்திற்கு தெரிய படுத்தினார்கள். அப்போது கண் இருந்தும் குருடராகவும் காது இருந்தும் செவுடராகவும்  வாய் இருந்தும் உமையாகவும் அரசாங்க நாற்காலியை அலங்கரித்த  இந்திய அரசியல் தலைவர்கள் இப்போதுதான் அருவை சிகிச்சை முடித்தார்கள் போல.. நமக்கே ஆச்சரியம் வரும் அளவில் இரண்டு தினங்களாக பல அறிக்கை. இவர்களுக்கு பேச வருமா? காது கேட்க தொடங்கி விட்டதா? இந்தியர்கள் பக்கம் பார்வை தெரிகிறதா என்று பார்த்தால்...

பூனை புலியான கதைக்கு விடை கிடைத்தது. நாட்டில் சர்ச்சை ஏற்படுத்திய இருவர் நாட்டில் இல்லை. உடனே பூனை புலியாக மாரி மியாவ் மியாவ் என்று கத்தி வருகிறது.

இந்த பூனைகள் தான் இந்திய சமுதாயத்தை அமைதியாக இருக்க சொன்ன பூனைகள்.  இப்போது திடீர் என புலியாக மாரி மீண்டும் அதே பூனை சத்தத்தை கொடுத்து தங்களை புலி போல் காட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்த இரு சர்ச்சை குறிய நபர் இந்த நாட்டில் இருந்து செய்த நடவடிக்கை  பார்த்து  கண்டு காணாமல் இருந்த இந்த பூனைகள், நமக்கு எதுக்கு பா வம்பு  நாம் பெரும்பான்மையான சமுதாயத்தை பகைத்து கொள்ள வேண்டாம் என்று வாயை பொத்திக்கொண்டிருந்த கூட்டம்.

இரு தனி நபரை அமைச்சரவையில் பேசி நடவடிக்கை எடுக்கத் தெரியாத கையாளகாத கூட்டம் .

அந்த இருவர் இல்லாத போது,   ஒரு அமைச்சர் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் என கூச்சல் போடுவது என்ன..  இன்னொரு துணை அமைச்சர் அவர் பதவி எடுத்ததில் இருந்து அவரை  இப்போது தான் பார்க்கிறோம்.
போலீஸ் படை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது விரைந்து கைது செய்வார்கள் என்று இவர் ஒரு பக்கம் கூச்சல்.

திருசுழத்தை மிதித்து இந்த நாட்டில் தான் அந்த நபர் இருந்தார். நீங்கள் எல்லாம் வாயை திறக்கவே இல்லையே.. இப்போது எப்படி உங்களுக்கு பேச்சு வந்தது என்ற  ஆச்சரியத்தில் மக்கள் உள்ளனர்.

மக்களே இந்த ஆட்சி எப்படி உள்ளது என்றால் முதல்வன் படத்தில் வரும் அரங்கநாதன் அரசியல் ஆட்சி தான் இவர்கள் ஆட்சியும்.

இவர்கள்  4 நாற்காலி கால்களை நம்பி ஆட்சி  நடத்துகிறார்கள். அதில் ஒரு கால் உடைந்தாலும் ஆட்சி கவிழ்ந்து விடும்... ஆகையால்  இவர்கள் வேடிக்கை மட்டும் தான் பார்பார்கள்.

அவர்களே அடித்து கொண்டு  ஆவர்களே சமாதானம் ஆகட்டும்..  நாம் அமைதியாக வேடிக்கை பார்ப்போம் என்பதே இவர்களின் நிலை கடமைக்கு சில கண்துடைப்பு நடக்கும் அவ்வளவு தான்.

இவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று  இன்னுமா சமுதாயம் நம்புகிறது... ?

பூனை புலியாகி விட்டது என்று ஆச்சரியம் வேண்டாம் மக்களே இன்னொரு நாடகம் அரங்கேற்றம் செய்யப்படுகிறது அரசியல் நடிகர் திலகங்கள் நடிப்பு போட்டியில் கலம் இறங்கியுள்ளனர்..

வேடிக்கை மட்டும் பாருங்கள், இந்த பூனை சத்ததில் கடுகு அளவு கூட பிரோஜனம் இல்லை..

-வெற்றி  விக்டர்

உலு சிலாங்கூர், மார்ச் 15
அரசியல் எல்லைகளைத் தாண்டி மருத்துவத் தொண்டின் மூலம் சமூகத்தின் பேராதரவைப் பெற்றுவரும் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன், கடந்த வெள்ளிக்கிழமை சமத்துவ நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தி அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றார்.


நோன்பு மாதத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக இணைந்து நோன்பு துறப்பில் கலந்து கொள்ள வேண்டும்; அதில் நமது ஒற்றுமை பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்தார்.

விருந்தோம்பலுடன் இலக்கிய நிகழ்ச்சியும் சமூக நலத்திட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ரவாங், கோல குபு பாரு, பாதாங் காளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியதுடன், திருக்குர்ஆன் நூலையும் வழங்கி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் டாக்டர் சத்ய பிரகாஷ்.


அதேபோல் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பௌத்த சமய நூல்கள், கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பைபிள், இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பகவத் கீதை ஆகியவற்றையும் அன்பளிப்பாக வழங்கினார்.


இதன் மூலம் உலு சிலாங்கூர் மக்கள் அனைத்து சமயங்களையும் கலாச்சாரங்களையும் மதித்து, ஒற்றுமையை விரும்பும் மக்கள் என்பதை சிலர் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


மேலும், யார் எவ்வாறு கபடநாடகம் ஆடியாலும் மலேசியர்களின் ஒற்றுமையை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று டாக்டர் சத்ய பிரகாஷ் தெரிவித்தார்.

கோலாலம்பூர், மார்ச் 15
30 ஆண்டுகளாக இந்த நாட்டில் பல சமூக மக்களுக்கு உதவி செய்து வரும் கெபிமா இயக்கம், 27-வது முறையாக நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்கள் மற்றும் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புகளும் உணவுப் பொருட்களும் வழங்கியது. இந்த நிகழ்ச்சி நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.


இந்த நாட்டின் மக்கள் பெருநாள் காலங்களில் சந்தோஷமாகவும் ஒற்றுமையுடனும் பெருநாளைக் கொண்டாடும் வகையில் கெபிமா கடந்த 27 ஆண்டுகளாக இந்த உதவியை செய்து வருவதாக, கெபிமாவின் தோற்றுநர் ஜனாப் முகமது பின் காதிர் அலி தெரிவித்தார்.


சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்களை பார்த்து மிகவும் வருத்தம் அடைவதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவின் அடையாளமே பல்லின மக்களின் சமயத்தையும் கலாச்சாரத்தையும் மதித்து ஒற்றுமையாக வாழும் நாடு என்பதே என்று அவர் குறிப்பிட்டார்.


இந்த ஒற்றுமையை கட்டிக் காக்க நம் முன்னோர்கள் செய்த தியாகங்களும் நடவடிக்கைகளும் சில மதவெறி நபர்களால் ஒரு நொடியில் சிதைந்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.


இப்போதே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் இந்த நாட்டின் அடையாளமும் அமைதியும் பாதிக்கப்படும் என மூத்த சமூக சேவகரான ஜனாப் முகமது பின் காதிர் அலி கவலை தெரிவித்தார்.
அதே நேரத்தில் இஸ்ரேல்–அமெரிக்கா–ஈரான் மோதலால் பல நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சாணக்கியமான முன்னேற்பாடுகளை செய்து, அதே நேரத்தில் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை தாம் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.


அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்ததும், நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்ச்சிகளை ரத்து செய்ததும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இருப்பு நிலையை சரியாக பராமரித்து வருவதும் பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் டத்தோ வீர நைனா முகமாட் பின் சுல்தான் அப்துல் காதிர், முகமாட் பின் அப்துல் காதிர், டத்தோ ஹாஜி ஹிஷாமுடீன், டான் ஸ்ரீ உபையத்துல்லா, டத்தோ ஹாஜி டாக்டர் சையட் இப்ராஹிம், டத்தோ சேக் ஜமீல், அலி சாஜாஹான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மேலும், கெபிமா தலைவர் முகமட் இப்ராஹிம் தலைமையில் சங்கம் சிறப்பாக செயல்பட்டு பல புதிய சிந்தனைகளை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது என அவர்கள் இப்ராஹிம் அவர்களை பாராட்டினர்.


செய்தி : வெற்றி விக்டர்

பிரிஸ்பேன், மார்ச் 15-
பிரிஸ்பேனில் நடைபெற்ற 2026 ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் மலேசியாவின் தேசிய ஸ்குவாஷ் நட்சத்திரமான சி. சிவசங்கரி பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்று 13 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நிபுணத்துவம் பெற்ற ஸ்குவாஷ் சங்கம் (PSA) இந்த  தங்க நிலை போட்டியின்  தொடரில் முதல் தரவரிசை பெற்றிருந்த சிவசங்கரி, இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஏழாம் தரவரிசை வீராங்கனை மரினா ஸ்டெஃபனோனியை 3-0 (11-7, 11-4, 11-8) என்ற கணக்கில் வென்றார்.

பிரிஸ்பேனில் உள்ள சவுத் பேங்க் பியாச்ஜாவில் நடைபெற்ற இந்தப் போட்டி வெறும் 28 நிமிடங்களில் முடிவடைந்தது.

இந்த வெற்றி, கடந்த ஆண்டு பிப்ரவரியில் 'சின்சினாட்டி கேய்னர் கப்' போட்டியில் எகிப்தின் அமாண்டா சொபியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்ற பிறகு கிடைக்கப்பட்ட சிவசங்கரியின் முதல் பட்டமாகும்.

இதற்கு முன் நடைபெற்ற அரையிறுதியில், 27 வயதான சிவசங்கரி பெல்ஜியத்தின் நான்காம் தரவரிசை வீராங்கனையான நேலே கிலிஸை என்பவரை 11-8, 13-11, 11-4 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

கோலாலம்பூர், மார்ச் 15-
சமீபகாலமாக ஒரு சில தரப்பினரால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் இன - மத ரீதியிலான தூண்டல் நடவடிக்கைகள், பொதுப் பாதுகாப்புக்கும் நாட்டின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இத்தகைய சூழலில், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் வகையிலான இச்செயல்களை ஒடுக்க அரசாங்கம் எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளை மலேசிய இந்தியச் சமூக அமைப்புகள் ஒருமனதாக வரவேற்றுப் பாராட்டியுள்ளன.

முன்னதாக, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் இத்தகைய தூண்டுதல் ஏஜெண்டுகளின் செயல்களைக் கடுமையாகச் சாடியதோடு, நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய, இப்பிரச்சினையை அமைச்சரவைக் கூட்டத்திற்கும் கொண்டு சென்றார்.

அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு எதிராக, அரசாங்கம் அரச மலேசிய போலீஸ் படையின் மூலம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியதற்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்குப் பல்வேறு இந்திய வணிகச் சங்கங்கள் தங்களது நன்றியையும் பாராட்டையும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.

இது குறித்து மலேசிய இந்திய வர்த்தக, தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் - மைக்கி (MAICCI) தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் கூறுகையில், பிரதமர் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் ‘மலேசியா மடாணி’ கொள்கையின் கீழ் இந்தியச் சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் தெளிவான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது என்றார்.

தூண்டுதல் ஏஜெண்டுகளைக் கைது செய்து தண்டிப்பதன் மூலம், இந்தியச் சமூகத்தின் குரலுக்கு அரசாங்கம் மதிப்பளிப்பதுடன் பல்லின சமூக அமைதியைப் பேணுவதில் தனது உறுதியை நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக, தொழில்துறை சங்கத்தின் - மிம்காய்ன் (MIMCOIN) தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் பி.வி. அப்து, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணும் அரசாங்கத்தின் முயற்சிக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

மலேசியா சுதந்திரம் அடைந்தது முதல் பல தசாப்தங்களாகப் பல்வேறு இன மக்கள் இணக்கமாக வாழ்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் தனித்துவமான ஒற்றுமையைச் சிதைக்க முயலும் எவருக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

அதேபோல், கோலாலம்பூர் - சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழில்துறை சங்கத்தின் (KLSICCI) தலைவர் நிவாஸ் ராகவன், இந்திய வணிகச் சமூகம் அரசாங்கத்துடன் இணைந்து அமைதியைப் பாதுகாக்கும் என்றும், எவ்விதமான இன-மதத் தூண்டல்களையும் நிராகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களால் உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் இருக்கும் இச்சமயத்தில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தின.

இனங்களுக்கிடையிலான இணக்கமான உறவே நாட்டின் பொருளாதாரத் தாரக மந்திரம் என்றும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெறவும் வணிக வளர்ச்சியை உறுதி செய்யவும் அமைதியான சூழல் அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கிடையில், மார்ச் 14 அன்று போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறுகையில், ஜம்ரி வினோத் - தமீம் தஹ்ரி ஆகிய இரு நபர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் 505(பி) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது அவ்விருவரும் தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யத் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஷா ஆலம், மார்ச் 14-

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சதுரங்கப் போட்டியில் 548 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சிலாங்கூர் மாநில தொடர்புக் குழு, சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், எம்ஜஇடி, ஏம்ஸ்ட் ஆகிய இணைந்து இந்த சதுரங்கப் போட்டியை நடத்தினர்.

மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் சிறப்பான விளையாட்டு இதுவாகும். 

நம் மாணவர்கள் இந்த விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளது இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை வெளிப்படுத்துகிறது.

நம் சிந்தனை மட்டுமல்லாமல் எதிரியின் சிந்தனையையும் தெரிந்து கொள்ளும் ஆட்டம் இதுவாகும் என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த போட்டி நிகழ்ச்சியில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர் டத்தோ முருகையா, சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ ஐயங்கர் உட்பட மஇகாவினரும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

ஷா ஆலம், மார்ச் 14-
நாட்டில் தற்போது நிகழ்ந்து வரும் ஆலய பிரச்சினைகள் தொடர்பில் அரசியல் நடத்து நோக்கம் மஇகாவுக்கு இல்லை என்றும் இந்த பிரச்சினையை களைய மலேசிய இந்து சங்கம், மஹிமா ஆகியவற்றுடன் இணைந்து மஇகா செயல்படும் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஆலயங்களை கொண்டு அரசியல் நடத்தியவர்கள் உண்டு.  ஆனால் அந்த பாணி எங்களுக்கு புறம்பானதாகும்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு நான் பிரதமரை சந்தித்தேன். சுமார் ஒன்றரை மணிநேரம் அவருடன் கலந்துரையாடினேன். ஆலய விவகாரம் உட்பட சமுதாயம், அரசியல் ஆகியவற்றை பற்றி பேசினேன். முக்கியமாக தற்போது சர்ச்சையாக உள்ள ஆலய விவகாரம் தொடர்பில் பேசியதாக டான்ஸ்ரீ கூறினார்.

நம் தெய்வங்களை அவமானம் படுத்துவது சரியல்ல. அனைத்து அமைப்புகளும் மலேசிய இந்து சங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தை நாங்கள் முன்னெடுத்தால் அது அரசியல் ஆகிவிடும். அதனால் இந்த பிரச்சினையை பெரியதாக ஆக்க நாங்கள் விரும்பவில்லை. இதனை மலேசிய இந்து சங்கம் முன்னெடுத்தால் சமய பிரச்சினையாகவே இருந்துவிடும். ஒன்றிணைந்து அனைவரும் இந்த பிரச்சினையை களைவோம் என்றார் அவர்.

கோலாலம்பூர்,மார்ச் 12-

எசான் வர்த்தக குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்வதாக அதன் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமிட் கூறினார்.

அவ்வகையில் இன்று சிகாம்புட்டில் 200 பேருக்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தலைமையில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நோன்பு பெருநாளை முன்னிட்டு எசான் வர்த்தக குழுமம் ரமலான் உதவிகளை வழங்கி வருகிறது.

இவ்வாண்டும் கிட்டத்தட்ட 5,000 பேருக்கு இந்த உதவிகளை எசான் வழங்கியுள்ளது.

வசதிக் குறைந்தவர்கள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

அமைச்சர் இவ்விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சி என டத்தோ அப்துல் அமிட் தெரிவித்தார்.

குறிப்பாக இவ்விழா கூட்டரசுப் பிரதேச அறவாரியம் உட்பட பல அமைப்புகளுடன் நடத்தப்பட்டது.

அமைச்சர் ஹன்னா இயோ துடிப்புமிக்க அமைச்சராக உள்ளார்.

அவரின் வருகை கூட்டரசுப் பிரதேசத்திற்கு மேலும் உருமாற்றத்தை கொண்டு வரும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

பாங்கி, மார்ச் 12 - 

மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) இந்திய மாணவர் பிரதிநிதி மன்றம் (PMI UKM) மற்றும் UKM கபடி கழகம் இணைந்து “மாவீரன் 3.0” எனப்படும் இடையக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விளையாட்டு போட்டி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் கபடி, கால்பந்து, பூப்பந்து போன்ற முக்கிய விளையாட்டுகள் நடைப்பெறவுள்ளதாக இந்திய மாணவர் பிரதிநதி மன்றத்தின் தலைவர் கீர்த்திகன் மகாலிஙகம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதுடன், விளையாட்டு மனப்பான்மை மற்றும் ஆரோக்கியமான போட்டி உணர்வை வளர்ப்பதே இவ்விளையாட்டு போட்டியின் முக்கிய நோக்கமாகும்.

மலேசியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ள இந்த பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வை சிறப்பாக நடத்த நிதி ஆதரவும் அனுசரணையும் மிகவும் அவசியமாக உள்ளது.

எனவே, எங்கள் முயற்சிக்கு தங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக அவர் சொன்னார்.

மேல்விவரங்களுக்கு 014-6070331 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.


கோலாலம்பூர், மார்ச் 12-
மலேசியா ரிசைக்ளர்ஸ் அசோசியேஷன் (MRA), நாட்டின் மறுசுழற்சி (recycling) துறை எதிர்கொண்டு வரும் பல்வேறு சவால்கள் குறித்து விவாதிக்கத் தொழில் துறை பிரதிநிதிகளைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

MRA தலைவர் டத்தோ ஜோ சரவணன் கூறுகையில், அந்தச் சந்திப்பு தொழில் துறையினருக்கு முக்கியமான பல பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.

 குறிப்பாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் ஸ்கிராப் பொருட்கள் மற்றும் மின்னணு கழிவுகள் (e-waste) தொடர்பான பிரச்சினைகள், சட்டப்படி செயல்படும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை பாதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, இந்த பிரச்சினை நீண்ட காலமாகவே சட்டப்படி வணிகம் செய்து வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

“சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் ஸ்கிராப் பொருட்கள் மற்றும் e-waste பிரச்சினையை கையாள அரசாங்கம் உறுதி எடுத்திருப்பதை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

 இது விதிமுறைகளை பின்பற்றி செயல்படும் தொழில் துறை நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கும்,” என்று அவர்  தெரிவித்தார்.

மேலும், இந்த பிரச்சினையை அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது, பொறுப்புடன் வணிகம் நடத்தும் நிறுவனங்களைப் பாதுகாப்பதோடு, மலேசியாவின் மறுசுழற்சி துறை நிலையான முறையில் வளர உதவும் என்றும் அவர் கூறினார்.

அதுடன், தொழில் துறையினரின் கருத்துகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகக் கேட்க முனைந்திருப்பது, மறுசுழற்சி துறை வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நிர்வகிக்கப்படும் என்ற நம்பிக்கையை துறையில் செயல்படும் அனைவருக்கும் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


கோலாலம்பூர், மார்ச் 11-
பள்ளிவாசல்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லாமல் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் பயிற்சி மையங்களாகவும் மாற வேண்டும் என்று முக்மின் அமைப்பின் தலைவர் டத்தோ ஷாஹுல் அமிட் வலியுறுத்தினார்.

தொடர்ந்து வழங்கப்படும் பயிற்சிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற உதவும் என்றார்.

உதாரணத்திற்கு இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பயிற்சிகளும், பெண்களுக்கு தையல் பயிற்சி போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் இன்று கம்போங் பண்டான் பள்ளிவாசலில் நடைப்பெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்றைய நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 450 பேர் கலந்து கொண்டு நோன்பு துறந்தனர்.

முக்மின் அமைப்பின் ஏற்பாட்டில் நாடு தழுவிய அளவில் சுமார் 3,500 குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாள்  உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த கம்போங் பண்டான் பள்ளிவாசலுக்கு தனி சிறப்பு இருப்பதாகவும், இங்கு தினமும் சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


கோலாலம்பூர், மார்ச் 10-
 எஸ்பிஎம், எஸ்டிபிஎம், டிப்ளோமா அல்லது மெட்டிரிகுலேஷன் முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்பு தொடர்பான வழிகாட்டலை வழங்கும் நோக்கில் பினாங்கு மஇகா இளைஞர் பிரிவு “Jejak Menara Gading – மேற்படிப்பு பயணம்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

பல மாணவர்கள் UPU விண்ணப்ப முறையைப் பற்றிய சரியான தகவல் இல்லாமல் உயர்கல்வி வாய்ப்புகளை இழக்க நேரிடுவதால், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் UPU-க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, எதிர்காலத்திற்கு ஏற்ற படிப்புகளை தேர்வு செய்வது எப்படி, பல்கலைக்கழகங்களை சரியாக தேர்வு செய்வது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும், உயர்கல்வி அமைச்சை சேர்ந்த அதிகாரியும் கல்வித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவருமான பத்மராஜா செல்வராஜா மாணவர்களுக்கு நேரடியாக வழிகாட்ட உள்ளார்.

இந்த நிகழ்ச்சி இம்மாதம் மார்ச் 14ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை செபராங் ஜெயாவில் அமைந்துள்ள அருள்மிகு கருமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெறும்.

UPU தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாணவர்கள் உடன் கொண்டு வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாணவர்களின் உயர்கல்வி பயணத்தை சரியான பாதையில் தொடங்க உதவும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேல் விவரஙகளுக்கு 014-6318183 (நித்தியராஜன்), 016-4900605 (மஹாதேவன்), 019-9901424 (ரூபன்ராஜ்) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.


கோலாலம்பூர், மார்ச் 10-

அண்மையில் சமூக ஊடகங்கள் மற்றும் பொது இடங்களில் இன, மத உணர்வுகளைத் தூண்டும் நடவடிக்கைகள்  அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது. அவை நாட்டின் ஒற்றுமைக்கும் சமூக அமைதிக்கும் பாதகம் விளைவிக்க கூடும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தூண்டுதல் கருத்துகள் அல்லது உள்ளடக்கங்கள் மூலம் பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக அரச மலேசிய போலீஸ் துறை (PDRM) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தீங்கிழைக்கும் நோக்கத்துடன் மக்களைப் பிரிக்க முயலும் எந்தவித தூண்டுதல்களையும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. அதோடு நாட்டின் ஒற்றுமையை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சமூக ஒற்றுமையைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்ட்த்துறைத் தலைவர் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

1948-ஆம் ஆண்டு தூண்டுதல் சட்டம், குற்றச் சட்டம் பிரிவு 298A, 1998 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் பிரிவு 233, 2012 ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் (SOSMA) மற்றும் 1959 ஆம் ஆண்டின் குற்றத் தடுப்பு சட்டம் (POCA) உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சட்டங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்கும் பணியில் மலேசிய பல்லூடக ஆணையம் (SKMM) மேலும் தீவிரமாகவும் முனைப்புடனும் செயல்பட வேண்டும் என்றும், வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தாமதமாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இன அல்லது மத உணர்வுகளைத் தூண்டி நாட்டின் அமைதியைப் பாதிக்க முயலும் தரப்பினர்கள்,  அந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கும் சமூக ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையில், இன மற்றும் மத உணர்வுகள் தொடர்பான சிக்கல்களை முறையாகக் கையாள்வதற்காக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக இன்று மேலவையில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

அத்துடன், சமூகத்தில் எழும் உணர்வுப்பூர்வமான சிக்கல்களை முறையாக கண்காணிக்க சமூக உணர்வுப்பூர்வ சிக்கல்கள் ஆய்வு மையம் (PRISMA) என்ற தேசிய அளவிலான செயல்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த மையம் இ-செபாக்காட், ராக்கான் , தேசிய போலீஸ் படை மற்றும் தேசிய தொடர்பு பல்லூட ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தரவுகளை ஒருங்கிணைத்து, சமூகத்தில் உருவாகும் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து அரசாங்கம் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உதவும் என அவர் கூறினார்.

நாட்டின் ஒற்றுமை என்பது அனைவரின் பொறுப்பு. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பையும் பிளவையும் பரப்புவதற்கு இடமில்லை, என யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.


கோலாலம்பூர், மார்ச் 10-
பார்வையற்றோராகிய தங்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருக்கும்போது, ஒளிபடைத்த இரு விழிகள் கொண்டவர்களுக்கு அது இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது என்று மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் முன்னாள் மாணவரும் இந்நாள் ஆதரவாளருமான மகேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.

நேற்று 'விஸ்மா எம்ஏபி'-இல், பல இன மக்களுடன் ஒற்றுமையை நோன்பு துறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தபின், செய்தியாளர்களிடம் பேசிய பொழுது நாங்கள் ஒற்றுமையாக இருக்கும்போது ஏன் உங்களால் முடியாது என்று தற்பொழுது சமய சமூக சலசலப்பில் சிக்கித் தவிப்போரை நோக்கி 'தர்மம் தலைகாக்கும்' சமூக நல இயக்கத்தின் 
தலைவருமான மகேந்திரன் கேள்வியை எழுப்பினார்.

இப்போது நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; நாம் அனைவரும் மலேசியர்கள்.  இத்துணைக் காலமும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று நமக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள்.

இதைக் கேட்கும் போது மனது வலிக்கிறது. கண் பார்வை இழந்த நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

எங்களிடையே எந்த ஒரு பிரிவினை வாதமும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருக்கிறோம். அவரவர் மதத்தை மதிக்கிறோம். 

ஆனால் இன்று நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் பெரும் வேதனையாக இருக்கிறது. 

தர்மம் தலைகாக்கும் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று கண் பார்வையற்றோர் சங்கத்தின் மண்டபத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி  எளிமையாகவும் அதேவேளை பொருள் பொதிந்ததாகவும் நடைபெற்றது.

மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் கலந்து கொண்டனர். 

மலாயர், சீனர்,  தமிழர் என பல இனங்களைச் சேர்ந்த  பார்வையற்றோர் ஒற்றுமையாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கலைத்துறையைச் சேர்ந்த தண்டபாணியும் கலந்து கொண்டு இந்த ஒற்றுமையை நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தார்.


கோலாலம்பூர், மார்ச் 6– 
பல மதங்கள் மற்றும் பல இனங்கள் கொண்ட மலேசிய சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதில் மடானி அரசாங்கம் தோல்வியடைந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோகா பால மோகன்.

சமீபத்தில் சில பொறுப்பற்ற கும்பல் ஒரு இந்து கோவிலை இடிக்க பொதுவெளியில் மிரட்டல் விடுத்திருப்பது தேசிய அமைதிக்கும் ஒற்றுமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறினார்.

இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இது நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சவாலுக்கு உள்ளாக்கும் செயல். இத்தகைய கும்பல்களை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியவில்லையா? அல்லது இது நடைபெறுவதற்கு அவர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கும்பல் சமூக ஊடகங்கள் மற்றும் பொதுத் தளங்களில் மக்கள் ஒன்று கூடிக் கோவிலை இடிக்க தூண்டி வருவது, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233-ஐ வெளிப்படையாக மீறுவதாகவும், இதுவரை எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்தின் இந்த மௌனமும் செயலற்ற தன்மையும், அதிகாரம் வாய்ந்த யாரோ இந்த குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

சில நபர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் போல காட்சியளிப்பது கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பல இந்து கோவில்கள் காலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் மற்றும் பின்னர் ஜப்பான் நிர்வாகங்களின் அனுமதியுடன், மெர்டேகாவுக்கு முன்பே கட்டப்பட்டவை என்பதை அரசு நன்கு அறிந்திருக்கிறது என்றார்.

அந்த காலகட்டத்தில் நில ஆவணப்படுத்தும் முறைகள் இன்றையதைப்போல் இல்லாததால், நூற்றாண்டுக்கும் மேலாக வழிபாடு நடைபெற்று வரும் இடங்களை இப்போது ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தால் சட்டவிரோதம் எனக் கூறுவது வரலாற்று உண்மைகளை புறக்கணிப்பதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்து கோவில்கள் மற்றும் நில உரிமைகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைகளை தீர்ப்பது தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வழிபாட்டு இடத்தை இடிக்க மிரட்டுவது தண்டனைச் சட்டம் பிரிவு 295, 295A மற்றும் 506 ஆகியவற்றை தெளிவாக மீறும் குற்றச்செயலாகும் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் சில நபர்களுக்கு சட்டம் பொருந்தாதது போல தோன்றுவது இரட்டை தரநிலை அல்லது தெரிவு செய்யப்பட்ட சட்ட அமலாக்கம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.

சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டிய நிலையில், சில தலைவர்கள் சட்டம் மீறுபவர்களை ஊடகங்களின் மூலம் கூட்டத்தை ரத்து செய்யுமாறு வேண்டிக் கொள்வது வெட்கக்கேடானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தலைமை என்பது சட்டம் மீறுபவர்களை வேண்டிக் கொள்வது அல்ல; பயமோ பேதமோ இல்லாமல் சட்டத்தை அமல்படுத்துவதே உண்மையான தலைமை,” என்றார்.

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசியல் கண்ணாமூச்சி ஆட்டம் போதும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2007 ஆம் ஆண்டு போல மீண்டும் தெருக்களில் இறங்கி நீதியை கோர இந்திய சமூகம் விரும்பவில்லை என்றாலும், பொறுமையை பலவீனமாக கருதக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் சம்ரி வினோத், ஃபிர்தௌஸ் வோங், தமீம், சந்திரா உள்ளிட்ட அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் PPP வலியுறுத்துவதாக டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் தெரிவித்தார்.

இந்து சமூகத்தினர் சமத்துவமான சட்ட பாதுகாப்பை கோரி தெருக்களில் இறங்க வேண்டிய நிலை உருவாகும் முன்பே அதிகாரிகள் கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


கோலாலம்பூர்,மார்ச் 6-
கிள்ளான், மெரு காவல் நிலையத்தில் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்களிலும் சமூக ஊடக தளங்களிலும் பரவி வரும் சண்டை சம்பவத்தை மஇகா பணிப்படை (Briged MIC) மிகவும் கவலைக்கிடமாக எடுத்துக்கொண்டுள்ளதாக அதன் தலைவர் எண்ட்ரு டேவிட் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் சிலர் காவல் நிலைய வளாகத்துக்குள் தகராறு ஏற்படுத்தி சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்பில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தகவலின்படி, மூன்று பேர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தபோது, பின்னர் வந்த மற்றொரு குழுவினர் தகராறு ஏற்படுத்தி சண்டை தொடங்கியதாக கூறப்படுகிறது.

அந்தச் சண்டையில் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதுடன், காவல் நிலையத்தின் சில சொத்துகளும் சேதமடைந்துள்ளன.

காவல் நிலையம் போன்ற சட்ட அமலாக்க அமைப்புகளின் வளாகத்திலேயே வன்முறையில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும் என்று அவர் தெரிவித்தார். 

காவல் நிலையம் என்பது நாட்டின் சட்ட ஆட்சியின் மரியாதையையும் அதிகாரத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான இடமாகும். அதனை சவாலுக்கு உட்படுத்தும் எந்தச் செயல்பாடும் பொதுச் சமாதானத்திற்கே அச்சுறுத்தலாகும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் எந்தவித சமரசமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று MIC பிரிகேட் கோருவதாக அவர் சொன்னார்.

இத்தகைய சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், சட்டத்தை வெளிப்படையாக சவால் செய்யலாம் என்ற தவறான செய்தியை சமூகத்திற்கு அளிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், MIC பிரிகேட் தனது “குற்றத்துக்கு எதிரான தலைமுறை” (Generasi Anti Jenayah) முயற்சியின் மூலம் சட்டத்தை மதிக்கும் பண்பை சமூகத்தில் வலுப்படுத்தவும், இளைஞர்களை வன்முறை கலாச்சாரத்திலிருந்து விலக்கவும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

கோலாலம்பூர்,மார்ச்3-

2027-ஆம் ஆண்டு முதல் ஆறு வயதில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை அமல்படுத்தப்பட உள்ள நிலையில், ஐந்து வயது குழந்தைகளுக்குத் தரத்தை உள்ளடக்கிய கல்வி கிடைப்பதை உறுதி செய்ய நாடு முழுவதுமுள்ள 1,781 அரசின் பெர்பாடுவான் பாலர் பள்ளிகளின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. 

நாடாளுமன்றத்தில் செனட்டர் டத்தோ டாக்டர் ஹாஜி முஸ்தபா மூசா எழுப்பிய கேள்விக்குத் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர், யுனேஸ்வரன் ராமராஜ் இவ்வாறு பதிலளித்தார்.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு துறை (JPNIN) மூலம் இந்தப் பாலர் பள்ளிகளின் திறனைக் கட்டம் கட்டமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும், தேவைகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு பாலர் பள்ளியின் வகை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாணவர் சேர்க்கை திறன் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். 

கிடைக்கக் கூடிய இடங்களை முழுமையாகப் பயன்படுத்தி, உள்ளூர் தேவைக்கேற்ப மாணவர் சேர்க்கை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.

மேலும், சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்னணி, வளர்ச்சி நிலை மற்றும் கல்வி தேவைகள் உள்ளிட்ட முழுமையான சுயவிவரங்கள் உருவாக்கப்பட்டு, கல்வி அணுகுமுறை மேலும் உள்ளடக்கியதாகவும் சமூக தேவைகளுக்கு ஏற்பவும் வடிவமைக்கப்படுவதை அவர் உறுதிப்படுத்தினார். 

நீண்ட காலமாக, 2021–2030 கல்வி திட்டத்தின் கீழ் இந்தப் பாலர் பள்ளிகள் வலுப்படுத்தப்பட்டு, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நாட்டுப்பற்று மதிப்புகளை மேம்படுத்தும் முக்கிய கல்வி அமைப்பாகச் செயல்படுகின்றன என்பதையும் யுனேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.


கோலாலம்பூர், மார்ச் 3-
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள மலேசியர்களை பாதுகாப்புடன் மீட்க வெளிவிவகார அமைச்சகம் உடனடி மற்றும் தீர்மானமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் முற்போக்கு   கட்சியின் (பிபிபி) தேசிய இளைஞர் தலைவர் சத்தியா சுதாகரன்  வலியுறுத்தியுள்ளார்.
போர் நிகழும் பகுதியில் தங்கியுள்ள மலேசிய மாணவர்கள், தொழிலாளர்கள், யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு, நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பற்றிய  கவலைகளை எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச அவசரநிலைகளில், வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களை பாதுகாப்பது அரசின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

சர்வதேச அமைப்புகள் மற்றும் அண்டை நாடுகளுடன் ஒருங்கிணைந்து அவசர வெளியேற்ற மற்றும் மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக தனிப்பட்ட செயற்பாட்டு குழுவையும், 24 மணி நேர உதவி அழைப்புக்கான ஹாட்லைனையும் அமைக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள மலேசிய தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் வழியாக தொடர்ச்சியான மற்றும் தெளிவான தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசின் தெளிவான தகவல் மற்றும் அவசர நடவடிக்கை, அவர்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியர்களின் பாதுகாப்பும் நலனும் அரசியல் எல்லைகளை மீறிய ஒன்றாக இருக்க வேண்டும் என்றும், மனிதாபிமான ஒருங்கிணைப்பு முயற்சிகளில் பிபிபி இளைஞர் பிரிவு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

பாகான் டத்தோ, பிப்.27-

என் அரசியல்  மற்றும்  பொது வாழ்க்கையில் நான் எப்போதும் மக்களிடத்தில் பாகுபாடு பார்த்ததே இல்லை என டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட்  ஹமிடி  மனம் திறந்து பேசினார்.

இன்று தனது பாகான் டத்தோ  நாடாளுமன்ற தொகுதியில் 1,000 இந்திய  மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கிய  டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் இது என் கடமை என்றார்.

அதோடு என் பொது வாழ்க்கையில் நான் கடை பிடிக்கும் ஒரே விஷயம்  நான் இன மத பாகுபாடு பார்க்கமாட்டேன்.

என்னை பொறுத்தவரை, எனக்கு எல்லாரும் சமம். எல்லோருடைய உரிமையும் பாதுகாக்கப்பட  வேண்டும். அதோடு எல்லாருக்கும் அடிப்படை வசதி, தேவையான  உதவி கிடைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இந்திய சமுதாயத்தின் மீது எனக்கு  தனி அன்பும் மரியாதையும் உண்டு. அவர்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்றார் அவர்.

பாகான் டத்தோ, பிப்.27-
பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியிலுள்ள இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்த வட்டாரத்திலுள்ள 200 பாலர்பள்ளி மாணவர்களுக்கு வெ.20 ஆயிரம், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வெ.69,100 மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு வெ.28 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ்ப்பள்ளிகளை பிரதிநிதித்து அனைத்துலக போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அன்பளிப்புகளும் பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடரும் 10 இந்திய மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டன.

பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரும் துணைப் பிரதமடருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் இந்த அன்பளிப்புகளை எடுத்து வழங்கினார்.

மாணவர்களின் கல்வியின் மீது அக்கரை கொண்டு அவர் இந்த உதவியை மேற்கொண்டு வருகிறார். மேலும் இந்த தொகுதியிலுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்க வேண்டும் என்று தான் கூறியபோது, தொகுதியிலுள்ள பாலர்பள்ளிகளுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கும் நாம் உதவ வேண்டும் என்று கூறி இந்த உதவிகளை அவர் வழங்கியதாக அவரின் சிறப்பு அதிகாரி அர்வின் அப்பலசாமி தெரிவித்தார்.

கோலாலம்பூர், பிப் 26-

2025-ஆம் ஆண்டு தென்கிழக்காசிய (SEA Games) விளையாட்டு போட்டியில் மலேசிய கபடி அணி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்தச் சாதனையைத் தொடர்ந்து, மலேசிய கபடி சங்கத் தலைவர் பீட்டர், தேசிய கபடி அணியின் நிர்வாகி, கபடி வீரர்கள், பயிற்றுனர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களைத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். கபடி வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில் துணையமைச்சர் நற்சான்றிதழ்கள், நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

கபடி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும். அதனைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் நமது ஒவ்வொருவரின் கடமையாகும். இதற்காக கபடி விளையாட்டாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்றார் துணையமைச்சர்.

தற்போது பல இனங்கள், மொழிகள் மற்றும் கலாச்சார பின்னணியைக் கொண்ட இளைஞர்களை ஒரே மேடையில் இணைக்கும் திறன் கபடி விளையாட்டிற்கு இருப்பதாகவும், இது பரஸ்பர புரிதல், ஒற்றுமை மற்றும் நாட்டுப்பற்றை வளர்க்கும் வலுவான கருவியாகச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் கபடியைத் தொழில்முறை ரீதியில் மேம்படுத்த சிறப்பு வசதியுடன் கூடிய கபடி அரங்கம் அமைக்க வேண்டும் என்ற மலேசிய கபடி சங்கத்தின் கோரிக்கையைக் குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்கத் தாம் தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார்.

மேலும், கபடி விளையாட்டை இந்திய சமூகத்தைத் தாண்டி அனைத்து இனங்களிடமும் கொண்டு சேர்க்க சமூக ஊடகங்களை வலுவாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், அரசு தொடர்புடைய நிறுவனங்கள் (GLC) மற்றும் பொதுமக்கள் வழியாக நிதி ஆதரவைப் பெறும் முயற்சிகளை கபடி சங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, மலேசிய கபடி சங்கத் தலைவர் பீட்டர், தங்களின் சாதனைகளுக்கு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், கபடி வீரர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு அவர்களுக்குப் பெரும் ஊக்கமாக இருப்பதுடன், இது அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

கபடி தற்போது சீ, ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் நிலைகளில் இடம்பெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளிலும் கபடி இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர்,பிப்.26-

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தினர்களுக்கான வட்டார பொதுக்கூட்டம் மாநில வாரியாக நடைபெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் டத்தோ பா. சகாதேவன் அறிவிப்பாக அறிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில வட்டார பொதுக்கூட்டம் ஜாலான் மெங்கிபோல், குளுவாங், ஜோகூர் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தியர் சங்க மண்டபத்தில் 28.2.2026ம் தேதி சனிக்கிழமை 4.30 மணி அளவிலும்
மலாக்கா மாநில வட்டார பொதுக்கூட்டம் 1.3.2026ம் தேதி ஞாயிற்றுக்கிழமை KM-23, ஜாலான் பத்து 14, பெம்பான் மலாக்கா எனும் முகவரியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைப்பெறவுள்ளது.

பகாங்-கிளந்தான்-திரெங்கானு ஆகிய மாநிலங்களின் வட்டார பொதுக்கூட்டம் மார்ச் மாதம் 5ஆம் தேதி மாலை 4.30 மணிக்கும், கேமரன் மலை - கம்போங் ராஜா, புளுவேலி எனும் முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் நடைப்பெறும்.

பேரா வட்டார பொதுக்கூட்டம் 6.3.2026 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு லோட் எண்: ஜாலான் 4890 N, ஜாலான் கொம்ளக்ஸ் சுக்கான், ஈப்போ, பேராக் எனும் முகவரியில் அமைந்துள்ள (ஸ்டேடியம் பேரா அருகில்) மண்டபத்தில் நடைபெறும்.


தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் துணை சட்டவிதிகளின் பிரிவு 15ன் கீழ், 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் நாள் அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அங்கத்தினர்கள் மட்டுமே இந்த வட்டார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்பதும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகுதிகளை பெற்றுள்ள அங்கத்தினர்கள் தவறாமல் குறிப்பிட்ட தேதிகளில் வட்டார பொதுக்கூட்டத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் செயலாளரும் - நிர்வாக இயக்குநரும் டத்தோ பா. சகாதேவன் இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறார்.

(குறிப்பு: அங்கத்தினர்கள் மறக்காமல் தங்களது அடையாள அட்டையை உடன் கொண்டு வரவும்)

கோலாலம்பூர், பிப்.25-

நடந்து முடிந்த மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து குவாந்தான் உயர் நீதிமன்றத்தில் தற்போது சுமுகமான முடிவு கிடைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் அனைத்து பதவிகளுக்கும் போட்டிகளை நடுத்தும் வகையில் அந்த முடிவு கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னர் தலைவர் பதவியை தவிர்த்து அனைத்து பதவிகளுக்கும் போட்டி நடத்த முடிவு கிடைத்தது. அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்பட்டது. தற்போது வழக்கு முடிவில் அனைத்து பதவிகளுக்கும் போட்டி நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் தேர்தலில் போட்டியிடும் இரு தரப்புகளும் தற்போது தலையிட முடியாது. மாறாக இந்த தேர்தலை பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைமையில் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியப்படுகிறது.

கடந்த 23ஆம் தேதி ஜூன் மாதம் 2024ஆம் ஆண்டு  ஆலயத்தின் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால்  நடத்தப்பட்ட தேர்தலில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது.

தற்போது அதற்கு   நல்ல முடிவு கிடைத்துள்ளதாக நம்புவோம்.

குவாந்தான் முகாமில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழந்த 22 வயது ராணுவ வீரர் ட்ரூப்பர் கே. இந்திரன் மரணம் தொடர்பாக இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஇகா பினாங்கு மாநில தலைவர் ஜே. தினகரன், ஆரம்ப அறிக்கையில் வெளிப்புற காயங்கள் இல்லை என கூறப்பட்டாலும், உட்புற காயங்கள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

குடும்பத்தினரின் சந்தேகத்தை முன்னிட்டு, உண்மையான மரண காரணம் தெரிய இரண்டாவது  பிரேத பரிசோதனை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், பிப்.19-
மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து மஇகா பணிப்படை (Briged MIC) கடும் கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை புகாரளிக்கப்பட்டுள்ளதையும், அதற்கு உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் மஇகா பணிப்படையின் தலைவர் ஆண்ட்ரு டேவிட் சுட்டிக்காட்டினார்.

பல இன, பல மத மக்கள் இணைந்து வாழும் நம் நாட்டில், மதத்தை எந்த வடிவிலும் அதுவும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவமதிப்பது நாட்டின் நீண்டகால ஒற்றுமைக்கு களங்கம் விளைவிப்பதாக அவர் தெரிவித்தார்.

"குற்றமற்ற தலைமுறை” (Generasi Anti Jenayah) என்ற கொள்கையை முன்வைக்கும் இயக்கமாக, 3R (மதம், இனம், அரசியல் அமைப்பு) தொடர்பான விடயங்களில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது மிகுந்த பொறுப்பற்ற செயல் என்றும், இது இனங்களுக்கிடையேயான பதற்றத்தை தூண்டி, நாட்டின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடியது என்றும் அவர் எச்சரித்தார்.

தொழில்நுட்பம் மக்களை ஒன்றிணைக்கும் கருவியாக இருக்க வேண்டும்; வெறுப்பை விதைக்கும் ஆயுதமாக அல்ல. மலேசிய குடிமக்களாக இருந்தாலும், வெளிநாட்டு பயணிகளாக இருந்தாலும், அனைவரும் நாட்டின் மத மற்றும் கலாசார உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் அவர்  வலியுறுத்தினார்.

இன, மத அடிப்படையிலான தூண்டுதல்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஒழுக்கப்பொறுப்பற்ற செயல் என்றும், எதிர்கால தலைமுறையின் நலனுக்காக பரஸ்பர மரியாதையை காக்க வேண்டும்.

நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அரசு தரப்பு உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆண்ட்ரு டேவிட் கோரிக்கை விடுத்தார்.

ஜோகூர்,பிப் 19-
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல சிக்கல்கள், கஷ்டங்கள் , சவால்கள் வந்து போகும், அந்த அனைத்து இன்னல்களையும்  கடந்து மன நிம்மதியை தேடும் பயணத்தில் பலர் இருப்பார்கள். அந்த வகையில் மன நிம்மதியை அடிப்படையாக கொண்டு ஈப்போ தாவீதின் கூடாரத்தின் பேராயர் டாக்டர் மேனன் மானசா வரும் 21 ஆம் தேதியன்று "சுகமளிக்கும் குருசேட்" எனும் நிகழ்வினை ஜோகூர் ஸ்கூடாயில் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த அற்புத நிகழ்வு இங்குள்ள *குட் ஹோப் தங்கும் விடுதியில்* இரவு 7 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஈப்போ, தாவிதின் கூடாரத்தில் நடைபெற்ற உலக புகழ்பெற்ற பாடகர் பென்னி ஜோன்‌ ஜோசப் இசை நிகழ்விற்கு பின்னர்‌ பேராயர் டாக்டர் மேனன் மானசா  கூறினார்.

"குருசேட்" என்பது சிலுவைப்‌போர் அல்லது அறப்போர் என்று சொல்லலாம்.

மன நிம்மதியை அற வழியில் இயேசு கிறிஸ்துவின் வழிக்காட்டலில் கொண்டு வரும் இந்த "சுகமளிக்கும்" நிகழ்வில் அனைவரும் வந்து கலந்து கொள்ளலாம்.

இது தொடர்பான விவரங்கள் அறிய 01112409932 சகோதரி புஸ்பா என்பவரை கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் அழைக்கலாம் என்றார்.

தொடர்ந்து இன்று தேவாலயமே அதிரும் படியாக தந்தை இயேசு‌ பற்றி பாடிய‌‌ பென்னிக்கு அவர் பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.

பாடல்கள் மத்தியில் தேவன் தம் வாழ்க்கையில் ஏற்படுத்திய சிறந்த மாற்றங்களை பென்னி ஜோன் ஜோசப் எடுத்துரைத்து அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை மூட்டியது.

ஜெபம், வழிப்பாடு தவிர்த்து பல நிகழ்வுகளையும் ஈப்போ, தாவிதின் கூடாரம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர் பிப் 15-
அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கும் விவகாரம் தொடர்பாக லெசென்ஸ் பெற்ற ஏஜென்சிகளை அழைத்து மனிதவள அமைச்சு ஒரு சுமூகமான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று Persatuan Agensi Pekerjaan Malaysia  கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டப்பூர்வமாக அந்நியத் தொழிலாளர்கள் தருவிக்கும் லெசென்ஸ் பெற்ற மலேசிய ஏஜென்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வேண்டும்.

நாங்கள் முறையாக பதிவு பெற்ற ஏஜென்சிகள்.

நாங்கள் செய்யும் வேலைக்கு மட்டுமே ஊதியம் வாங்குகிறோம்.

வெளிநாட்டு ஏஜென்சிகள் தொழிலாளர்களிடம் 20,000 வெள்ளி பணத்தை வாங்கிக் கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
இதனால் பணத்தை கொடுத்து தொழிலாளர்கள் அவதி படுகிறார்கள்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர் ஏஜென்சிகளுக்கு அனுமதி வழங்க  வேண்டும்.

நாங்கள் அரசாங்கத்திற்கு உதவ தயாராக இருக்கிறோம்.

எவ்வித முறைகேடு இல்லாமல் அந்நியத் தொழிலாளர்களை சட்டப் பூர்வமாக நாட்டிற்கு தருவிக்கும் அனுமதியை பதிவு செய்யப்பட்ட ஏஜென்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று Persatuan Agensi Pekerjaan Malaysia உதவித் தலைவர் சுரேஷ் டான் தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதில் எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

இந்த தருணத்தில்
அந்நியத் தொழிலாளர்களை தருவிக்கும் மூன்றாம் தரப்பு - இடைத்தரகர்கள் யார் என்பதை மனிதவள அமைச்சு தெளிவு படுத்த வேண்டும்.

நேப்பாளம் மற்றும் வங்காள தேச தொழிலாளர்களை நாட்டிற்கு தருவிக்கு தலா 20,000 வெள்ளி வாங்குவது  ஏஜென்சிகள் நாங்கள் அல்ல.

ஆகவே இந்த விவகாரத்திற்கு நல்ல முறையில் தீர்வு காண மனிதவள அமைச்சை சந்தித்து கலந்துரையாட தயாராக இருக்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் Persatuan Agensi Pekerjaan Malaysia ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ பாகோ சிவா கலந்து கொண்டார்.

நாட்டில் பல துறைகளில் குறிப்பாக சிறுதொழில் வியாபாரம் செய்யும் சிறு வணிகர்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இவர்களுக்கு உதவ சங்கம் தயாராக இருக்கிறோம்.

இருப்பினும் அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்கு வரவழைக்க சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தை பிறக்கும் முதல் நாளே தமிழர் புத்தாண்டு என மலேசிய திராவிட கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் கூறினார்.

இந்த நாளை தமிழர்கள் அனைவரும் குடும்பத்தாருடன் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

தமிழ் புத்தாண்டு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தாலும் தமிழர்களாகிய நாம் தை முதல் நாளேயே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி அதனை அடுத்த தலைமுறையினர் வரையில் கொண்டுச் சேர்க்க  வேண்டும். எதற்காகவும் யாருக்காகவும் இதனை நாம் விட்டு கொடுக்க கூடாது.

குறிப்பாக, தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த மலேசியர்களின் விழாவாக கொண்டாடப்பட வேண்டும். மூவினத்தவர்களும் பொங்கல் வைத்து மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்க வேண்டும் என மலேசிய திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவில் பேசிய பொன்வாசகம் வலியுறுத்தினார்.

ஷா ஆலம் டாலியா மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவை அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஜி அஸ்லி பின் யூசோப் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன் சிறுவர்களுக்கென சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், பொங்கல் திருநாளன்று பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக கழகம் முன்னெடுத்து வந்த தீர்மானம் மீண்டும் இவ்விழா மூலம் கொண்டு வரப்பட்டது.

இவ்விழாவில் கோலாலம்பூர் உட்பட கெடா, பினாங்கு, பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களில் இருந்து 250க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிரம்பான், பிப்.12-
நானோ அறிவியல், நானோ தொழில்நுட்பம் மற்றும் நானோ பொறியியல் துறைகளில் உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை ஒன்றிணைக்கும் 7-வது மலேசியா–ஜப்பான் அனைத்துலக மாநாடு (MJIC 2026), 2026 ஆம் ஆண்டு சிரம்பானில் அமைந்துள்ள ராயல் சுலான் ஹோட்டலில் நடைபெற்றது.

இம்மாநாடு நானோ அளவிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்ளும் முக்கிய அனைத்துலக தளமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MJIC 2026 மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில், மாணவர்கள் உருவாக்கிய பல்வேறு சமூக மற்றும் தொழில்நுட்ப நோக்கமுடைய திட்டங்கள் பெரும் கவனம் பெற்றன. இதில் சிறந்த புதுமை திட்டங்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அவ்வகையில், ஏம்ஸ்ட்  பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் இதில் பங்கேற்று மொத்தம் ஆறு குழுக்கள் தங்கப்பதக்கங்களையும் வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக, “HeatMateX” என்ற திட்டம் தங்கப் பதக்கம், இப்புத்தாக்கப் போட்டியின் சிறப்பு பரிசையும் வென்றது. இந்த திட்டத்தை Yogini A/P Malarvannan (தலைவர்), Kirshavina A/P Kumar, Yeoh Jia Ying, Wong Yu Jue, Gaytriambal A/P Sivakumar மற்றும் Voon Qian Hui ஆகியோர் உருவாக்கினர். அதோடு ஐந்து குழுக்கள் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றன.

இந்த மாநாட்டை மலேசியாவின் Universiti Teknologi MARA (UiTM) பல்கலைக்கழகத்தின் Institute of Science அமைப்பு ஏற்பாடு செய்தது. மேலும், UiTM-இன் Faculty of Applied Sciences, ஜப்பானின் Nagoya Institute of Technology, இந்தோனேசியாவின் Universitas Brawijaya, ஜப்பானின் National Institute of Technology Kagawa College மற்றும் Tokuyama College, மலேசியாவின் National Nanotechnology Centre (MOSTI) மற்றும் Malaysia Nanotechnology Association ஆகியவை இணைந்து மாநாட்டிற்கு ஆதரவு வழங்கின.

இந்த மாநாடு உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும் வகையில், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை இடையிலான இணைப்பை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நெகரி செம்பிலான் மாநிலத்தில் மிகவும் பிரபலமான திருத்தலமான ரந்தாவ் ஸ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தில் மகா சிவராத்திரி வழிபாடு வரும் பிப்ரவரி 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாலை 6 மணிக்கு ரத ஊர்வலம்  நடத்தப்படுவதாகவும் அதோடு  முதல் பூஜை இரவு 8 மணிக்கும் இரண்டாவது பூஜை நள்ளிரவு 12 மணிக்கும் 3ஆவது பூஜை அதிகாலை 3 மணிக்கும் 4ஆவது பூஜை காலை 5 மணிக்கும் நடைப்பெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்தனர்.

வட்டார மக்கள் இந்த பூஜையில் கலந்துகொள்ள  வேண்டும் என ஆலய நிர்வாகம் பக்தர்களை அன்போடு அழைக்கின்றனர்.

பூச்சோங், பிப்.7-

புத்ராஜெயா கபடி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பூச்சோங்கிலுள்ள சுபாங் ஜெயா நகராண்மைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற 23 வயதிற்கு கீழ்பட்ட ஆண்களுக்கான போட்டியில் 8 அணிகள் பங்குக் கொண்டன.

காலை முதல் நடைப்பெற்ற இந்த போட்டியில் 112 இந்திய இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் Red Giant மற்றும் BL KL அணிகள் களம் கண்டன. இரு அணிகளின் விளையாட்டாளர்கள் அபார விளையாட்டை வெளிப்படுத்தினர்.

இறுதியில் இந்த போட்டியின் வெற்றிக் கிண்ணத்தையும் ரொக்கப் பரிசையும் Red Giant அணி வென்றது.

இதற்கிடையில் இரண்டாவது நிலையில் BL KL அணி இரண்டாவது நிலையில் வென்றது. மூன்றாவது இடத்தில் இரு அணிகள் UNITEN மற்றும் Black Panter வெற்றிப் பெற்றன.

இந்த போட்டியின் சிறந்த முன்படை வீரராக Red Giant அணியின் விளையாட்டாளர் ஐசெக் வென்ற வேளையில் சிறந்த தற்காப்பு வீரருக்கான கோப்பையை BL KL அணியின் விளையாட்டாளர் ரவிந்திரன் வென்றார்.

புத்ராஜெயா கபடி சங்கத்தின் செயல்பாட்டிற்கு தேசிய சங்கத்தினர் பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். எங்களின் வாய்ப்புகளை பறிப்பதால் எங்களின் புத்ராஜெயா கபடி சங்கம் மூடு விழா காணும் நிலை ஏற்படும் என அதன் தலைவர் அரசு சண்முகம் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

கோலாலம்பூர், பிப்.7-
பிறப்பு சான்றிதழில் இந்தியர் என குறிப்பிடப்பட்டுள்ளதை தமிழராக மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழர் தேசிய பேரவை இன அடையாள மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

நமது பிறப்பு சான்றிதழில் இனம் தமிழர் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்பதை குறிக்கோலாக கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேரவையின் தலைவர் தமிழ்திரன் தெரிவித்தார்.

நமது முன்னோர்களின் பிறப்பு சான்றிதழில் தமிழர் என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் ஆவணங்கள் கணினிமயமாக மாற்றப்பட்டபோது அது இந்தியராக மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் இதனை நாங்கள் மீட்டெடுக்கதான் பாடுபடுகிறோம்.

இந்த விவகாரம் குறித்து பதிவிலாகா அதிகாரியை நாங்கள் சந்தித்து உள்ளோம். பிரதமரின் உத்தரவின் அடிப்படையில்தான் இது மாற்றப்பட முடியும் என்று கூறப்பட்டதால் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் முன்னிலையில் இந்த கோரிக்கையை முன்னெடுக்கப்பட்டு பின்னர் இந்த கோரிக்கையை நாங்கள் பிரதமரிடம் முன்னெடுத்து செல்வோம் என அவர் சொன்னார்.

எங்களின் இந்த நிலைப்பாட்டில் மலேசிய தெலுங்கு சங்கமும் அதன் ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்த மாநாடு வரும் மே மாதம் 17ஆம் தேதி காலை 9 மணி முதல் 4.30 மணி வரை ஷா ஆலம், இலத்தானிய மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.

கோலாலம்பூர், பிப்.7-
பிறப்பு சான்றிதழில் இந்தியர் என குறிப்பிடப்பட்டுள்ளதை தமிழராக மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழர் தேசிய பேரவை இன அடையாள மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

நமது பிறப்பு சான்றிதழில் இனம் தமிழர் என்று குறிப்பிடப்பட வேண்டும் என்பதை குறிக்கோலாக கொண்டு இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பேரவையின் தலைவர் தமிழ்திரன் தெரிவித்தார்.

நமது முன்னோர்களின் பிறப்பு சான்றிதழில் தமிழர் என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் ஆவணங்கள் கணினிமயமாக மாற்றப்பட்டபோது அது இந்தியராக மாற்றப்பட்டுள்ளது. ஆகையால் இதனை நாங்கள் மீட்டெடுக்கதான் பாடுபடுகிறோம்.

இந்த விவகாரம் குறித்து பதிவிலாகா அதிகாரியை நாங்கள் சந்தித்து உள்ளோம். பிரதமரின் உத்தரவின் அடிப்படையில்தான் இது மாற்றப்பட முடியும் என்று கூறப்பட்டதால் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் முன்னிலையில் இந்த கோரிக்கையை முன்னெடுக்கப்பட்டு பின்னர் இந்த கோரிக்கையை நாங்கள் பிரதமரிடம் முன்னெடுத்து செல்வோம் என அவர் சொன்னார்.

எங்களின் இந்த நிலைப்பாட்டில் மலேசிய தெலுங்கு சங்கமும் அதன் ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்த மாநாடு வரும் மே மாதம் 17ஆம் தேதி காலை 9 மணி முதல் 4.30 மணி வரை ஷா ஆலம், இலத்தானிய மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.

 

கோலாலம்பூர், பிப்.5-
உலகின் முதல் ஃபின்டெக் சக்தியூட்டப்பட்ட தங்க ATM தொழில்நுட்பத்தை உருவாக்கிய மலேசிய நிறுவனமான பப்ளிக் கோல்ட் ATM, துபாயைச் சேர்ந்த MAH Gold and Jewellery LLC மற்றும் ComTech Gold ஆகிய நிறுவனங்களுடன் மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தி, உலகளவில் தங்க ATM-களை பெருமளவில் நிறுவும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் கோலாலம்பூரில் உள்ள மேனாரா பப்ளிக் கோல்டில் கையெழுத்திடப்பட்டன. 24 மணி நேரமும் செயல்படும் தங்க ATM மூலம் இ-வாலட், கிரெடிட் கார்டு வழியாக தங்கம் வாங்குதல், டிஜிட்டல் தங்க மீட்பு, கிரிப்டோவை தங்கமாக மாற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பப்ளிக் கோல்ட் ATM, இதுவரை மலேசியா, இந்தோனேசியா மற்றும் துபாயில் 155 தங்க ATM-களை நிறுவி, “அதிக எண்ணிக்கையிலான தங்க ATM நிறுவல்கள்” என்ற பிரிவில் GUINNESS WORLD RECORDS™ சாதனையை பெற்றுள்ளது.

இந்த புதிய கூட்டாண்மை, துபாய், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பப்ளிக் கோல்ட் ATM நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட ComTech Gold நிறுவனத்துடன் பப்ளிக் கோல்ட் ஏடிஎம் இணைந்து செயல்படுவது, அதன் முதல் டிஜிட்டல் தங்க ஒருங்கிணைப்பு ஆகும். இதன் மூலம் காம்‌டெக் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டிஜிட்டல் தங்கத்தை, பப்ளிக் கோல்ட் ஏடிஎம் வழியாக உடல் தங்கமாக மீட்டெடுக்க முடியும்.

பப்ளிக் கோல்ட் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டத்தோ ஸ்ரீ லூயிஸ் எங், இந்த கூட்டாண்மை உலகளாவிய நிதி மற்றும் மதிப்புமிக்க உலோகத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்புகள், நிதி உட்சேர்க்கையை மேம்படுத்தி, நாடுகளின் தங்க சூழலை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதன் மூலம் மலேசியா, டிஜிட்டல்–உடல் தங்க தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணியில் தன்னை நிலைநிறுத்துகிறது.
ஒழுங்குமுறை அனுமதி கிடைத்தவுடன், இந்த ஆண்டு ஏடிஎம் நிறுவல் தொடங்கப்படும்.

 2026ஆம் ஆண்டில் 5 ஏடிஎம்கள், அடுத்த ஆண்டில் 50 ஏடிஎம்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

பத்துமலை, பிப் 4-
பத்துமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் போது, பல ஆண்டுகளாக இடைவிடாது தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் 5 பேருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அவர்களில், நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் திருமதி பரிமளா கிருஷ்ணா அவர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில், சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தப் பாராட்டை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் டத்தோ சுரேஷ் மற்றும் டத்தோஸ்ரீ நடராஜா ஆகியோர் வழங்கினர்.

ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவின் போது பத்துமலையில் திரளாக கூடும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டுதல், உதவி மற்றும் சேவை வழங்குவதில் திருமதி பரிமளா கிருஷ்ணா முக்கிய பங்காற்றி வருகிறார். பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அவரது தன்னார்வ சேவை, சமூக சேவையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய திருமதி பரிமளா கிருஷ்ணா,
“பக்தர்களுக்கு சேவை செய்வதே எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய பலன். இருப்பினும், இந்த பாராட்டு என் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளது” என தனது நன்றியை தெரிவித்தார்.

தைப்பூசம் போன்ற மகத்தான சமய விழாக்களில் தன்னார்வலர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், திருமதி பரிமளா கிருஷ்ணா போன்ற சேவை மனப்பான்மை கொண்டவர்கள் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள் என்றும் நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

இந்தப் பாராட்டைப் பெற்றவர்களில்,
கோலாலம்பூரைச் சேர்ந்த திருமதி பத்மாவதி,
பிரீக்ஃபீல்ட்ஸைச் சேர்ந்த திருமதி எம்.எஸ். ராணி,
திரு. மகேந்திரன்
மற்றும் திரு. கோவிந்தன் ஆகியோரும் இடம்பெற்றனர்.

 

கோலாலம்பூர், ஜன.27-
பிரதமராக செயல்படுவதற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு தகுதி இருக்கிறதா எனக் கேட்டு சட்ட வல்லுனர் பொன். வேதமூர்த்தி தொடுத்துள்ள வழக்கு, அடுத்த மாதம் பிப்ரவரி 25ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அரசியல் சாசன விதி 42-இன்படி, அன்வார் பெற்ற முழு பொது மன்னிப்பு, தண்டனையிலிருந்து விலக்கு பெறுவதற்குத்தானே தவிர,  அரசியல் சாசனம் 48 (1) (e) மற்றும் 48 (3) ஆகிய பிரிவுகளின்படி மாட்சிமைக்குரிய மாமன்னரிடமிருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியை அன்வார்  பெறவில்லை. 

அதன்படி தேர்தலில் போட்டியிடுவதற்கான 5 ஆண்டு காலத் தடை நீடித்தது. 

இந்த சூழ்நிலையில் 2022 நவம்பர் 19-இல் நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில் பேராக் மாநில தம்பூன் தொகுதியில் போட்டியிடுவதற்கான தகுதியை அன்வார் பெற்றிருக்கவில்லை. 

அதன்படி, அவர் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது அரசியல் சாசன  விதிகளின்படி செல்லாது என்ற நிலையில் அவர் நாட்டின் பத்தாவது பிரதமராக தொடரலாமா என்ற வினாவை  முன்வைத்து மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி  தலைவருமான பொன். வேதமூர்த்தி  ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று ஜனவரி 27ஆம் நாள் விசாரணைக்கு வந்த நிலையில் பிரதிவாதி  அன்வாரின் தரப்பு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் சிங் 
உடல் நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்திற்கு வராத நிலையில் வழக்கு, அடுத்த மாதம் பிப்ரவரி 25ஆம் நாள் பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி Alice Loke தெரிவித்தார். 

அதேவேளை, 
வழக்கறிஞர் டேனியல் ஆல்பெர்ட், சட்டத்துறை அலுவலகத்தில் இருந்து சலாகுடின் ஆகியோர் அன்வார் சார்பில் முன்னிலை ஆகினர்.

இந்த வழக்கில், எம்ஏபி சட்ட ஆலோசகர் கார்த்திக், தன்னுடைய கார்த்திக் ஷான் நிறுவனத்தின் சார்பில் வழக்காடி வந்த நிலையில், இந்த வழக்கின் வாதியாகிய பொன். வேதமூர்த்தி, தானும் இந்த வழக்கில் வாதாடுவதற்காக  முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது. 

இனி இந்த வழக்கில் பொன். வேதமூர்த்தியும் இணைந்து வழக்காடுவார்.


கோலாலம்பூர், ஜன.27-
எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட டத்தோ முகமது ஷாமிர் அப்துல் அஸிஸ் அவர்களுக்கு மிம்காய்ன் தலைவரும் ஏசான் குருப் தோற்றுநருமான டத்தோ ஹாஜி அப்துல் அமிட் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

முகமது ஷாமிர் முன்பு அமானா இக்தியார் மலேசியாவின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் அமானா இக்தியார் கிட்டத்தட்ட 99.98 விழுக்காடு சரியான திருப்பிச் செலுத்தும் விகிதத்தை அடைந்திருந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதன் விகிதம் 100-ஆக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் முகமது ஷாமிர் அவரது புதிய பதவிக்கு ஏராளமான அனுபவங்களுடன் வந்துள்ளார்.

திறன் மேம்பாடு, பணியாளர் பயிற்சி, மனித மூலதன நிலைத்தன்மை ஆகியவற்றில் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் கவனத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையாக அவரது நியமனம் பார்க்கப்படுவதாக டத்தோ ஹாஜி அப்துல் அமிட் தன் வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

கோலாலம்பூர், ஜன.24-
பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு சாலை ஓரங்களில் அமைக்கப்படும் எம்பிஎஸ் கடைகளை வாடகை இம்முறை ஏல முறையில் வழங்கப்படுவது ஏன் என்றும் உடனடியாக இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீரமேஷ் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக இங்கு கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்துவரும் சிறு வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் இந்த செயலை அவர் கடுமையாக சாடினார்.

கடந்த ஆண்டு இந்த கடைகளை வெ.400-500 வரை வாடகைக்கு எடுத்த சிறு வியாபாரிகளுக்கு இந்த முறை பெரிய ஏமாற்றம்தான். தற்போது இந்த கடைகள் ஏல முறையில் வெ.4,000 முதல் வெ.18,000 வரை வாடகைக்கு விடுப்படுகிறது.

இங்கு கடைகளை வாடகைக்கு எடுத்து சுமார் வெ.2 ஆயிரம் வரை லாபம் பெற்ற சிறு வியாபாரிகள் வாடகைக்கே குறந்தது வெ.4 ஆயிரம் வரை செலுத்த சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என ஸ்ரீ ரமேஷ் தெரிவித்தார்.

இந்த தொகுதியில் மூன்று இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்கள் உள்ளனர். இந்த விவகாரம் குறித்து அம்மூவரும் வாய் மூடி இருப்பது ஏன்?

இந்த ஏல முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சிலாங்கூர் மாநில மந்திரி புசார் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று பத்துமலையில் கூடிய சிறு வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

 

கோலாலம்பூர்,ஜன.16-
தமிழர் திருநாளான பொங்கல் கொண்டாட்ட டத்தோ தி.மோகன் தலைமையில் நேற்று செமினியில் கிரமத்தில் நடப்போதுபோல் நடைப்பெற்றது.

நகர பகுயில் பொங்கல் கொண்டாட்டத்தை நடத்தினால் மக்கள் அதிலமாக திரலுவதில்லை. ஆனால் தோட்டத்திற்குள் கிரமத்தில் நடப்பதுபோல் கோலாகலமாக நடைப்பெற்ற இந்த விழாவில் மக்கள் அதிகலவில் திரண்டுள்ளது நம்மிடையை இன்னும் கலச்சார உணர்வு மேலோங்கி இருப்பதை காட்டுவதாக மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இந்த கொண்டாட்டம் தமிழகத்தில் நடப்பதை போல பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் மினி ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் அதனை வெகுவாக காண மக்கள் இங்கு அதிகமாக திரண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இதற்கிடையில்,
தமிழ் புத்தாண்டு என்று கூறி தை 1ஆம் தேதியிலும் சித்திரை 1-இலும்   கொண்டாடுவது அவர் அவர் இஷ்டம். அவரவர் நம்பிக்கை நாம் மதித்து நடப்போம் என அவர் ஆலோசனை வழங்கினார்.

இந்த விவகாரத்தில் இன்னும் பல சர்ச்சைகள் எழுந்துதான் வருகிறது. ஆகையால் யாரும் யாரையும் குறை சொல்ல தேவையில்லை. அவரவர் விருப்பதுடன் கொண்டாடட்டும். அவரவர் நம்பிக்கையை நாம் ஏற்கதான் வேண்டும் என்றார் அவர்.

நம் கலாச்சாரத்தை காக்க டத்தோ தி.மோகன் இந்த முயற்சியை எடுத்துள்ளார். நம் நாட்டில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்கு இந்த கொண்டாட்டம் ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது.

சமுதாயம் பார்த்து கொண்டுதான் இருக்கிறது. யார் சமுதாயத்திற்காக செயல்பாடுகளை முன்வைக்கிறார்களோ அவர்களை சமுதாயம் மதிக்கும் என்று டத்தோஸ்ரீ  எம்.சரவணன் மேலும் கூறினார்.

கோலாலம்பூர், ஜன.15-
பத்துமலையில் மின்படிகட்டு கட்டுமான அனுமதி தொடர்பில் ஆலய நிர்வாகமும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடும் ஒருவருக்கொருவரு தவறுகளை சுட்டிக் காட்டுவதை நிறுத்திவிட்டு சுமுகமான பேச்சு வார்த்தை நடத்தி தைப்பூசத்தை சிறப்பாக கொண்டாட  வேண்டுமென மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்ததினார்.

இந்த விவகாரத்தில் இரு தரப்பும் மற்றவர்களின் தவறுகளைதான் கூறி வருகின்றனர். இதனால் ஒரு நல்லதும் நடக்க போவதில்லை.

மாநில அரசாங்கத்தின் கீழ் பாப்பா ராயுடு முடிவை அறிவிக்கும் பட்சத்தில் டான்ஸ்ரீ நடராஜா ஆலயம் ஏஜியின் கீழ்தான் செயல்படுவதை அழுத்தமாக கூறிவருகிறார்.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் நமக்கு பத்துமலையில் மின்படிகட்டுதான் வேண்டும். அதுதான் நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆகையால் மாநில அரசியின் தேவைகளை பூர்த்தி செய்து மின்படிக்கட்டை கட்டுவதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டுமென மஇகா தலைமையகத்தின் அருகிலுள்ள ஆலயத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

ஆகையால் ஆலயம் நிர்வாகம் மாநில முதல்வருடனும் ஆட்சிக்குழு உறுப்பினருடனும் நல்ல உறவை வைத்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வுக்கான வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடக்கப்பட்டுள்ளது. ஆகையால் நிதிமன்ற முடிவையும் இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

மஇகா தேசிய மகளிர் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த இந்த பொங்கல் விழாவில் மஇகாவினரும் பொதுமக்களும் திரலாக கலந்து கொண்டனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

தை பிறந்தால் வழி பிறக்கும்..
தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்!

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். பொங்கலும் தைத்திங்களும்
இரட்டிப்புக் கொண்டாட்டம். இந்த புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, நலம், வளம், அன்பைக் கொண்டு வர மனமார்ந்த வாழ்த்துகள்.

பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரியத் திருநாள். இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும். 

இயற்கைக்கும், விளைச்சலுக்கும் நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் கொண்டாட்டம் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் விளங்குகிறது. பொங்கல் என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது காலங்காலமாய் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று. வாழ்வின் சிறப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டாடும் இந்த விழா தமிழர்களின் அடையாளம், 
விவசாயிகளின் உழைப்பு. இப்படிப் பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வாழ்வின் சிறப்பைக் கொண்டாடும் அற்புதமான திருநாள்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து பொங்கலைக் கொண்டாடுங்கள். உங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள். இந்தப் புத்தாண்டில் புதிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள். பொங்கல் பண்டிகையை ஒரு புதிய தொடக்கமாக எடுத்துக் கொண்டு உங்கள் வாழ்வைச் சிறப்பாக வாழுங்கள்.

புதிய ஆண்டு, புதிய வாய்ப்புகள், புதிய மகிழ்ச்சி. இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின நல் வாழ்த்துகள்.

மலேசியாவில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தனது மனமார்ந்த பொங்கல் தின நல்வாழ்த்துகளைத்
கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹேங் தெரிவித்துக் கொண்டார்.
.
விவசாயிகளின் உழைப்பையும் இயற்கையின் அருளையும் போற்றும் இந்த பொங்கல் திருநாளில், அனைவரும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எல்லா வளங்களுடனும் வாழ வேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என்றார்.

புதிய ஆண்டான 2026 ஆம் ஆண்டு  அனைவருக்கும் வெற்றியும் முன்னேற்றமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும். குறிப்பாக, இந்திய சமூகத்தினர் பொருளாதாரத்திலும் வாழ்வாதாரத்திலும் மேலும் சிறப்பாக வளர்ந்து உயர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்ற தகவலை கூறி மீண்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தே லாய் ஹேங் தெரிவித்தார்.

2026 பொங்கல் திருநாளை முன்னிட்டு மலேசிய இந்திய சமுதாயத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன், தன்னுடைய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கழனியில் ஏரோட்டினாலும் வீதியில் தேரோட்டிய செம்மாந்த இனம் தமிழினம். அத்தகைய தமிழ் முன்னோர் வாழ்விற்கு வளம் சேர்க்கும் வேளாண் தொழிலின் வினை பயனான அறுவடையைக் கொண்டாடும் விதமாகவும் ஒற்றுமை விழாவாகவும் காலந்தோறும் தை மாத முதல் நாளில் கடைபிடிக்கின்றனர்

வேளாண் தொழிலுக்கு அடியும் முதலுமாக இருந்து துணை நிற்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லவும் வாழ்வின் எல்லா கட்டத்திலும் துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி பாராட்டவும் பொங்கல் நாளை வகுத்துள்ளனர்.

இந்த இருநாள் விழாவுக்கும் முன்னதாக போகிப்பண்டிகை என்னும் பெயரில் தீ தீயதை விளக்கி, நன்மையை கைக்கொள்ளும் விதமாக கொண்டாடிய அதேவேளை நிறைவு நாளாக காணும் பொங்கல் அல்லது  கன்னிப் பொங்கல் என்னும் வகையில் ஒரு சமூக கூட்டு விழாவாக நான்கு நாள் திருவிழாவை ஒற்றுமைத் திருவிழாவாக பொங்கல் சமயத்தில் கொண்டாடி குதூகலிக்கும் பாங்கினை காலங்காலமாக கடைபிடித்து வருகின்ற இனம் தமிழினம்.

அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு பொங்கல் விழாவும் மலேசிய இந்திய சமுதாயத்தில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் முன்னுறுத்தி நம் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைந்திட இந்த பொங்கல் திருநாள் துணை நிற்கட்டும் என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நம்முடைய எதிர்காலம் இந்த மண்ணில் மிகவும் கேள்விக்குறியாக தெரிவதையும் இந்திய சமுதாயத்தினர் அவதானிக்க வேண்டும்.

எனவே மலேசியாவில் வாழ்கின்ற இந்திய சமுதாயத்தினர் அனைவரும் அனைத்து  வேறுபாட்டையும் மறந்து ஒற்றுமை என்ற ஒரே எண்ணத்தை மனதில் கொண்டு அனைத்து சமூக மக்களோடும் ஒன்றிணைந்து இந்த
பொங்கல் நன்னாளை கொண்டாடுவோம் என்று தன்னுடைய பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர்,ஜன.14-
மலேசியா முழுவதும் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ எம். சரவணன் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும், சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

2026 கல்வியாண்டிற்கான அண்மைய தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 10,330 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 11,021 மாணவர்கள் சேர்ந்திருந்த நிலையை ஒப்பிடுகையில் 691 மாணவர்கள் குறைவாகும்.

தமிழ்ப்பள்ளிகள் மலேசிய இந்திய சமூகத்தின் அடையாளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக உள்ளன. இப்பள்ளிகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மஇகா உறுதியாக உள்ளது.

ஆனால் இதை தனித்து செய்வது சாத்தியமில்லை என்று டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

இந்தச் சூழலை மாற்றுவதற்கு தமிழ் சார்ந்த அரசு சாரா அமைப்புகள், பெற்றோர்–ஆசிரியர் சங்கங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், பள்ளி மேலாண்மை வாரியங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கூடுதல் செயலில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

மேலும், மாணவர் சேர்க்கையில் பெற்றோரின் முடிவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் டத்தோஸ்ரீ சரவணன் சுட்டிக்காட்டினார்.

தமிழ்க் கல்வியின் நீண்டகால மதிப்பை பெற்றோர் உணர வேண்டும். தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்த்து, பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

2026ஆம் ஆண்டின் நிலவரப்படி, மலேசியாவில் 528 தமிழ்த் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 155 பள்ளிகள் 30 அல்லது அதற்கு குறைவான மாணவர்களுடன் இயங்கி வருவது கவலைக்குரியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இது வெறும் எண்ணிக்கைகள் பற்றிய விஷயம் அல்ல. நமது மொழி, பண்பாடு மற்றும் சமூக வலிமையை பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.
தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், ஜன.12-
மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் முன்னணி மதிப்புமிக்க உலோக வர்த்தக நிறுவனமாக விளங்கும் Public Gold, உலகம் முழுவதிலுமிருந்து வந்த Public Gold Business Owners (PGBOs)-ஐ FY
2024/25 Triple Diamond Recognition Ceremony என்ற உயரிய விருது விழாவிற்கு, பண்டார் உத்தாமாவில் உள்ள One World Hotel-இல் சிறப்பாக வரவேற்றது.

இந்த பிரமாண்ட விழாவில், மொத்தம் 14 சிறந்த சாதனையாளர்களின் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கௌரவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை Public Gold Group-இன் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் Dato’ Seri Louis Ng அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

அவருடன் Aurora Italia International Berhad (AIIB)-இன் மேலாண்மை இயக்குநர் Datin Seri Yvonne Lim மற்றும் PGMall-இன் செயல்பாட்டு தலைமை அதிகாரியும், இந்த உயரிய விழாவின் ஏற்பாட்டுத் தலைவருமான Jerry Ng ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2008ஆம் ஆண்டு பினாங்கில் எளிய முறையில் தொடங்கப்பட்ட Public Gold, இன்று உலகளாவிய நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மலேசியாவில் 30 கிளைகள், இந்தோனேசியாவில் 7 கிளைகள், மேலும் சிங்கப்பூர், துபாய் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) மற்றும் சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் ஆகிய இடங்களில் சர்வதேச அலுவலகங்களுடன் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

தற்போது, 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுடன், மதிப்புமிக்க உலோகத் துறையில் பிராந்திய அளவில் முன்னணி இடத்தை Public Gold உறுதியாக தக்க வைத்துள்ளது.
புதுமையை அடிப்படையாகக் கொண்ட பிராண்டாக விளங்கும் Public Gold, 2023ஆம் ஆண்டு முதல் மலேசியா முழுவதும் உலகின் முதல் ஃபின்டெக் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட Gold ATM-ஐ அறிமுகப்படுத்தி வரலாறு படைத்துள்ளது.

அதன் சமீபத்திய முன்னேற்றமாக, Emirates Gold நிறுவனத்துடன் மேற்கொண்ட மூலோபாய கூட்டாண்மையின் மூலம், Dubai Precious Metals Conference (DPMC) 2025-இல் இந்த ஃபின்டெக் Gold ATM-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சி தங்கத்தை எளிதில் அணுகக்கூடிய புதிய காலகட்டத்தைத் தொடங்குவதோடு, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை முக்கியமான ஃபின்டெக் புதுமை மையங்களாகவும் நிலைநிறுத்துகிறது.

2008ஆம் ஆண்டு தொடக்கம் முதல், Public Gold RM23.5 பில்லியன் மொத்த விற்பனை வருவாயை ஈட்டியுள்ளதுடன், தொடர்ந்து வலுவான வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. இதுவரை 88 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், 52 டன் தங்கம் மீள வாங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொண்ட சமீபத்திய வணிக விரிவாக்கங்களின் மூலம், Public Gold ஒரு நம்பகமான பிராந்திய பிராண்டாக மட்டுமல்லாது, உலகளாவிய நிறுவனமாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
இன்றைய Public Gold-இன் வெற்றிக்கு, அதன் Public Gold Business Owners (PGBOs)-இன் அசாதாரண அர்ப்பணிப்பும், விசுவாசமான வாடிக்கையாளர்களின் உறுதியான ஆதரவுமே முக்கிய காரணங்களாகும்.

அவர்களின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன.

இந்த மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், ‘From Vision to Legendary Leadership’ என்ற கருப்பொருளின் கீழ் இவ்வாண்டின் Triple Diamond Recognition Ceremony நடத்தப்பட்டு, சிறந்த சாதனைகளும் தலைமைத்துவ திறமைகளும் வெளிச்சமிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், ஜன.11-

என் இனம் என் மக்கள் சாதிக்க வேண்டும். நம் சமுதாயத்தின் உருமாற்றம்  கல்வி வாயிலாக நடக்க வேண்டும் என ஒற்றுமை துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன்  எஸ்.எம்.சி கல்வி நிலையத்தின் கந்த வேள்வி நிகழ்ச்சியை அதிகாரபூர்வமாக துவக்கி வைத்து பேசும் போது இதனை  தெரிவித்தார்.

அந்த வகையில் கடந்த 40 ஆண்டு காலமாக  டான்ஸ்ரீ தம்பிராஜா செய்த  கல்வி புரட்சியால் 60 ஆயிரம் பட்டதாரிகள்  இங்கு உருவாகி உள்ளனர்.

கல்வி விவகாரத்தில் சமரசமே  கிடையாது. அந்த வகையில் எஸ்.எம்.சி மற்றும்  மக்கள் குரல் எனக்கு புரிகிறது. (யூ.பி.எஸ்.ஆர் - பி.டி 3)
வேண்டும் என்ற குரலை நிச்சயம்  நான் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்வேன்.

கை ஏந்தும் சமுதாயமாக நாம் இருக்க கூடாது, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு  கை கொடுக்கும் சமுதாயமாக  நாம் திகழ வேண்டும்.

அந்த வகையில் நாம் கையில் எடுக்க வேண்டிய ஆயுதம் கல்வி என யுனேஸ்வரன் தெரிவித்தார்.

சில மாணவர்களுக்கு  கல்வி சரியாக பிடி கொடுக்கவில்லையா? கவலை வேண்டாம் அவர்களை தொழில் கல்விக்கு  வழி நடத்துங்கள், வன்முறை  என்ற சாயம் நம்மை விட்டு செல்ல வேண்டும் அதற்கு பெற்றோர்கள் மிக பெரிய பங்கை வகுக்க வேண்டும் எனவும் யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.

ஷா ஆலம், ஜனவரி 6 –
தமிழ் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் தைப்பூசத் திருநாளன்று, சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடையே மதுபான பயன்பாட்டைத் தடுப்பது உறுதி செய்யப்படும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் கூறினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு, சில தினங்களுக்கு பத்துமலை வட்டாரத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்படாது. குறிப்பாக, பத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் மதுபான விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும்.
மேலும், செலாயாங் நகராண்மைக் கழக அதிகாரிகள் மதுபான விற்பனைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என பாப்பா ராயுடு தெரிவித்துள்ளார்.
மலேசிய திருநாட்டில் தைப்பூசத் தினத்தன்று பத்துமலை, பினாங்கு, ஈப்போ, கெர்லிங், சுங்கை பட்டாணி உள்ளிட்ட முருகப் பெருமான் திருத்தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.
ஆகவே, பத்துமலை தைப்பூசத் திருவிழாவுக்கு மட்டுமல்லாது, நாடு தழுவிய அளவில் நடைபெறும் தைப்பூச விழாக்களின் போது ஆலய வளாகங்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மதுபானம் விற்பனை செய்வதையும், அருந்துவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்பதில் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி உறுதியாக உள்ளது.
தைப்பூசத் திருவிழா காலத்தில் மதுபான விற்பனைக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் என்ற முறையில் முழுமையான ஆதரவை வழங்குவதாக டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஜன.6-
செலாயாங் கெப்பிட்டல் ஹாலிலும் மற்றும் செனாவாங் ஹாலிலும் தங்களின் வீட்டு விசேஷங்களுக்கு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களும் தன் பிறந்தநாளை முன்னிட்டு வெ.500ஐ மொய்யாகா வழங்கவுள்ளதாக இந்த இரு ஹால்களின் உரிமையாளரான டத்தோஸ்ரீ ஹாரி தெரிவித்தார்.

இந்த ஆண்டு முழுவதும் இந்த சலுகை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் சொன்னார்.

சாதாராண ஹால் அலங்காரங்களை காட்டிலும் வித்தியாசமான அலங்காரங்களை பிரமாண்ட முறையில் தன் வாடிக்கையாளர் இவர் வழங்கி வருகிறார். என் வாடிக்கையாளர்கள் என் குடும்ப உறுப்பினர்கள்தான் என நான் கருதுகிறேன். ஆகையால் அவர்களுக்கு இந்த சலுகையை வழங்கவுள்ளதாக டத்தோஸ்ரீ ஹரி தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை செலாயாங் கெப்பிட்டல் ஹாலில் டத்தோஸ்ரீ ஹரியின் 40ஆவது பிறந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், தொழிலதிபர் டத்தோஸ்ரீ புலேந்திரன், ரத்தன வள்ளி அம்மையார் உட்பட பல தொழிலதிபர்களும் போலீஸ் அதிகாரிகளும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

தன் பிறந்தநாள் விழாவிற்கு வருகையளித்த அனைவருக்கும் தான் நன்றியை தெரிவித்து கொள்வதாக டத்தோஸ்ரீ ஹரி தெரிவித்தார்.

கோலாலம்பூர்,ஜன.5-
பத்துமலை மின் படிக்கட்டு திட்டம் தொடர்பாக பாப்பா ராயுடு உண்மை நிலை அறியாமல் கருத்து தெரிவித்து வருவதாக கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் குற்றம்சாட்டினார்.

பத்துமலை மேல்குகைக்கு செல்ல மின் படிக்கட்டு அமைக்கும் திட்டத்தை கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் முன்னெடுத்து வருகிறது. இதற்கான அனுமதி பெற கோம்பாக் நில அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

தொடக்கத்தில் தேவஸ்தானத்தின் பெயரிலேயே விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருவதாலும், அதற்கு ஆர்ஓஎஸ் பதிவு எண் இல்லாததாலும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து, நில அலுவலகத்தின் ஆலோசனைப்படி ஆலயத் தலைவர் பெயரில் விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. தனிநபர் பெயரில் விண்ணப்பித்தால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, ஆலயத் தலைவருக்கு அதிகாரம் வழங்கி, தேவஸ்தான அறங்காவலர்கள் அனைவரும் கையெழுத்திட்டு, அதற்கான நீதிமன்ற ஒப்புதலையும் பெற்ற பின்னரே புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதாக டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.

இந்த நிலையில், தேவஸ்தானம் எந்த தவறும் செய்யவில்லை என அவர் வலியுறுத்தினார். பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத காரணத்தினாலேயே நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.

தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற முக்கிய பொறுப்பில் இருக்கும் பாப்பா ராயுடு, உண்மை நிலையை அறியாமல் பேசுவது வருத்தமளிப்பதாக டத்தோ சிவக்குமார் சுட்டிக்காட்டினார். சந்தேகம் இருந்தால் நேரடியாக எங்களிடம் கேட்கலாம் என்றும், தனிநபர் பெயரில் விண்ணப்பம் செய்ததாக கூறி விவகாரத்தை திசைதிருப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

முடிந்தால் உதவி செய்யுங்கள்; இல்லையெனில் அமைதியாக இருங்கள். தவறான தகவல்களை பரப்பி மக்களிடையே குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என டத்தோ ந. சிவக்குமார் கடுமையாக வலியுறுத்தினார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் 2026-2027ஆம் ஆண்டிற்கான உறுப்பினர்களாக 23 பேர் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கெஅடிலான் சார்பில் 10 பேரும் டிஏபியை பிரதிநிதித்து 8 பேரும் அமானா கட்சியை சேர்ந்த 5 பேரும் இதில் அடங்குவர்.

ப.புவனேஸ்வரன், வீ.முருகன், ச.ஸ்ரீகாந்த் ஆகியோர் கெஅடிலானை சேர்ந்த இந்திய உறுப்பினர்களாவர்.

டிஏபியை பிரதிநிதித்து திலகேஸ்வரி, சின்னையா, ராஜேஷ் ராவ் என மூவர் உட்பட அமானா கட்சியை சேர்ந்த துரை அன்பழகன் என்பவரும் பதவி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

கெஅடிலானை சேர்ந்த நகராண்மைக் கழக உறுப்பினர்களுக்கு ப.புவனேஸ்வரன் தலைமையேற்கிறார்.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் தலைவர் ஜூலைஹா பிந்தி ஜமாலுடின் முன்னிலையில் இன்று காலை பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலு சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் கட்சியின்  தலைவர் டாக்டர் சத்யபிரகாஷ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பதவி ஏற்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

கோலாலம்பூர், ஜன.4-
நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பா கட்டுமானம், பராமரிப்பு துறையில் நீண்ட கால அனுபவமும் நம்பிக்கையும் பெற்றவர் GREAT BATH SDN. BHD. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நாதன் மனோகரன் (வயது 43).

இன்றைய காலகட்டத்தில், வீடுகள், தங்கும் விடுதிகள், ரிசோட்கள், விளையாட்டு வளாகங்கள் மற்றும் பொது பயன்பாட்டு இடங்களில் நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்கள் அத்தியாவசிய வசதியாக மாறி வருகின்றன. ஆனால், ஒரு நீச்சல் குளத்தை கட்டுவதும் அதன் தொடர்ச்சியான பராமரிப்பும் சாதாரண பணியல்ல. இதில் பல தொழில்நுட்ப நுணுக்கங்கள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சரியான திட்டமிடல் அவசியமாகின்றன.

அந்த அடிப்படையில், தனது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக தரமான மற்றும் நம்பகமான சேவைகளை Great Bath Sdn. Bhd. நிறுவனத்தின் மூலம் வழங்கி வருவதாக தொழிலதிபர் நாதன் தெரிவித்தார்.
சேராஸ் பகுதியைச் சேர்ந்த கிரேட் பாத் Great Bath Sdn. Bhd. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான நாதனின் வாழ்க்கைப் பயணம், சாதாரண பின்னணியிலிருந்து உயரங்களை எட்டிய ஒரு ஊக்கமளிக்கும் கதையாகத் திகழ்கிறது.

இன்று, நீச்சல் குளம் மற்றும் ஸ்பா துறையில் முன்னணி நிறுவனமாக கிரேட் பாத் உருவாகியிருப்பது, அவரது விடாமுயற்சியின் சான்றாகும்.
சேராஸில் உள்ள ஒரு எளிய அடுக்குமாடி குடியிருப்பில், பல இனங்களைச் சேர்ந்த சமூக சூழலில் வளர்ந்த நாதன், அந்த அனுபவங்களே தனது வாழ்க்கைப் பாதையை வடிவமைத்ததாகக் கூறுகிறார்.

சிறுவயதிலிருந்தே பல்வேறு இன மக்களுடன் பழகிய அனுபவம், தன்னம்பிக்கையையும் பரந்த சமூக வட்டாரத் தொடர்புகளையும் உருவாக்க உதவியதாக அவர் நினைவுகூர்கிறார்.
“என் தந்தை தான் எனக்கு முதல் ஊக்கமாக இருந்தவர். நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் அர்த்தத்தை அவரிடமிருந்தே கற்றுக்கொண்டேன், என நாதன் கூறுகிறார்.

2008ல் தொடங்கிய தொழில் பயணம்
2008ஆம் ஆண்டு, பெரிய முதலீடு இன்றியே, ஒரு நீச்சல் குளம் பராமரிப்பாளராக தனது தொழில் பயணத்தை நாதன் தொடங்கினார். வாடிக்கையாளர்களின் தொடர்ந்த ஆதரவும் நம்பிக்கையும் காரணமாக, பின்னர் அவர் நீச்சல் குளம் கட்டுமானத் துறையில் முழுமையாக கவனம் செலுத்தினார். அதன் விளைவாகவே, இன்று “கிரேட் பாத்” நிறுவனம், நீச்சல் குளம் மற்றும் ஸ்பா தேவைகளுக்கான ஒரே இட தீர்வாக வளர்ந்து நிற்கிறது.
இந்நிறுவனம் தற்போது
• ஆடம்பர வீட்டு உரிமையாளர்கள்
• முதல் முறையாக நீச்சல் குளம் அமைப்போர்
• ஏற்கனவே குளம் வைத்திருப்போர்
• வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு மேலாண்மை நிறுவனங்கள்
ஆகியோருக்குச் சேவையளித்து வருகிறது.

கோலாலம்பூர், சிலாங்கோர், புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய பகுதிகளில் நிறுவனத்தின் சேவை விரிந்துள்ளது.
“நீச்சல் குளங்களில் சரியான சுத்திகரிப்பு இல்லாவிட்டால், ஏடிஸ் கொசுக்கள் பெருகி டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதனால் பாதுகாப்பே எங்களின் முதன்மை கொள்கை. இந்த அடிப்படையிலேயே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறோம், என அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையே உண்மையான வெற்றி
இன்று கிரேட் பாத் நிறுவனத்தில் 40 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நிறுவனம் SSM மற்றும் CIDB பதிவுகளைப் பெற்றுள்ளது. மேலும், மேம்பாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆடம்பர வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் விருப்பமான நிறுவனமாகவும் திகழ்கிறது.

என் வெற்றி என்பது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையல்ல. 10 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் தொடரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையே என் உண்மையான வெற்றி,என நாதன் பெருமிதத்துடன் கூறினார்.

தொழில்நுட்பமும் சமூக பொறுப்பும்
நீச்சல் குளம் துறையில் புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து கற்றுக்கொள்வது அவசியம் என வலியுறுத்தும் நாதன், வெளிநாடுகளிலிருந்து தொழில்நுட்ப நூல்கள் வாங்குதல், பயிற்சிகளில் பங்கேற்பது, சர்வதேச கண்காட்சிகளில் கலந்துகொள்வது போன்ற வழிகளில் தனது அறிவையும் திறனையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்.

வணிகத்துடன் மட்டுமல்லாமல், சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளிலும் கிரேட் பாத் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பண்டிகை காலங்களில் அன்பளிப்பு பொருட்கள் விநியோகம், விளையாட்டு அணிகளுக்கு ஆதரவு, விலங்குகள் தத்தெடுப்பு திட்டங்கள் ஆகியவை அதன் முக்கிய முயற்சிகளாகும்.

நாங்கள் வணிகத்தை மட்டும் கட்டியெழுப்பவில்லை. முதலில் மனிதர்களை உருவாக்குகிறோம். அந்த மனிதர்களே எங்கள் வணிகத்தை உருவாக்குகிறார்கள்,என நாதன் தனது வாழ்க்கை தத்துவத்தை வெளிப்படுத்தினார்.

நீச்சல் குளம் கட்டுமானத்தில் உள்ள முக்கிய சவால்கள்:

1. வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் சிக்கல்கள்
நிலத்தின் தன்மை, நீர்மட்டம், காலநிலை, பயன்பாட்டு நோக்கம் ஆகியவற்றை சரியாக மதிப்பீடு செய்யாமல் கட்டுமானம் மேற்கொள்ளும்போது, எதிர்காலத்தில் கசிவு மற்றும் கட்டமைப்பு சேதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
2. தரமான பொருட்களின் பயன்பாடு
தரமற்ற டைல்ஸ், பைப் லைன்கள் மற்றும் வாட்டர் ப்ரூஃபிங் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால், குறுகிய காலத்திலேயே பழுதுகள் ஏற்பட்டு அதிக பராமரிப்பு செலவுகள் உருவாகும்.
3. தொழில்நுட்ப அறிவு பற்றாக்குறை
நவீன நீச்சல் குளங்கள் வெறும் கான்கிரீட் அமைப்புகள் அல்ல. அவை வடிகட்டும் முறை (Filtration System), நீர் சுத்திகரிப்பு (Water Treatment) மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உள்ளடக்கியவை. இதற்கான தொழில்நுட்ப அறிவு இல்லையெனில் தரமான குளம் உருவாகாது.

இந்தத் துறையில் அதிக அனுபவமும் சிறந்த திட்டமிடல் திறனும் கொண்டவர் நாதன். ஆகவே, நீண்ட காலமாக தனது வீட்டில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும் என்ற கனவு கொண்டவர்கள், தரம் மற்றும் அனுபவம் இல்லாத இடங்களில் ஏமாற வேண்டாம் என்றும், தேவையான வழிகாட்டுதலுக்கு தாம் உறுதுணையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தொடர்பு கொள்ள விரும்புவோர்
012-499 0031 என்ற தொலைபேசி எண்ணில் நாதனை தொடர்பு கொள்ளலாம்.

 

ஷா ஆலம், ஜன 2-
மலேசிய திராவிடர் இயக்கத்தின் ஏற்பாட்டில்,
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின்
52ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி அண்மையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

மனிதர்கள் பகுத்தறிவுடன் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்ற வழிக்காட்டலை உலகிற்கு எடுத்துரைத்தவர் தந்தை பெரியார்.
அவர் நம்மை விட்டு மறைந்திருந்தாலும், அவர் வகுத்துச் சென்ற சுயமரியாதை வழிக்காட்டலும் கொள்கைகளும் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று,
ஷா ஆலம் மாப்பிளை உணவக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம் உரையாற்றினார்.

கழகத்தின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் பா. சோமசம்பந்தனார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, நெறியாளர் பொன். வெண்முல்லை சிறப்பாக வழிநடத்தினார்.

தமிழ் வாழ்த்து மற்றும் கொள்கைப் பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியின் முதல் அங்கமாக, இளைஞர் மாணவர் படைப்புகளாக யு. இன்பகீரன் மற்றும் யு. இயல்வளவன் ஆகியோர் தங்களது படைப்புகளை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, கழகத்தின் பொறுப்பாளர்களின் படைப்புகளாக
கவிதைகள், சிறப்புரைகள், கலந்துரையாடல், ஆத்திச்சூடி, ஓவியப் படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கழகத்தின் தேசியத் தலைவர் சா. இரா. பாரதி அன்பளிப்புகளை வழங்கினார்.

சிறப்பு நிகழ்ச்சியாக, மலேசிய திராவிடர் கழக காற்பந்து குழு அறிமுகம் செய்யப்பட்டு, அதன் விளையாட்டு சீருடையை தேசியத் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.
இரவு விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2026
புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த வேளையில்,
தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும்,
சுய மேம்பாட்டிற்கும்
நாம் அனைவரும் உறுதியெடுக்க வேண்டிய நேரம் இது.


சவால்கள் நிச்சயமாக வரும்;
ஆனால் ஒன்றிணைந்த சக்தி,
திடமான மனப்பாங்கு
மற்றும் உறுதியான தீர்மானத்துடன்
அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.


2026 ஆம் ஆண்டு,
தடைகளை உடைத்து, எல்லைகளை மீறி,
நமது திறமையும் ஆற்றலும் என்னவென்பதை
உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்.
வெற்றியை முழுமையாக நாமே கைப்பற்றுவோம்!


இந்த ஆண்டு அனைவருக்கும்
ஆசீர்வாதமும், வெற்றியும்,
வளர்ச்சியும் நிறைந்த ஆண்டாக
அமையட்டும்.


மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர்,
தேசிய மஇகா பிரிகேடு தலைவர்,
மஇகா – எம்ஐடி விளையாட்டு பிரிவு தலைவர்
ஆன்ட்ரூ டேவிட்

கோலாலம்பூர், டிச.31-
மலரும் 2026 புத்தாண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வலிமையையும் அரசியல் ஒருமைப் பாட்டையும் அளித்திட வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசியல் களம் அடுத்த பொதுத் தேர்தலை நோக்கி பயணிக்கின்ற தற்போதைய சூழலில், மஇகா-வும் முக்கியமான அரசியல் நகர்வை நோக்கி பயணிக்கிறது என்பதை மலேசிய இந்திய சமுதாயத்திற்கு வெளிப்படையாக தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இந்திய சமுதாயம் வளரும்  இப்புத்தாண்டில் வளமும் நலமும் பெற்று இந்த மலையக நாட்டில் தங்கள் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்திட எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக 2026 புத்தாண்டு வாழ்த்து செய்தியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மலேசிய இந்தியர்களின் அரசியல்-சமூகம்-பொருளாதாரம்- கல்வி-சமயம் சார்ந்து தொடர்ந்து ஆக்ககரமாக மஇகா தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்வி மறுமலர்ச்சியில் இந்திய சமுதாயம் உன்னத நிலையை அடைய வேண்டும் என்பது மஇகா-வின் நிலைப்பாடாகும்.

அந்த வகையில் துன் சாமிவேலு அவர்களின் சிந்தனைக்கேற்ப ஒவ்வொரு பட்டதாரியை உருவாக்கும் கடப்பாட்டில், மஇகாவின் கல்வி கரமான எம்.ஐ.இ.டி. இன்கீழ் இயங்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், டேப் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் மூலம் கல்விச் சேவை வழங்கி வருகிறது மஇகா.

அந்த வகையில் இந்திய சமுதாயம் கல்வியில் சிறந்த அடைவு நிலையை எட்டுவதுடன் பொருளாதார மேம்பாடு, வளப்பம், சமுதாய ஒற்றுமை, ஆன்மீக மறுமலர்ச்சி ஆகியவற்றை மலரும் இந்த 2026-ஆம் வருடத்தில் எட்டிட மஇகா சார்பிலும் குடும்பத்தின் சார்பிலும் வாழ்த்துவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க்கையின் பயணத்தில் ஓர் ஆண்டின் முடிவும், மற்றொரு ஆண்டின் தொடக்கமும் நமக்கு சொல்லும் செய்தி ஒன்று தான். வாழ்க்கையின் தேக்கங்கள் யாவும் நீங்கி, மாற்றங்கள் அனைத்தும் ஏற்றங்களாக மாற, மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

எண்ணங்களில் தெளிவு பிறந்து, செயல்களில் துணிவு பெருகி, மனங்களில் நம்பிக்கை மலர வேண்டும் என்பதே இந்த புத்தாண்டின் பிரார்த்தனை. பழைய வலிகள் பாடமாகி, புதிய நம்பிக்கைகள் பாதையாகி, உழைப்புக்கு உரிய பலனும், அன்புக்கு அர்த்தமுள்ள உறவும் கிடைக்கட்டும். அமைதியும், ஆரோக்கியமும் வெற்றியும் புதிய ஒளியாய் அனைவர் வாழ்விலும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா” நம்முடைய எண்ணங்களும், செயல்களுமே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. எனவே,
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று.

நாம் பார்ப்பது, கேட்பது, பழகுவது அனைத்தும் நல்ல விஷயங்களாக இருப்பதை உறுதி செய்வோம்.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அமைதி நிலைத்து, ஆரோக்கியம் பெருகட்டும். இந்த புத்தாண்டு வார்த்தைகளில், வாழ்க்கையில், செயல்களில், சாதனைகளில் ஒளிரும் ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த புத்தாண்டு யாவருக்கும் இனிதாய் மலரட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

 

கோலாலம்பூர், டிச.30-
பாரத பிரதமர் உயர்திரு நரேந்திர மோடி அவர்களின் முழு ஆதரவுடன் டெல்லியில் Constitution Club Of India ஏற்பாட்டில் நடைபெற்ற   நிகழ்வில்  World Educationl Achievement Award லில் மலேசிய நாட்டைச் சேர்ந்த சிற்பக் கலாலய நிறுவனத்தின் உரிமையாளர் சிவ ஸ்ரீ யோகேஸ்வர
சிவாச்சாரியார் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டில் மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியில் ஆசிரியர் உயர்திரு திருஞானம் அவர்களிடம் முறையாக சிற்ப ஆகமங்களை பயின்று மலேசியாவில் சிற்ப கலாலயம் என்ற நிறுவனத்தை நிறுவி பல்வேறு சிற்ப வேலைகளையும் மற்றும் ஆலய வழிபாடுகளையும் இவர் செய்து வருவதோடு அண்மையில் Punca Alam சிவனாலயம் மற்றும்  Puchon-இல் அம்மன் ஆலயமும் முழுமையாக கருங்கல்லால்  இவரது நிறுவனமே ஏற்று நடத்தி வருகிறது. 

தமிழ்நாட்டில்  பூங்குன்றம் ,சித்தூர், ஆவடி போன்ற இடங்களில் கருங்கல் இவர் ஆலயங்கள் அமைத்து வருவதோடு நம் நாட்டினர் பெயர் விளங்க செய்திருக்கிறார். 

இவ்வேளையில் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்தமைக்கு அவருக்கும் அவர்தான் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

கோலாலம்பூர், டிச.30
பெரிக்காத்தான் நேஷனல்  கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக டத்தோ ஸ்ரீ முகமாட் அஸ்மின் அலி இன்று அறிவித்தார்.

அந்த வகையில் ,  தனது ராஜினாமா ஜனவரி 1ஆம் திகதி  முதல் அமுலுக்கு வருவதாக டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி  குறிப்பிட்டுள்ளார்.

அதோடு  சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் தொடர்பு குழு தலைவர்  பதவியும் தான் ராஜினாமா செய்வதாகவும் அஸ்மின் அலி தனது அதிகாரபூர்வ முகநூலில் பதிவேற்றம் செய்து உள்ளார்.

அதிகாரபூர்வ கடிதம் இதுவரை வெளியிடபடவில்லை  என்பது  குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், டிச.30-
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் விலகியுள்ளார்.

டான்ஸ்ரீ மொகிதீனின் விலகலை  பெர்சத்து பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி,   தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துன் பைசால் இஸ்மாயில் அஜிஸ் ஆகியோர் உறுதி செய்தனர்.

முன்னாள் பிரதமரான அவர் நேற்று இரவு கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களின் வாட்சாப் குழுவில்  இந்த அறிவிப்பை பற்றித் தெரிவித்ததாகத் தெரிகிறது.

இதனிடையே கட்சியின் உள் வட்டாரத்தில் ஒருவர், டான்ஸ்ரீ மொகிதீன் தேசியக் கூட்டணி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை இறுதி செய்துவிட்டதாக அறிவித்ததாகத் துன் பைசால் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் டான்ஸ்ரீ மொகிதீனின் நோக்கத்தை சில உச்சமன்ற உறுப்பினர்கள் எதிர்த்ததாகவும், அவர்கள் மொகிதீனிடம் தனது முடிவை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர், டிச. 29-

கெடா மற்றும் பினாங்கில் திட்டமிடல் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ‘கேங் ராமெஸ்’ என அழைக்கப்படும் கும்பலை Ops Tiga சிறப்பு நடவடிக்கையின் மூலம் போலீசார் முறியடித்துள்ளனர்.

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை, கெடா மாநில போலீஸ் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் புக்கிட் அமான் சிறப்பு பிரிவு இணைந்து
நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை நடத்திய இந்த நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலை, ஆயுதம் பயன்படுத்திய குழுக் கொள்ளை, கடுமையான தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் இந்த குழு ஈடுபட்டதாக போலீசார் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.

முன்னதாக ‘கேங் 35'  பின்னர் ‘கேங் ரூசா போய்’ என அழைக்கப்பட்ட இந்தக் குழு, தற்போது ‘கேங் ரமேஷ்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தது.

சுங்கை பெட்டானி, குலிம் மற்றும் புலாவ் பினாங்கின் சில பகுதிகளில் கொள்ளை, கொடூர தாக்குதல், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற வன்முறை குற்றங்களில் இந்தக் குழு தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சுமார் 35 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழுவின் தலைவர் ஜி.ஆர். ரமேஷ் உட்பட 15 பேர் தற்போது தலைமறைவாக உள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவின் இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

மேலும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் முன்பிருந்தே கொலை, ஆயுதம் பயன்படுத்திய குழுக் கொள்ளை, கடுமையான காயம் ஏற்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 17 பேரில், ஏழு பேர் 2020 ஆம் ஆண்டு குற்றச் சட்டத்தின் பிரிவு 130Vன் கீழ் தண்டனை பெற்றவர்கள் என்றும், ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து 2024 ஜனவரியில் விடுதலையான பின்னர், மீண்டும் அதிக ஆக்கிரமிப்புடன் இந்தக் குற்றக்குழுவை அமைத்ததாகவும் டத்தோ குமார் கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் SOSMA சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வழக்கு ஆவணங்கள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு, சுங்கை பெட்டானி செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர், டிச.29-
தமிழ் நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள பிரபல பிஎஸ்ஜி கல்லூரி அரங்கத்தில்
ஆத்ம யோகா அறக்கட்டளை சார்பில்  “மாறுவோம் முன்னேறுவோம்” என்கிற தலைப்பில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1,800 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்நிகழ்வில்,  மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான
மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களுக்கு வாழும் வழிகாட்டி என்ற  உயரிய விருதை திரு ஆசான்ஜி அவர்கள் வழங்கினார்.

டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களின் மனித நேயச் சேவை ,  இலக்கியத்துக்கும், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கும் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, மலேசிய நாட்டில் இரண்டு தவணை துணை அமைச்சராக, மனித வள அமைச்சராக ஆற்றிய சாதனைப் பணிகள், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் மனித வள அமைச்சராக பொறுப்பேற்றிருந்த போது மொழி ,மதம், இனம் கடந்த அவரது மக்கள் நலப் பணி மற்றும் கடல் கடந்த  அவரது  எண்ணற்ற சமூக சேவைகளைக் கருத்தில் கொண்டு  இந்த விருதுக்கு டத்தோ ஸ்ரீ டாக்டர் எம் சரவணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக ஆசான்ஜி அவர்கள் கூறினார்.

மொத்தம் 12 ஆளுமைகளை இறுதி செய்து அதில் எல்லா நிலைகளிலும் தகுதி மிகப்பெற்ற  மாபெரும் தலைவராக மாண்புமிகு டத்தோ சரவணன் தெரிவு செய்யப்பட்டார் என்று ஆசான்ஜி அவர்கள்  குறிப்பிட்டார்.

மேலும் தனது வாழ்த்துரையில், அதிகாரங்களைத் தன் தலைக்கு ஏற்றாமல் எளிய மக்களும் தன்னை அணுகக் கூடியவராக மலேசியாவில் இருக்கும் ஒரு மாபெரும் ஆளுமை மிக்க தலைவராகத் திகழ்கிறார் டத்தோ ஸ்ரீ சரவணன் என்று அவர் புகழாரம் சூட்டினார்.

இவரது வாழ்வும் வார்த்தைகளும் இன்றைய இளைய தலைமுறையின் முனேற்றத்திற்கு வழிகாட்டியாக  இருப்பதினால் “வாழும் வழிகாட்டி” என்ற  இந்த உயரிய விருதுக்கு மிகத் தகுதியானவர் மாண்புமிகு டத்தோ  ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் என்று திரு ஆசான்ஜி அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.

விழா அரங்கில்  கூடியிருந்த அனைவரின் ஏகோபித்த பலத்த கரவொலியோடு விருது வழங்கும் நிகழ்வு இனிதே நடைபெற்றது.

கோலாலம்பூர், டிச 29-
பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டு கட்டுவதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.

மின் படிக்கட்டு கட்டினால் முதியவர்கள் தாராளமாக மேலே சென்று முருகனை வழிபட்டு திரும்பலாம்.

நாங்களும் அனுமதி கொடுக்க கோரி பலமுறை கோரிக்கையை முன் வைத்து விட்டோம்.

ஆனால் இன்று வரையிலும் அனுமதி கிடைக்கவில்லை. இது எங்களுக்கு பெரும் வேதனையை அளிக்கிறது.

மின் படிக்கட்டு கட்டுவதற்கு அனுமதி கிடைத்தால் திட்டமிட்டபடி கட்டி முடிப்போம்.

மின் படிக்கட்டு கட்டுவதற்கு தேவையான அனைத்து விண்ணப்பங்களையும் சமர்ப்பித்து விட்டோம்.

வரும் தைப்பூசம் கொண்டாட்டத்தின் போது ஒரு நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இருப்பினும் பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்படும் என்ற பிரதமர் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசாரின் வாக்குறுதி என்னவானது என்றும் அவர் கேள்வியை எழுப்பினார்.

பக்தர்களின் நலன்களுக்கான பத்துமலையில் பல மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

3,000 பேர் அமரக் கூடிய பல்நோக்கு மண்டபம் கட்டும் பணியும் தொடங்கப்படவுள்ளது.

ஆனால் இத் திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பது என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே உள்ளது.

இந்நிலையில் தான் இவ்வாண்டு தொடக்கத்தில்  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி உட்பட பல அமைச்சர்கள், துணையமைச்சர்கள், தலைவர்கள் பத்துமலைக்கு வந்தனர்.

அப்போது இப் பிரச்சினைக்கு எல்லாம் விரைவில் தீர்வுக் காணப்படும். அனுமதி கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி வழங்கினார் என்று
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார், சந்திரசேகரன், செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ அழகன், அஸ்ட்ரோ நிறுவனத்தை சேர்ந்த ராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், டிச.26-
1எம்டிபி வழக்கு விசாரணையில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் பாதுகாப்பு குழு சமர்பித்த அரபு நன்கொடை கடிதத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

மேலும் அந்த ஆவணம் போலியானது என்று வலியுறுத்தியுள்ளது.

இன்று காலை நீதிமன்றத்தின் தீர்ப்பைப் படித்த நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா, நஜிப் இந்த நிதியை அரபு நன்கொடைகள் என்று கூறியதே அதை நம்ப முடியாததாக மாற்றியதாகக் கூறினார்.

சவூதி அரேபியா நன்கொடை விவரிப்புக்கு எந்த தகுதியும் இல்லை. சவூதி நன்கொடை கடிதங்கள் போலியானவை.

மேலும் பணம் உண்மையில் 1 எம்டிபி நிதியிலிருந்து வந்தது என்பதை ஆதாரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

சவூதி நன்கொடைக்கான வாதங்கள் நம்பகமானவை அல்ல என்பதை இந்த நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

மேலும் எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 23 இன் கீழ் லஞ்சம் என்ற அனுமானத்தை அழுத்தமாக மறுக்கத் தவறிவிட்டது என்று நீதிபதி கூறினார்.

கோலாலம்பூர் டிசம்பர் -25

அன்பின் மகுதுவத்தை  உலகம் முழுவதும் பரப்பும் ஒரு சிறப்பு வாய்ந்த திருநாளாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது.

மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தனது வாழ்த்து செய்தியில்  தெரிவித்தார்.

இயேசு நாதரின்  பிறந்தநாளை நினைவுகூரும் இந்த புனித கிறிஸ்துமஸ் நாளில் உங்கள் அனைவரின் வாழ்க்கையில் அன்பும், கருணையும், அமைதியும், ஒற்றுமையும் , நம்பிக்கையால் நிரம்பி விளங்க  வேண்டும்.

மனித நேயம், சகோதரத்துவம், தியாகம் போன்ற உயரிய பண்புகளை உலகிற்கு எடுத்துச் சொன்ன இயேசுவின் போதனைகள், இன்றைய காலகட்டத்தில் இன்னும் அதிகமாக தேவைப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, அது மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் ஓர் ஆன்மீகப் பிணைப்பாகவும் திகழ்கிறது.

மதம், இனம், மொழி என்ற எல்லைகளை கடந்து, அன்பின் செய்தியை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு சிறப்பு வாய்ந்த திருநாளாக கிறிஸ்மஸ் விளங்குகிறது.

அந்த வகையில், பல இன மக்கள் இணைந்து வாழும் நமது மலேசிய நாட்டில், ஒற்றுமையும் பரஸ்பர மரியாதையும் மேலும் வலுப்பெற இந்த நாள் ஓர் அழகிய நினைவூட்டலாக அமைகிறது.

வருட இறுதி மாதம் என்றாலே அது கொண்டாட்டங்கள், விடுமுறைகள், குடும்பச் சந்திப்புகள், உறவுகளோடு ஒன்றுகூடல் என மகிழ்ச்சியால் நிறைந்த மாதமாக இருக்கிறது.

பொது விடுமுறைகள், சொந்த விடுமுறைகள் என பலரும் தங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதும், நீண்ட நாட்களாகக் காணாத உறவுகளைச் சந்திப்பதும் இந்த மாதத்தின் தனிச்சிறப்பாகும்.

கிறிஸ்மஸ் தினத்தைத் தொடர்ந்து வரும் ஆங்கிலப் புத்தாண்டை  உலக மக்கள் அனைவரும் ஒன்றாக கொண்டாடும் ஒரு புதிய தொடக்கத்தின் சின்னமாகத் திகழ்கிறது.

கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, புதிய நம்பிக்கைகள், புதிய இலக்குகள், புதிய கனவுகளோடு முன்னேறும் ஒரு வாய்ப்பாக இந்த புத்தாண்டு அமையட்டும் என டத்தோ ஸ்ரீ எம்.சரவணன்  தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

உலக மனிதர்கள் அனைவரிடத்திலும், அன்பையும், நல்லிணக்கத்தையும் போதிக்கப் பிறந்து வந்த இயேசுபிரானின் மகத்தான பிறப்பை, கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் மலேசியக் கிறிஸ்துவ சமயத்தினர் அனைவருக்கும் குறிப்பாக, இந்திய கிறிஸ்துவ சமூகத்திற்கு எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்மைக் கடந்து போகும் 2025-ஆம் ஆண்டில் உலகின் பல நாடுகளில் இன, மத ரீதியான மோதல்களும், கொலைகளும் நடந்திருப்பதைக் காணும்போது இயேசுபிரானின் அன்பு சார்ந்த போதனைகள் இன்னும் நமக்குத் தேவை என்பதை நாம் உணர்கிறோம்.

மற்ற மதத்தினரின் போற்றுதலுக்கு உரிய அவரின் போதனைகளை நாமும் இயன்றவரை பின்பற்றி, பல இனம் கொண்ட நம் மலேசிய சமுதாயத்தில் ஒருவருக்கொருவர் மரியாதையும், அன்பும் செலுத்துவோம்.

மஇகாவைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியாக நாம் அனைத்து இன, மத சகோதரர்களை காலம் காலமாக அரவணைத்து வந்திருக்கிறோம். பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட நமது மஇகா கட்சியில் பல தருணங்களில் இந்தியக் கிறிஸ்துவ சமூகத்தினருக்கு அரசாங்கத்திலும் கட்சியிலும் வாய்ப்புகளை பாரபட்சமின்றி வழங்கியிருக்கிறோம்.

கடந்த காலங்களில் பல கிறிஸ்துவ அன்பர்கள், மஇகாவின் சார்பில் அரசாங்கப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள். கட்சியின் உயர் பதவிகளுக்குத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது மஇகாவின் தேசிய உதவித் தலைவராகத் தேர்தல் மூலம் பேராளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டத்தோ நெல்சன் ரங்கநாதன் அவர்கள் செனட்டராகவும் மஇகாவைப் பிரதிநிதித்து நாடாளுமன்றத்தில் இடம் பெற்றிருந்தார்.

மஇகாவின் இத்தகைய, அனைத்து மத, இன சமூகத்தினரையும் அரவணைக்கும் அரசியல் நிலைப்பாடு என்றென்றும் தொடரும் என உறுதி கூறுகிறேன்.

கிறிஸ்துவ அன்பர்கள் தேவாலயங்களுக்கு சென்றும், மற்ற இன சகோதரர்களைத் தங்களின் இல்லங்களுக்கு அழைத்து திறந்த இல்ல பொது உபசரிப்புகள் நடத்தியும் கிறிஸ்துமஸ் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென மஇகாவின் சார்பிலும் எனது தனிப்பட்ட சார்பிலும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்

செமிஞ்யே, டிசம்பர் 24 –

செமிஞ்யே சட்டமன்றத்தின் இந்தியர் சிறப்பு பிரிவின் ஏற்பாட்டில், செமிஞ்யே சட்டமன்ற உறுப்பினர் உஸ்தாட் நுஷி மக்ஃபோஸ் அவர்களுடன் இணைந்து  2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது, செமிஞ்யே சட்டமன்ற பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மக்களுக்கு உணவு கூடைகள் உள்ளிட்ட அன்பளிப்புகள் வழங்கப்பட்டன என நிகழ்வின் ஏற்பாட்டாளரும், செமிஞ்யே சட்டமன்றத்தின் இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரியுமான பூபாலன் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்விற்கு டத்தோ டாக்டர் பன்னீர்செல்வம் அவர்கள் ஆதரவு வழங்கியதுடன், மக்களுக்கு உணவுக் கூடைகளை நேரடியாக வழங்கி தனது பங்களிப்பையும் வெளிப்படுத்தினார்.

கிறிஸ்துமஸ் 2025 கொண்டாட்டம், மாற்று திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை  இந்த பண்டிகை காலம் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது என நிகழ்ச்சி பூபாலன்  தெரிவித்தார்

இந்த நிகழ்வின் வாயிலாக, உதவி பொருட்கள் அனைத்தும் முறையாக  திட்டமிட்ட வகையில் தேவையான மக்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் பூபாலன் அவர்கள் சிறப்பாக மேற்கொண்டார்.

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மத நல்லிணக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இந்த நிகழ்வு அமைந்ததாக அவர் தெரிவித்ததுடன், நாட்டில் வாழும் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்வதாகவும் பூபாலன் தெரிவித்தார்.

கோலாலம்பூர் டிச 24-
இராஜ ராஜ சோழன்
(முதலாம் இராஜராஜன்) சோழப் பேரரசின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவராக வலம் வந்தவர்.

இவரது இயற்பெயர் அருண்மொழி வர்மன்.

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து, சோழப் பேரரசை விரிவுபடுத்தி, கலை மற்றும் நிர்வாகத்தில் சிறந்து விளங்கினார்.

தஞ்சைப் பெரிய கோவிலை
கட்டியவர் இவரே.

இவரது ஆட்சிக்காலம் "பொற்காலம்" எனப் போற்றப்படுகிறது.

இராஜ ராஜ சோழனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரும் ஜனவரி 25 ஆம் தேதி தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் டெம்பள் ஆஃப் ஆர்ட்ஸ் பைனஸ் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் விழா நடைப்பெறுகிறது என்று விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் டத்தோ இராமன் தெரிவித்தார்.

பிற்பகல் 2 மணிக்கு மேல் தொடங்கும் இந்த விழாவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த  சுகி சிவம் அவர்கள் இராஜ ராஜ சோழனின் வரலாற்று பெருமையை பற்றி பேசுவார்.

அதேபோல் மலேசியாவைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர் பாண்டித்துரை அவர்கள் கடாரம் கொண்டான் என்ற தலைப்பில் இராஜ ராஜேந்திரன் சோழனை பற்றி பேசுவார்.

ம இகா தேசிய துணைத் தலைவரரு. தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்கள் இந்த விழாவுக்கு தலைமை ஏற்கிறார்.

சுமார் 600 பேர் அமரும் இந்த மண்டபத்தில் தற்போது 100 வெள்ளி மற்றும் 250 வெள்ளி என்று டிக்கெட் விற்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

இராஜ ராஜ சோழன் ஒரு வரலாற்று நாயகன் மட்டுமில்லாமல் தமிழ் இனத்தின் மாபெரும் அரசனாக விளங்கியவர்.

இவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் இன்னமும் உலக வரலாற்றில் ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது.

இராஜ ராஜ சோழனின் வரலாற்று பெருமையை மலேசியத் தமிழர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த விழா மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ப்புக்கு : 016-2226001 சுமதி 012-3010716 சுவாமிநாதன்

கோலாலம்பூர், டிச.21-
அண்மையில் ஒரு மலாய் ஊடகத்தில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  மிகவும் தெளிவாக மற்ற இந்திய கட்சிகளை தேசிய முன்னணியில் இணைப்பதில் ம.இ.காவுற்கு எந்த அச்சியேபமும் இல்லை என கூறியுள்ளார்.

அந்த தகவலுக்கு பிறகு, இன்று மக்கள் சக்தி மாநாட்டில்  மற்ற கட்சிகளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பதால் ஒரு  புதிய குற்றச்சாட்டை ம.இ.கா மீது வைத்து  விட்டார் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி என ம.இ.காவின் தேசியத் துணைத்  தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பல ஆண்டுகளாக அனைத்து இந்திய கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அதை இந்திய கட்சிகளும் நன்கு அறிவார்கள்.

ஐ.பி.எப் மாநாட்டில் ஜாஹிட் பேசுகையில், சில இந்திய கட்சிகள் தேசிய முன்னணியில் இணைய  உறுப்பு கட்சிகள்  தடையாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

அதற்கு பிறகு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ம.இ.கா எந்த ஒரு இந்திய கட்சியும் உள்ளே வர  எப்போதும் தடுக்கவில்லை.  தாராளமாக அவர்களை இணையுங்கள் என ம.இ.காவின் நிலைப்பாட்டை  தெளிவாக தெரிவித்து விட்டார்.

இன்று மக்கள் சக்தி மாநாட்டில் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்  குற்றச்சாட்டை ம.இ.கா பக்கம் திருப்பி விட்டுவிட்டார் தேசிய முன்னணி தலைவர்.

எங்களை பொறுத்த வரை ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  தெளிவாக சொல்லிவிட்டார், எந்த இந்திய கட்சிகளும்  உள்ளே வர ம.இ.கா தடையாக இருந்தது இல்லை என டத்தோ ஸ்ரீ சரவணன் பதில் அடி கொடுத்தார்.

செய்தி : வெற்றி விக்டர்

கோலாலம்பூர், டிச. 19-
சிங்கப்பூரில் வேலை செய்யும் 4 லட்சத்திற்கும் அதிகமான  மலேசியத் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய காப்புறுதி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று உறுதி அளித்தார்.

மனிதவள அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட அவர், இன்று சொக்சோ தலைமையகத்திற்கு அதிகாரப்பூர்வமாக மேற்கொண்ட வருகையின் போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

சொக்சோவின்கீழ் உள்ள நான்கு சட்டங்களை உள்ளடக்கிய அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் அடுத்த மாதம் முதல் முழுமையாக இணையத்தில் சமர்ப்பிக்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நடவடிக்கை பங்களிப்பாளர்களுக்கு விஷயங்களை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அவர்கள் இனி சொக்சோ அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை என்பதால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

நாட்டில் உள்ள 10 மில்லியனுக்கும் அதிகமான முறையான, முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதி செய்வதற்காக, அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் இணையத்தில் பதிவு செய்ய அனுமதிக்குமாறு சொக்சோவுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

இது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4), சுயதொழில் செய்பவர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 (சட்டம் 789), வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்புச் சட்டம் 2017 (சட்டம் 800), இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2022 (சட்டம் 838) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

ஜொகூர் காஸ்வேயைக் கடக்கும் கிட்டத்தட்ட 400,000 உள்ளூர் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புப் பெறுவதில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அடுத்த ஆண்டு முதல் ஒரு சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் முன்னோடியாக காப்புறுதித் திட்டத்தை செயல்படுத்துவ தாக அவர் சொன்னார்.

புதிய மனிதவள அமைச்சராக, தொழிலாளர்களின் நலனுக்காக 24 மணி நேர பாதுகாப்புத் திட்டம் தொடர்ச்சியாகவும், சுமூகமாகவும், திறம்படவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், வேலை நேரத்திற்கு வெளியே விபத்துகள் ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாப்பதற்கும் நான் உறுதி கொண்டுள்ளேன் என்றார்.

பெட்டாலிங் ஜெயா, டிச. 16-
தேசிய வகை எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின்   பசுமை மூலிகைப் பூங்கா கண்காட்சி  திட்டத்தில்  மூலிகைப் பூங்கா மற்றும் ஆய்வுக்கண்காட்சி மிகச் சிறப்பாக இன்று டிசம்பர் 16 ஆம் திகதி பள்ளியில்  நடைபெற்றது.

விழாவின் சிறப்பு வருகையாளராக பெட்டாலிங் உத்தாமா மாவட்டத்தின் இடைநிலை & படிவம் 6 க்கான உதவி அதிகாரியுமான மதிப்புமிகு குஹானிஸ் பிந்தி முகமட் சைன் அவர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அனைத்து பள்ளிகளும் மூலிகைத் தாவரங்களின்  மகிமையைப் போற்றும்  நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
மாணவர்கள்  வகுப்பறைக் கற்றல் நடவடிக்கையில் மட்டும் ஈடுபட்டால் போதாது ,மாறாக வாழ்வியல் தொடர்பான பயனுள்ள நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆண்டு இறுதியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த எப்பிங்காம்  ஆசிரியர்கள் மேற்கொண்ட நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குறியது. அந்த வகையில் பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர்  வீ. சுகுணவதி அவர்கள் தமது சிறப்புரையில் ஆண்டு இறுதியில்  பள்ளி மாணவர்களின் வருகையை  அதிகரிக்கச் செய்ய இந்நடவடிக்கை எங்களுக்கு பெரிதும் துணை புரிந்தது என்றார்.

எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மாணவர்களிடம் அதிக ஆற்றல் உள்ளது. அதனை வெளிக்கொணரவே  மூலிகைத் தாவரங்களின் மகிமையை ஒட்டி மாணவர்களுக்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. காய்கறிகள் சாப்பிடுவது என்றால் பிள்ளைகளுக்குப் பிடிக்காது. அதனை எவ்வாறு சத்துள்ள உணவாக மாற்றி உண்ணலாம் என்பதை இந்நிகழ்வின் வழி மாணவர்கள் அறிந்துக் கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வின் மற்றும் ஒரு சிறப்பு அம்சமாக மாணவர்கள் மூலிகைத் தாவரங்கள் அதில் உருவாக்கக் கூடிய மூலிகைப் பொருட்கள் தொடர்பான விளக்கங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அனைவரும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிக தன்முனைப்போடு  இந்நடவடிக்கையில் ஈடுபட்டு பள்ளிக்கு பெருமை சேர்ப்பர் என்று எதிர்பார்ப்பதாகக் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரான குமாரி கார்த்தினா ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு வகை மூலிகைத் தாவரங்கள் கொடுக்கப்பட்டது.
ஏறக்குறைய 4 மாதங்கள் மூலிகை தாவரம் உருவாக்கவும் மூலிகைப் பொருட்கள் தயாரிக்க மாணவரைத் தயார் படுத்தவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலர் பள்ளி முதல் ஆண்டு 6 வரையிலான மாணவர்கள்  மூலிகைத் தாவரத்தில் பொருட்கள் செய்யும் நடவடிக்கையில் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் மாணவரின் பார்வைக்காக பிராணிகளின் கண்காட்சி இடம்பெற்றது மிகவும் சிறப்பாக அமைந்தது. கற்பித்தல் மூலம் வடிவமைப்பு (KmR), திட்ட அடிப்படையிலான கற்றல் (PBL), TS25 திட்டத்தில்  மூலிகைப் பூங்கா மற்றும் ஆய்வுக்கண்காட்சியும் மிகச் சிறப்பாக   நடந்தது.

அனைவரும் எதிர்வரும் காலங்களில் மேலும் அதிக தன்முனைப்போடு  இந்நடவடிக்கையில் ஈடுபட்டு பள்ளிக்கு பெருமை சேர்ப்பர் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஒவ்வொரு ஆண்டுக்கும் இரண்டு வகை மூலிகைத் தாவரங்கள் கொடுக்கப்பட்டது.
ஏறக்குறைய 4 மாதங்கள் மூலிகை தாவரம் உருவாக்கவும் மூலிகைப் பொருட்கள் தயாரிக்க மாணவரைத் தயார் படுத்தவும் எடுத்துக் கொள்ளப்பட்டது.பாலர் பள்ளி முதல் ஆண்டு 6 வரையிலான மாணவர்கள்  மூலிகைத் தாவரத்தில் பொருட்கள் செய்யும் நடவடிக்கையில் கலந்துக் கொண்டனர். நிகழ்வில் மாணவரின் பார்வைக்காக பிராணிகளின் கண்காட்சி இடம்பெற்றது மிகவும் சிறப்பாக அமைந்தது.

புதிய அமைச்சரவையின் மாற்றத்தை பிரதமர் அறிவித்துள்ளார். இதில் சில அமைச்சர் மற்றும் துணையமைச்சர் பதவிகள் மாற்றப்பட்டன.

அந்த வகையில் இந்திய அமைச்சர்கள் கைவசம் இருந்த மனிதள அமைச்சு இதற்கு முன்னர் மாற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அறிவிப்பில் அந்த பதவி மீண்டும் இந்தியரின் கைவசம் திரும்பியது.

இதற்கு முன்னர் தொழில்முனைவோர்  மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சராக பதவி வகித்த டத்தோஸ்ரீ ரமணன் தற்போது மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த அமைச்சர் பதவியை ஜசெகவை சேர்ந்த ஸ்டீவன் சிம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், டிச.16-
இந்திய சமுதாயத்திற்காக தைரியமாக குரல் கொடுப்பதற்கு மஇகாதான் இருக்கிறது என்பதை இந்திய மக்கள் உணர்ந்து விட்டனர் என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மஇகாவிற்கு அரசாங்கத்தில் எந்த பதவியும் இல்லாதபோதும் கட்சி முறையாக செயல்பட்டு வருகிறது. கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தற்போது மஇகா வலுவான கட்சியாக செயல்படுகிறது.

ஆகையால் கட்சியின் தொகுதி மற்றும் கிளைத் தலைவர்களும் செயலவை உறுப்பினர்களும் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அதிக நாட்டம் செலுத்த வேண்டுமென அவர் சொன்னார்.

இதற்கிடையில் கட்சியை வலுப்படுத்துவதற்கு தன்னுடன் இணைந்து தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் அதிகம் பாடுபட்டு வருகிறார். ஆகையால் அவருக்கு நான் கடமை பட்டுள்ளதாக டான்ஸ்ரீ விக்கி தெரிவித்தார்.

கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ஏற்பாட்டில் இன்று நேதாஜி மண்டபத்தில் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் 60ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைப்பெற்றது.

மற்ற கட்சிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இன்று டான்ஸ்ரீ-இன் பிறந்த நாள் விழாவில் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளதாக கூறிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், தெரிந்திருந்தால் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட்டை இந்த கூட்டத்திற்கு அழைத்து அரசியல் அறிவிப்பை செய்திருக்கலாம் என நகைச்சுவையாக கூறினார்.

டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதை இந்த கூட்டம் உணர்த்துவதாக அவர் சொன்னார்.

டான்ஸ்ரீ பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கவிபேரரசு வைரமுத்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர்,டிச.12-
நாட்டின் இந்திய கட்சிகளின் ஒன்றான ஐ.பி.எஃப் கட்சியின் 33ஆவது பொது பேரவை எதிர்வரும் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் மாலை 4 மணி வரை  செமிஞ்சே ஏகோஹில் கிளாப் 360 எனும் இடத்தில் நடைப்பெறுகிறது.

இந்த பேரவையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க தேசிய முன்னணி கட்சியின் தலைவரும் துணை பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹமிடி  சிறப்பு வருகை புரிய உள்ளதாக  கட்சியின் செயலாளர் மோகன் முத்துசாமி தெரிவித்தார்.
 
ஐ.பி.எஃப் கட்சி தேசிய முன்னணியின் தோழமை கட்சியாக  பல ஆண்டுகள் இருந்த வந்த நிலையில், உறுப்பு கட்சியாக உருமாற பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

அந்த வகையில், தற்போது தேசிய முன்னணியை விட்டு ம.இ.கா - ம.சீ.ச விலகும் சூழல் உருவாகி தலைவர்களிடையே கருத்து மோதல் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ம.இ.கா மாநாட்டில் தேசிய முன்னனி தலைவர் உட்பட பலருக்கு அழைப்பு இல்லை. இந்த கால சூழலில், இப்போது ஐ.பி.எஃப் மாநாட்டை திறந்து வைக்க தேசிய முன்னனி தலைவர் வருகிறார்.

அங்கு அவரது உரை எப்படி இருக்க போகிறது என அரசியல் வட்டாரம் காத்து கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக உறுப்பு கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்ற ஐ.பி.எஃப் கட்சியின் கனவுகளுக்கு இந்த பேரவை மேடை கதவை திறந்து விடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எது எப்படியாகினும், ஐ.பி.எஃப் மாநாட்டிற்கு  துணை பிரதமரின் வருகை  பெரிய எதிர்பார்ப்பையும் அவர் என்ன சொல்ல போகிறார் என்ற ஆர்வத்தையும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

கோலாலம்பூர், டிச.9-
தமிழ்ப்பள்ளிகளின் முன்னேற்றத்தையும், மாணவர்களின் நன்னெறி வளர்ச்சியையும் முன்னிருத்தி செயல்பட்டு வரும் மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேரவை (பெர்த்தாமா), தனது புதிய கல்விசார் முயற்சியாக ‘வாசிப்பை நேசிப்போம் – நித்திரைக் கதைகள்’ எனும் கதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த தொகுப்பினை வாங்கி தாங்கள் படித்த முன்னாள் பள்ளிகளுக்கு வழங்கும்படி பேரவை மக்களை கேட்டுக் கொள்கிறது.

பேரவையின் து. தலைவர் குமரன் மாரிமுத்து மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் ராமசங்கரன் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெர்த்தாமாவின் நோக்கம், நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களை ஒன்றிணைத்து ஒரே குடையின் கீழ் செயல்படச் செய்வதே என கூறப்பட்டது.

தற்போது 528 தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் இயங்கினாலும், வெறும் 120 பள்ளிகளுக்கு மட்டுமே முன்னாள் மாணவர் சங்கங்கள் உள்ளன என்பதைக் கவலையுடன் பேரவை தெரிவித்தது. சங்கங்கள் இயங்கும் பள்ளிகளில் பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் பல பள்ளிகளில் இத்தகைய அமைப்புகள் உருவாக வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.

பெர்த்தாமா தற்போது வெளியிடும் 10 புத்தகங்கள் அடங்கிய ‘நித்திரைக் கதைகள்’ தொகுப்பில் மொத்தம் 61 சிறுவர் கதைகள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கதைகள் குழந்தைகளுக்கு நன்னெறி, ஒழுக்கம், கருணை போன்ற உயர்ந்த பண்புகளை விதைப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

புத்தக விற்பனையின் வருவாய் முழுவதும் பேரவையின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், இந்த புத்தகத் தொகுப்பை வாங்கி மாணவர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் பேரவை நல்லுள்ளங்களை மீண்டும் கேட்டுக் கொண்டது.

கல்வி சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க ஒருமுறை நிகழ்ச்சிகள் போதாது; தொடர்ந்து, திட்டமிட்டு செயல்படும் பணிகளே பள்ளிகளுக்கு உண்மையான பலன்களை வழங்கும் என பெர்த்தாமா வலியுறுத்தியது. அதனை முன்னெடுக்க போதுமான நிதி நமக்கு தேவை என்றும் அவர்கள் கூறினர்.

பெர்த்தாமா நடைமுறைப்படுத்திய தமிழ்மொழி விழா சிறப்பாக நடத்தப்பட்டதாகவும், ஆனால் மானியம் பற்றாக்குறையால் அது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் தாக்கம் சிறப்பாக இருந்ததால் அதனை மற்ற தரப்புகள் தொடர்ந்து நடத்தி வருவதாக பார்த்திபன் கூறினார்.

அதே நேரத்தில், மாநில அளவிலும் செயல்பாடுகளை வலுப்படுத்த நான்கு மாநிலங்களில் மாநில பேரவைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பங்களிப்பு, பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக பெர்த்தாமா வலியுறுத்தி, மேலும் பலர் இதில் இணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டது.

கோலாலம்பூர், டிச 9-
ஜோகூர், மூவார் பகுதியை பூர்வீகமாக கொண்ட பேராக் மாநில சொக்சோ துறை அதிகாரி உமாதாஸ் பிள்ளை மற்றும் சரஸ்வதி தேவி தம்பதியரின் புதல்வி லுசிந்தரா பிள்ளை அண்மையில் மலாயா பல்கலைகழத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறந்த தேர்ச்சியோடு சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.

அவர் நேரத்தை சிறப்பாக நிர்வாகித்து படித்து முதுகலை கல்வியை அவர் நிறைவு செய்துள்ளார்.

அதே வேளை, லுசிந்திரா பிள்ளை வழக்கறிஞராகவும் பணிபுரித்து வருகிறார்.

அடுத்து, சட்டத்துறையில் முனைவர் பட்டப் படிப்பையும் தொடரவிருப்பதாக கூறினார்.

மேலும் தன்னுடைய குடும்பத்தினரின் ஊக்குவிப்பினால் தாம் முதுகலை படிப்பை நிறைவு செய்துள்ளதை தொடர்ந்து இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், அவருடைய முதுகலை பட்டப் படிப்பு சுமூகமாக நிறைவுப் பெற விரிவுரையாளர்களும் நண்பர்களும் உறுத்துணையாக இருந்தாக அவர் குறிப்பிட்டார்.

ஈப்போ, டிச 9-
சுற்று வட்டார மக்களுக்கு பல வகையான சேவைகளை செய்து வரும் துரோனோ சட்டமன்ற உறுப்பினர் ஸ்டிவன் தீ சியாங் நேற்று 65 அங்குலம் கொண்ட நான்கு ஸ்மார்ட் ரக தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் , பெற்றோர் சங்கத் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் கல்விக்கு வழிவகுக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன.

இது மாணவர்களுக்கு மட்டும் நன்மையல்ல. மாறாக, ஆசிரியர்களின் போதனைக்கு துணையாக இருக்கும். பாடங்களை போதிக்க ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டி அவசியமாகிறது என ஸ்டிவன் தீ சியாங் கூறினார்.

கோலாலம்பூர்,டிச.4-
கடந்த நவம்பர் 24 ஆம் திகதி  மலாக்கா டுரியான் துங்கால்  பகுதியில் 3 ஆடவர்கள் போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் சுடப்பட்டு மரணம் அடைந்தனர்.

இது தொடர்பாக  மலாக்கா மாநில போலீஸ் தலைமையகம் கொடுத்த செய்தி அறிக்கையில் போலீசார் நடத்திய சோதனையின் போது 3 நபர்கள் பாராங் கத்தியை கொண்டு போலீசாரை தாக்க முற்பட்டபோது, ஒரு  போலீஸ் அதிகாரிக்கு வெட்டு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

தற்காப்பு காரணமாக  அந்த மூவரை அதிகாரிகள் சுட்டதாகவும் அதில் இருவருக்கு  ஏராளமான குற்றப் பதிவு உள்ளதாகவும் இன்னொருவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை என தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து இப்போது பதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தார்கள்  தங்களது வழக்கறிஞருடன் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஒரு முரண்பாடான தகவலையும் ஒரு  உரையாடல் பதிவையும் வெளியிட்டதுடன் இது தொடர்பாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

இதனை தொடர்ந்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்பிரிவு  துறை இந்த விசாரணை கையில் எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்துரைத்த ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும்  தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், முதலில் புக்கிட்  அமான் போலீஸ் தலைமையகத்திற்கு தனது நன்றியும் பாராட்டையும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, முரண்பாடான சில விவரங்கள் இருப்பதால் முழு விசாரணை  செய்வதின் வாயிலாக அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். போலீஸ் படை மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு எழும்போது  அரச மலேசிய போலீஸ் படை நாட்டின் சட்டம் மீது களங்கம் வராமல் இருக்க புக்கிட் அமான் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குறியது என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஒரு குரல் பதிவின் வாயிலாக சந்தேகத்தை எழுப்பியுள்ள குடும்ப உறுப்பினர்களும் நியாயம் கேட்டு நிற்கின்றனர்.
அந்த வகையில் எந்த  ஒரு தலையீடும் இல்லாத விசாரணை நடத்தப்படவேண்டும். அதற்கு சுதந்திரமான விசாரணை   ஆணையத்தை அமைக்க  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவு விட வேண்டும் என டத்தோஸ்ரீ எம்.சரவணன்  அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

இந்த விசாரணை  ஆணையம் அமைக்க பட வேண்டும் என  தாம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு  அதிகாரபூர்வ கடித்தை அனுப்பியுள்ளதாகவும்  டத்தோஸ்ரீ எம் .சரவணன் தெரிவித்தார்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நீதி அனைத்து மக்களுக்கு சமமாக கிடைக்க வேண்டுமெனவும் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

செய்தி : வெற்றி விக்டர்
 

ஈப்போ, டிச 4-
2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பேராக் மாநில அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது வரவேற்கத்தக்கது என ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான்‌ தெரிவித்துள்ளார்.

பேராக் மாநில ஒற்றுமை அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு  இரண்டு மாத போனஸ் வழங்க தீர்மானித்துள்ளனர்.

  வரலாற்றுலேயே இதுவே சிறப்பான பேராக் மாநில பட்ஜெட் என்று கூறலாம்.

மேலும் பேராக் மாநிலத்திற்கு வருகையளிக்கும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சியான செய்தி என்றார்.

2023 ஆம்‌ ஆண்டு தொடங்கி பேராக் மாநில பட்ஜெட் அதிகரித்துள்ளது. மடானி அரசாங்கம் கீழ் அனைத்துமே வெற்றி என்றார்.

கோலாலம்பூர், டிச 4-
பள்ளி விடுமுறை தொடங்கவிருக்கும் இந்த காலக்கட்டத்தில் அடுத்த வருடம் பள்ளி பொருட்கள் வாங்கும் செலவும் பெற்றோர்களுக்கு உண்டு.  அந்த வகையில் பெற்றோர்கள் வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்தில் ஒரே நோக்கம் சங்கம் நேற்று 
கூட்டரசு‌ பிரதேச முதியவர், சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தை சேர்ந்த மாணவர்களுக்கு‌ பள்ளிக்கான பொருட்களை வழங்கினர்.

பள்ளிச் சீருடை தொடங்கி காலணி‌ வரை அனைத்துமே ஒரே நோக்கம் சங்கம் தங்கள் செலவில் வாங்கி கொடுத்தனர்.

இதனிடையே , இந்த சங்கத்தின் தலைவர் ஆனந் குணசேகரன், துணைத் தலைவர் ரேமன் பிரான்சிஸ் அப்பிள்ளைகளிடம் நேரடியாக பள்ளி பொருட்களை ஒப்படைத்தனர்.

அதனுடன் , மாணவர்களுக்கு வாழையிலை உணவும் வழங்கப்பட்டது.

இது சங்கத்தின் 114 ஆவது சமூகப்‌பணி‌ என ரேமன்‌ கூறினார்.

எங்களால் இயன்றவரை ஆதரவற்ற பிள்ளைகள், முதியவர்கள், பேர் குறைந்தவர்களுக்கு உதவி‌ வருகிறோம் என ரேமன் கூறினார்.

இவ்வேளையில் எங்களுடன் இணைந்து இந்த நிகழ்வினை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றி என்றார் அவர்.

கோலாலம்பூர், டிச.4-
ரோயல் சிலாங்கூர் கிளப் (RSC) ஏற்பாட்டில் Dato’ Chu Ah Nge அனைத்துலக ஜூனியர் கால்பந்து போட்டி இந்த வார இறுதியில் (டிசம்பர் 5-7) கோலாலம்பூரில் உள்ள RSC புக்கிட் கியாரா ஸ்போர்ட்ஸ் அனெக்ஸின் மைதானத்தில் நடைபெறுகிறது.

RSC கால்பந்து பிரிவின் ஜூனியர் கால்பந்து மேம்பாட்டுத் திட்டத்தால் (JSDP) ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி, கிளப்பின் வருடாந்திர நிகழ்வுகள் நாட்காட்டியில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

வளர்ந்து வரும் நட்சத்திரங்களை கண்டுபிடிக்க இந்த போட்டி போர்க்களமாக
விளங்குகிறது.

இந்தப் போட்டிக்கு கிளப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான மறைந்த Dato’ Chu Ah Nge பெயரிடப்பட்டது.

இன்று நடைபெற்ற விழாவில் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் Datuk Gerald Rakish Kumar தனது வரவேற்பு உரையில், RSC கால்பந்து மேம்பாட்டுத் திட்டத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் போட்டித்தன்மை வாய்ந்த சூழலை வழங்குவதற்காக இந்தப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது என்றார்.

"RSC Dato’ Chu Ah Nge போட்டி படிப்படியாக பல அனைத்துலக கிளப்புகளின் கவனத்தை ஈர்த்தது. எனவே போட்டியின் சர்வதேச அடையாளத்தை நியாயப்படுத்த அவர்களை பங்கேற்க அழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றார்.

இந்த ஆண்டு ஐந்து பிரிவுகளில் 100 அணிகள் பங்கேற்கும். இந்த அணிகள் சிங்கப்பூர், மாலத்தீவு, இந்தோனேசியா, நேப்பாளம் மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவையாகும்.

8 வயதுக்குட்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர், 12 வயதுக்குட்பட்டோர், 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் ஆகிய ஐந்து பிரிவுகளில் போட்டி இடம்பெறும் என அவர் மேலும் சொன்னார்.

மேலும் RSC கால்பந்து அக்காடமியில் தற்போது 270 இளம் விளையாட்டளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எஃப்ஏஎம் தகுதியுடைய பயிற்றுநர்கள் பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். ஆகையால் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள இளம் வயதினர்கள் இந்த அக்காடமியில் இணைந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். பதிவுக்கு RSC புக்கிட கியாராவுக்கு நேரடியாக வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது

கோலாலம்பூர், டிச.3-
மலேசிய இந்திய சமூகத்தில் ஒற்றுமை என்பது முன்னேற்றத்திற்கும் சக்தி பெறுவதற்கும் மிக முக்கியமான அடித்தளம் என பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் தெரிவித்துள்ளார். கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு அவர் இந்த செய்தியை வெளியிட்டார்.

டத்தோ டாக்டர் லோகா கூறுகையில், சைவ மரபில் முக்கியமான இடம் வகிக்கும் கார்த்திகை திருவிழா, முருகப் பெருமானின் உருவாக்கத்தையும், பரமசிவன் ஜோதி லிங்கமாகத் தோன்றியதையும் நினைவுகூரும் விழாவாகும். கிருத்திகை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாளிலும் தமிழ் மாதமான கார்த்திகையின் தொடக்கமாகவும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இந்த திருநாளில் வீடுகள், கோவில்கள் மற்றும் வேலைத்தளங்களில் மண் விளக்குகள் ஏற்றி தீபம் ஏற்றுவது புதிய நம்பிக்கை, தொடக்கம் மற்றும் வளம் என்பதைக் குறிக்கும் என அவர் கூறினார்.

தன் திருநாள் வாழ்த்துச் செய்தியில், இந்தியர்களின் ஒற்றுமை சமூக முன்னேற்றத்திற்கான மிகப் பெரிய பலம் என டத்தோ டாக்டர் லோகா வலியுறுத்தினார்.

"நாம் ஒன்றுபட்டிருக்கிறோம் என்ற வரையில், நமது குரல் அரசு மற்றும் சமூகத் தேவைகளில் தெளிவாகக் கேட்கப்படும். பிரிந்துவிட்டால், நம் கோரிக்கைகள் கவனிக்கப்படாமல் போகும் ஆபத்து உள்ளது," என அவர் தெரிவித்தார்.

அரசியல், சமூக, பொருளாதார வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியர்கள் அனைவரும் தங்களின் முன்னேற்றத்திற்கும் நிலைத்தன்மைக்குமான ஒன்றுபாட்டைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

கார்த்திகை திருநாளின் ஒளி அனைவரையும் இணைக்கும் சக்தியாக அமைய வேண்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“கார்த்திகையின் ஒளி நமது எண்ணங்களை ஒளிரச் செய்து, வேறுபாடுகளைப் புறம் தள்ளி, அனைவரையும் ஒன்றுபடுத்தட்டும்,” என்று அவர் கூறினார்.

டத்தோ டாக்டர் லோகா, கார்த்திகை தீபம் கொண்டாடும் அனைத்து இந்தியர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா, டிச.2-
ஹைனிகன் மலேசியா பெர்ஹாட் (HEINEKEN Malaysia) நடத்திய 2025 ஸ்டார் அகாடமி தேசிய இறுதிப்போட்டியில், சபாவில் உள்ள லங்காஹ் சியாபாஸ் பீச் ரிசார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த கோரா ஜீன் கான்ட்வெல் ஸ்டார் அகாடமி வரலாற்றில் முதல் பெண் தேசிய சாம்பியனாக வெற்றிப்பெற்றுள்ளார்.

இந்த சாதனைமிக்க வெற்றி அவருக்கு ஆம்ஸ்டர்டம்  செல்லும் பிரத்யேக வாய்ப்பை வழங்கியுள்ளது. அங்கு அவர் ஹைனிகனின் வரலாறு, புதுமை மற்றும் Joy of True Togetherness என்ற மதிப்பினை நேரடியாக அனுபவிக்க உள்ளார்.

ஏழாவது ஆண்டை எட்டியுள்ள ஸ்டார் அகாடமி திட்டம், மலேசியாவின் சேவைத் துறையை உயர்த்தும் அதன் முக்கிய நோக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இது நாடு முழுவதும் உள்ள திறமையான பார் டெண்டர்களை பயிற்றுவித்து, அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் விருந்தோம்பல் துறைகளில் புதிய பரிணாமத்தை அமைத்து வருகிறது.

Star Academy 2025- இல் மேலும் ஒரு முக்கிய அறிமுகம் செய்யப்பட்டது – “Tap Into The Future” எனப்படும் புரட்சிகரமான மெய்நிகர் யதார்த்தம் (VR) அனுபவம். இந்த புதுமையான பயிற்சி முறை பல உணர்வுகளைக் கொண்ட (காட்சி, தொடுதல், ஒலி) முழுமையான கற்றல் சூழல் வழங்குகிறது. விளையாட்டுவழி நிலைச்சித்திரம்யான அணுகுமுறை நினைவுத்திறனை அதிகரித்து, தயாரிப்பு அறிவை ஆழப்படுத்தி, சரியான pouring தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறது. இது ஹைனிகன் மலேசியா வழங்கும் தனிச்சிறப்பான அனுபவமாகும்.

ஹைனிகன் மலேசியாவின் மேலாண்மை இயக்குநர் மார்டெய்ன் வான் கீலன் கூறுகையில், இன்றுவரை 11,000-க்கும் மேற்பட்ட பார் டெண்டர்களை பயிற்றுவித்துள்ள ஸ்டார் அகாடமி, சேவைத் துறையை உயர்த்துவதில் நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இது உள்ளூர் F&B துறையின் திறனை வலுப்படுத்தி, நாட்டின் விருந்தோம்பல் சூழலுக்கு ஆதரவளிக்கிறது. ஸ்டார் அகாடமி மலேசிய அளவில் சேவைத் திறமையின் தரத்தை உயர்த்துவதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம் என அவர் கூறினார்.

இந்த ஆண்டின் இறுதிப்போட்டியில் கோலாலம்பூர்/டிலாங்கூர், சரவாக், சபா, பினாங்கு, பேராக், ஜொகூர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் கடுமையான போட்டியில் ஈடுபட்டனர்.

ஹைனிகன் மலேசியாவின் விற்பனை இயக்குநர் ஜிம்மி டிங் கூறுகையில், எங்களின் வர்த்தக கூட்டாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கும், உயர்ந்த தரத்தை நிலைநிறுத்த பல சவால்களை எதிர்கொண்டு உழைக்கும் பார் டெண்டர்களுக்கும் நன்றி. அவர்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் இந்த துறையை முன்னேற்றுகிறது. இந்த ஆண்டில் நாங்கள் அறிமுகப்படுத்தும் VR பயிற்சி, நேரடி அனுபவத்துடன் கூடிய ஆழமான கற்றலை வழங்குவதால் மேலும் பெருமை அடைகிறோம் என்றார்.

போட்டியில் நீதிபதிகளாக ஹைனிகன் மலேசியாவின் காமெர்ஷியல் குவாலிட்டி மேலாளர் சியான் ஹுல்ம், காமெர்ஷியல் குவாலிட்டி லீட் வேன் வோங் மற்றும் சிறப்பு விருந்தினராக 2024 ஹைனிகன் குளோபல் டிராஃப்ட் சாம்பியன் ஜேசன் டெனிஸ் டி'குரூஸ் ஆகியோர் இணைந்தனர்.

தேசிய சாம்பியனான கோரா ஜீன் கான்ட்வெல் கூறுகையில், இந்த போட்டியில் வெற்றி பெறுவது எனக்கு நம்பமுடியாத அனுபவம். இந்த ஆண்டின் ஸ்டார் அகாடமி தேசிய இறுதியில் சபாவை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். இந்த அற்புத வாய்ப்புக்கு ஹைனிகன் மலேசியாவுக்கு நன்றி. ஆம்ஸ்டர்டம் செல்ல நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன் என்றார்.

ஜெராண்டூட், டிச.1- ஜெராண்டூட் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 100 பேர், நவம்பர் 28 அன்று இங்கு நடைபெற்ற கேஜே உடற்கட்டுப் பயிற்சி கிளப் (KJEY) அமைப்பு நடத்திய “அடிப்படை உடற்கட்டுப் பயிற்சி பயிற்சி முகாம்” நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ElangKathir Enterprises வழங்கிய அனுசரணையுடன் நடைபெற்ற இம்முகாம், 12 வயதுக்குக் குறைவான மாணவர்களுக்கு உடல் உறுதிப்படுத்தல் அடிப்படை புரிதல், உடற்கட்டுப் பயிற்சி நுட்பங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தியது.

நிகழ்ச்சி தலைவர் மற்றும் KJEY உடற்கட்டுப் பயிற்சி கிளப் தலைவர் டாக்டர் கே. ஜெய் பிரபாகரன் தேவர் கூறியதாவது, பள்ளி மாணவர்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான பயிற்சி திட்டங்கள் மூலம் உடற்தகுதி கல்வியை மேம்படுத்துவதில் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றார்.

அவரது கருத்தில், ஆரம்ப வயதிலேயே உடற்கட்டுப் பயிற்சி விளையாட்டை அறிமுகப்படுத்துவது மாணவர்களின் ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் உடல் பராமரிப்பு மேலான விழிப்புணர்வை உருவாக்க உதவுகிறது என கூறினார்.

“இத்தகைய தொடக்கப் பயிற்சி, மாணவர்கள் சரியான இயக்க நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கும், உடற்தகுதியின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவும், வயதிற்கு ஏற்ப பொருத்தமான பயிற்சி முறைகளை அறிந்துகொள்ளவும் உதவுகிறது,” என்றார் அவர்.

அவர் மேலும் கூறியதாவது, இத்திட்டத்தை மாவட்டத்திலுள்ள பிற பள்ளிகளுக்கும், பகாங் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் கிளப்பிடம் உள்ளது, இதன் மூலம் இளைஞர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் ஊக்குவிக்க முடியும்.

ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இம்முகாம், கோட்பாட்டு மற்றும் செயல்முறை அம்சங்களை உள்ளடக்கி, நீட்டிப்பு பயிற்சிகள், அடிப்படை தசை அமைப்பு அறிமுகம், வயதுக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகள் ஆகியவை சொல்லித் தரப்பட்டது.

KJEY உடற்கட்டுப் பயிற்சி கிளப், குழந்தைகளுக்கான உடற்தகுதி மேம்பாட்டு திட்டங்களை எதிர்காலத்தில் மேலும் பல முகவாடிகள் மற்றும் ஆதாரதாரர்கள் இணைந்து ஆதரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையைப் பகிர்ந்துள்ளது.

கோலாலம்பூர் டிசம்பர் - 1
ம.இ.கா எல்லா கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி  வருகிறது. எந்த கூட்டணியில் அந்த கட்சி இணையும் என்பது அடுத்த மத்திய செயலவை கூட்டத்திற்கு பிறகு தெரியவரும்.

இப்போது உள்ள சூழ்நிலையில் எந்த கூட்டணியில் இந்திய கட்சியின் குரலாக  ம.இ.கா இருக்க முடியும் என பேச்சு வார்த்தையை ம.இ.கா தொடங்கி விட்டது.

இதன் அடிப்படையில் பேச்சு வார்த்தைக்கு பிறகு ம.இ.கா தனது நிலைபாட்டை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.

இப்போதைக்கு ம.இ.கா தேசிய முன்னனி , பாஸ், பெரிக்காத்தான் நேசனல், பி.கே.ஆர் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.

இதனிடையே,  பெரிக்காத்தன் நேசனல் கட்சி தலைவர்  ,டான் ஸ்ரீ முகிடீன் யாசின் வெளியிட்ட தகவலுக்கு பிறகு ம.இ.கா செயலாளர்.. அது விண்ணப்பம் இல்லை விளக்கம் கோரிய கடிதம் என தெரிவித்துள்ளார்.

ம.இ.கா இப்போது பல கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில்  தேசிய முன்னனியையும் சந்திக்க உள்ளது.தங்களது முடிவை அதிகாரபூர்வமாக ம.இ.கா தெரிவிக்கும் வகையில், அனைத்தும் ஆரூடம் என பேசப்படுகிறது.

கோலாலம்பூர் நவ- 30
ம.இ.கா , பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக பெரிக்காத்தான் நேஷனல்  தலைவர் டான் ஸ்ரீ முகிடீன் யாசின்  உறுதி செய்துள்ளார்.

ம.இ.கா பெரிக்காத்தான் நேசனல் கட்சியில்  இணைவது தொடர்பாக உறுப்பு கட்சிகளுக்கு எந்த ஒரு ஆட்சியேபமும் இல்லை.

இருந்தபோதிலும் அடுத்த பெரிக்காத்தான்  நேஷனல் உச்ச மன்ற
கூட்டத்தில்  ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என டான் ஸ்ரீ முகிடீன் யாசின் தெரிவித்தார்.

இதனிடையே  ம.இ.கா தங்களது அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த வாரம் அறிவிக்கும்  எனவும் கூறப்படுகிறது.

சிரம்பான், நவ 29-
ஆயிரம் குறை சொன்னாலும் இந்திய சமுதாயத்திற்கு போராடும்
ஒரே கட்சி மஇகா தான்.
இதை யாராலும் மறுக்க முடியாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்கினேஸ்வரன் கூறினார்.

மஇகா மகளிர் முன்னால் சேவையாளர் செயற்குழு மற்றும்  மஇகா நெகிரி செம்பிலான், மலாக்கா மாநில மகளிர்களுடன் ஒன்றுக்கூடும் நிகழ்வில் சிரம்பானில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தலைமையேற்று பேசிய டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்,
மஇகா கட்சி இந்திய சமுதாயத்திற்காக பாடுபடும் கட்சியாக திகழ்ந்து வருகிறது.

இந்திய சமுதாயத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் மஇகா கட்சியும் அதன் தலைவர்கள்தான் முன் வருவார்கள்.

இந்திய சமுதாயத்திற்காக பாடுப்படுகின்ற கட்சி இந்திய சமுதாயத்திற்கு பிரச்சனை என்றால் நாம் முன் நிற்க்கிறோம் மற்ற கட்சியில் உள்ளவர்கள் அப்படி செய்ய முடியாது காரணம் மற்ற கட்சிகளில் பல இன மக்கள் உள்ளனர.

அப்படி அவர்கள் இந்திய சமுதாயத்திற்காக வாய் திறந்தால் மீண்டும் அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காது.

நமது கட்சி பல இந்திய பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. அதே சமயத்தில் உருவாக்கியும் வருகிறது.

கடந்த காலங்களில் நமக்கு என்று எந்த கல்லூரியும் கிடையாது. நமது பிள்ளைகள் வெளிநாடு சென்று கல்வி கற்க்க வேண்டும் என்றால் பலரிடம் உதவி கேட்டு கல்வி கற்று வந்தனர்.

ஆனால் இப்பொழுது நமக்கு என்று எய்ம்ஸ் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரி மூலம் பல பட்டதாரிகளை உருவாக்கி வருகிறோம்.

அதே போல் டேஃப் கல்லூரியும் அமைந்துள்ளது. அந்த கல்லூரி மூலமும் பல பட்டதாரிகளை ம.இ.கா உருவாக்கி வருகிறது.

மஇகா கட்சி சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட்டை சேர்த்து வைத்துள்ளது. இந்த பணத்தில் பல மாணவர்களுக்கு கல்விக்கு வழங்கி வருகிறோம்.

மஇகா கட்டிடத்தில் 1/2 ஏக்கர் நிலமாக இருந்தது. ஆனால் இன்று 4 ஏக்கர் நிலத்தை மஇகா கட்டிடத்தின் அருகில் வாங்கியுள்ளது.

அந்த இடத்தில் பல மாடிக்கொண்ட கட்டிடத்தை கட்டவுள்ளது.

மஇகா கட்சி ஒரு மானமுள்ள கட்சி பட்டம் பதவிக்காக யாரிடமும் சென்று கெஞ்சவில்லை.

நாம் சுயநல அரசியல் நடத்தவில்லை பொதுநல கட்சியாக செயல்பட்டு வருகிறோம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

செலாயாங் ஜெயா,நவ.28-
காளியம்மன், துர்க்கை அம்மன், இயேசுநாதர், புத்தமதம் மற்றும் சீனர் கோயில்களை ஆபாச வார்த்தைகளில் இழிவாக பேசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிரம்பான் காவல்துறையில் முதல் போலீஸ் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக 10க்கும் மேற்பட்ட போலீஸ்புகார்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து மாக் மண்டின் குமார், தேசம் குணாளன் மணியம் மற்றும் சிலர் கோம்பாக் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

கோம்பாக் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்நபர் தற்போது சிரம்பான் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசும்  சம்பவங்கள் தற்போது கண்மூடித்தனமாக அதிகரித்து வரும் நிலையில்  ,  இப்போது இந்த நபர் கடவுளை குறித்து ஆபாசமாக பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து அவருக்கு எதிராக ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் செலாயாங் ஜெயாவை சேர்ந்த அந்நபர் காளியம்மன், துர்க்கை அம்மன், இயேசுநாதர் மற்றும் புத்த மதங்களை ஆபாச வார்த்தைகளை கொண்டு இழிவாக பேசியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட சில இளைஞர்கள் அந்நபரை தேடினர். அந்நபர் செலாயாங் ஜெயாவில் உள்ள ஒரு அங்காடியில் இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்று அந்நபரை கையும் களவுமாக பிடித்தனர். அந்நபரை மன்னிப்பு காணொளி செய்யச் சொன்னதோடு போலீஸ்சுக்கு தகவல் கொடுத்து அந்நபரை கோம்பாக்காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

அந்நபரை மாக் மண்டின் குமார் நேரில் பார்த்து எச்சரித்தோடு கோம்பாக் போலீஸ் தலைமையக காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த நபருக்கு எதிராக இதுவரை 10க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் முதல் போலீஸ் புகார் சிரம்பானில் செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட நபர் சிரம்பான் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்து மதம் குறித்து ஆபாச வார்த்தைகளை கொண்டு இழிவாக பேசிய நபருக்கு எதிராக மாக் மண்டின் குமார் கோம்பாக் காவல்துறையில் புகார் செய்து 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசம் ஊடகத்தின் தோற்றுநரும் தலைமை ஆசிரியருமான குணாளன் மணியம் அவர்களும் கோம்பாக் காவல்நிலையத்தில் புகார் செய்து 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், நவ. 27-
சமீபகாலமாக மாற்ற இனத்தை சாடி இழிவாக பேசுவது  இந்த நாட்டில் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் தகுந்த  நேரத்தில் அரசும் அதிகாரமும் இவர்கள் மீது  தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்காததே காரணம் என    டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.

இதற்கு முன் ஒருவர் இதே போல் மற்ற மதத்தை இழிவு படுத்தும்போது சுமார் 1,000 புகார்களுக்கு மேல்  கொடுக்கப்பட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதன் தொடர்ச்சியாக இப்போது ஒருவர்  இந்து கடவுள் மற்றும் கிருஷ்த்துவ கடவுளை வக்கிரமாக வர்ணித்து பேசியதோடு இழிவாக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார்.
இதனால் பொங்கி எழுந்த சில இந்தியர்கள் அவரை தேடிச் சென்று அவரை மன்னிப்பு கேட்க வைக்கும் நேரத்தில் அங்கு போலீஸ் வாகனம் வந்து அந்த நபரை விசாரனைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நேரத்தில் நான் போலீஸ் மட்டும் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் வழக்கம் போல் அவர் ஒரு மன நோயாளி என்ற காரணத்தை மட்டும் சொல்லிவிடாதீர்கள். அதை இனியும் மக்கள் ஏற்க போவது இல்லை என டத்தோ டி .மோகன் தெரிவித்தார்.

அவர் பேசிய பதிவு உண்டு, அவரை பொதுமக்களே கண்டு பிடித்து போலீஸ்சிடம் ஒப்படைத்து விட்டனர்.

ஆகையால் 3R சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுங்கள் என டத்தோ டி. மோகன் தெரிவித்தார்.

இப்படிப்ட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இப்படி பொதுவில் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது என்ற பயம் சிலருக்கு வரும்.

ஆகையால் உங்கள் வழக்கமான காரணம் வேண்டாம். நடவடிக்கை தேவை என டத்தோ  டி. மோகன் கேட்டுக் கொண்டார்.

கோலாலம்பூர், நவ.19-
MIFA எனப்படும்
மலேசிய இந்திய கால்பந்து சங்கத்தின்  ஏற்பாட்டில்  MIFA Beyond   தேசிய கால்பந்து போட்டி  நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள செண்டாயன், அரினா ஐஆர்சி அரங்கில் நவம்பர் 22 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

12 மாநிலங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் இடையிலான இந்த போட்டியை  அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என்று மீபா தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.

மலேசியா முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு இந்த போட்டி மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும் என்று அவர் சொன்னார்.

ஆண்டுதோறும் மீபா ஏற்பாட்டில் நடக்கும் இந்த போட்டி இந்திய இளைஞர்களிடையே கால்பந்தை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக மாறியுள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவிலான இந்த போட்டியில் 10 பெண்கள் அணிகளும் 20 ஆண்கள் அணிகளும் பங்குக்கொள்ளவுள்ளன.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின்   திறமைகள், ஆர்வம் மற்றும் உறுதியை ஒரு தேசிய அரங்கில் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை இது வழங்குகிறது.

போட்டிக்கு அப்பால், இந்த போட்டி ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சமூக வளர்ச்சியின் கூட்டு உணர்வின் கொண்டாட்டமாக செயல்படுகிறது.

கால்பந்து துறையில் ஈடுபடும் இளம் மாணவர்கள் அவர்களின் திறமையை விளையாட்டில் மட்டும் காட்டாமல் கால்பந்து சம்பந்தப்பட்ட பயிற்றுநர்கள், ஒருங்கிணைப்பாளரகள் உட்பட இதர பதவிகளிலும் ஆர்வத்தை காட்ட வேண்டும் என்பது மிபா Beyond-இன் நோல்கமாகும்.

12 வயதுக்குட்பட்ட பிரிவில் 450க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதை காண நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.

மேலும் 6 வயதுக்குட்பட்ட (U6) பிரிவில் போட்டியிடும் 70 இளம் விளையாட்டாளர்களின் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்றார் அவர்.

எதிர்கால சாம்பியன்களை உருவாக்குவதற்கான MIFAவின் தொடர்ச்சியான முயற்சிகளில் இதுவும்  ஒன்று.

தமிழ்ப்பள்ளிகள், மாநில கால்பந்து சங்கங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்தும வகையில் மீபா
துணைத் தலைவர் துவான் ராஜேந்திரன் மற்றும் போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் தலைவர்  ஸ்ரீ சங்கர் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவின் அயராத முயற்சிகளை நான் பாராட்ட விரும்புகிறேன் என அவர் சொன்னார்.

அவர்களின் அர்ப்பணிப்பு இந்தப் போட்டியைத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது என்றார்.

விளையாட்டு மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான எங்கள் நோக்கத்தில் MIED இரண்டாவது ஆண்டாக மீண்டும் ஒரு ஸ்பான்சராக வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

இந்த தருணத்தில் ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வனன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோரின் தொடர்ச்சியான ஊக்கம் மற்றும் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரூ டேவிட் சிறப்பு பிரமுகராக கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், நவ.19-
தமிழ் லென்ஸ் ஆசிரியரும், அரசியல் செய்தியாளருமான வெற்றி விக்டர்  இன்று ம.இ கா இணைந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பை செய்தார்.

ம.இ.கா உருவாக்கி உள்ள செயலி மூலம் நேரடி உறுப்பியம் அதன் வாயிலாக  இணைந்துள்ளார்.

இப்போது உள்ள ம.இ.கா எல்லா வகையிலும் உயிர் பெற்று
தைரியமாக குரல் எழுப்பி, எந்த கட்சிக்கும் அடிபணியாமல் இந்திய சமுதாயம் பக்கம் நிற்கிறது.  வரலாற்று மிக்க இந்த கட்சியை  அடுத்த தலைமுறையிடம்  ஒப்படைக்கும் போது ஒரு மரியாதைகுரிய கட்சியாக ஒப்படைக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

இந்த தருணத்தில் சில அம்னோ தலைவர்கள் ம.இ.கா இந்தியர்களின் ஆதரவை இழந்து அம்னோவை நம்பி பிழைக்கும் ஒரு கட்சி என சொல்லி வருகிறார்கள். இந்திய சமுதாயம் ம.இ.கா வை ஆதரிக்க வில்லை என சொல்கிறார்கள்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்க ம.இ.கா ஆட்சியில் இருக்கும்போது பல முறை சீண்டி எழுதிய வெற்றி விக்டர்.
இன்று  ம.இ.காவில் இணைந்தார்.

தான் இந்த கட்சியில்  இந்த காலகட்டத்தில் இணைந்தது  இளைஞர்கள் மத்தியில் ம.இ.கா  மீண்டும் ஒரு புரட்சியை எழுப்பு உள்ளது, புதிய தலைமுறைக்கு  ம.இ.காவின் வரலாறு தெரிய வேண்டும். அதே நேரத்தில் ம.இ.காவின் வழி இந்திய சமுதாயத்தின் தேவை  எதிர்ப்பார்ப்பை  நாமே  வகுப்போம், உருவாக்குவோம்.

இந்த தாய் கட்சியை மற்றவர் இந்திய சமுதாயத்தின் ஆதரவை இழந்த ஒரு கட்சி என சாடுவதை பொறுத்து கொள்ள முடியாது... ஒரு இந்தியனாக சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு செய்தியாளராக   ம.இ.கா இந்திய சமுதாயத்தின் குரல் என்பதை உணர்த்த  இளைஞர்களை ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக்க இந்திய சமுதாயத்தின் சக்தி மற்றவர்களுக்கு உணர்த்த நான் ம.இ.காவில் இப்போது இணைந்து சேவை செய்ய வருவதாக வெற்றி விக்டர் தெரிவித்தார்.

ம.இ.காவின் இணைவது தொடர்பான தனது என்னத்தை தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்து விட்டதாக வெற்றி விக்டர் கூறினார்.

ஒரு குடையின் கீழ் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைக்கு  கைகோர்த்து துணை நிற்போம் என்றார் வெற்றி விக்டர்.

கோலாலம்பூர், நவ.17-
கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் மிகவும் சிறப்பாக பந்திங் தொலுக் பங்லீமா காராங் சமூக மண்டபத்தில் நடைபெற்றது.

சுற்று வட்டார பிரமுகர்கள் கோலா லங்காட் நகராண்மை கழக உறுப்பினர் கே.பன்னீர்செல்வம் , நட்புக்காக சங்கத் தலைவர் டாக்டர் ராமச்சந்திரன் சமூகச் சேவையாளர் டத்தோ வெள்ளையப்பன் , டாக்டர் செல்வேந்திரன் , திரு.ரவீந்திரன் போன்றோர் வருகை தந்து கலந்து அவர்களுக்கு இயக்க பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து சிறப்பும் செய்யப் பட்டது நிகழ்சியை மலேசிய பிரபல கலைஞர் எம்ஜிஆர் சேகர் பாடகர் டிஎம்எஸ் புகழ் அக்னி கனகா அருமையான பாடல்களை வழங்கி சிறப்பாக நடத்தி தந்தார்.

நட்புக்காக சங்கமம் அமைப்பின் உதவியுடன் தோட்ட முன்னாள் குடியிருப்பாளர்களுடன் ஒன்று கூடல் வழி பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதோடு பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள் போன்று செய்து வருகிறது என்று ஏற்பாட்டார்ளிகல் ஒருவரான பொன்.பெருமாள் கூறினார்..

பெட்டாலிங் ஜெயா,நவ.17–
மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் முன்னணி மதிப்புமிக்க தங்க-வெள்ளி முதலீட்டு நிறுவனமான பப்ளிக் கோல்ட் உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த Public Gold Business Owners (PGBOs) உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, 2024/25ஆம் ஆண்டுக்கான சிறப்புப் பாராட்டு விழாவை மிகுந்த சிறப்பாக நடத்தியது.

இரட்டை மற்றும் மேகா டய்மண்ட் சாதனையாளர்களை கௌரவிக்கும் இந்த மாபெரும் நிகழ்வு பண்டார் உத்தாமாவில் உள்ள ஒன் வேர்ல்ட் தங்கு விடுதியில் நடைபெற்று, விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த சிறப்பு விழாவை பப்ளிக் கோல்ட் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டத்தோஸ்ரீ லுவிஸ் எங் அவர்கள் திறந்து வைத்தார்.

அவருடன் Aurora Italia International Berhad (AIIB) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டத்தின்ஸ்ரீ யுவான் லிம், மற்றும் இந்நிகழ்ச்சியின் அமைப்புக் குழு தலைவரும் PGMall நிறுவனத்தின் COO-வுமான ஜெர்ரி எங் ஆகியோரும் இணைந்தனர்.

2008இல் பினாங்கில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய பப்ளிக் கோல்ட், இன்று TRX நிதி மையத்தின் மையப் பகுதியாக திகழும் Menara Public Gold கட்டடத்திற்கு நகர்ந்து, உலகளாவிய நிறுவனமாகத் திகழ்கிறது. தற்போது மலேசியாவில் 20 கிளைகள், இந்தோனேஷியாவில் 7 கிளைகள், மேலும் துபாய் (UAE) மற்றும் லண்டன் (UK) ஆகிய இடங்களில் சர்வதேச அலுவலகங்களையும் நிறுவியுள்ளது.

அத்துடன், 2023ஆம் ஆண்டிலிருந்து மலேசியா முழுவதும் உலகின் முதல் பின்டெக் தொழில்நுட்பத்துடன் கூடிய தங்க ATM இயந்திரங்கள் 110 யூனிட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பப்ளிக் கோல்டின் வேகமான வளர்ச்சிக்கான சான்றாகும்.

2008 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் நிறுவனத்தின் மொத்த வருவாய் RM23 பில்லியனை கடந்துள்ளது. மொத்தம் 87 டன் தங்கம் விற்பனையாக, 51 டன் தங்கம் மீள்கொள்வுக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலேசியா, சிங்கப்பூர், ப்ரூனே மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் மட்டும் 2.2 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பப்ளிக் கோல்ட், இன்று ஆசியாவைத் தாண்டி UAE மற்றும் UK-களிலும் தன்னுடைய தடம்பதிப்பை விரிவாக்கியுள்ளது.

இந்த விருது நிகழ்ச்சியில் மொத்தம் 7 பிரிவுகளைக் கொண்ட இவ்விருதுகள் — மில்லியன் ஸ்டார் டபுள் டையமண்ட், 5-ஸ்டார் டையமண்ட், 4-ஸ்டார் ரூபி, 3-ஸ்டார் ஜேட், 2-ஸ்டார் ஜேட், 3-ஸ்டார் பேர்ல், மற்றும் 2-ஸ்டார் பேர்ல் — தகுதியான PGBO-க்களுக்கு RM3.5 மில்லியன் மதிப்பிலான பரிசுகளாக வழங்கப்பட்டன. கடந்த 18 ஆண்டுகளில் PGBO-க்களுக்கு வழங்கப்பட்ட மொத்த ஊக்கத்தொகை RM420 மில்லியனை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவின் முக்கிய சிறப்பாக, புகழ்பெற்ற மலேசிய தங்க மஹாகுரு  சுகோர் பின் ஹஷிம் மற்றும் அவரது துணைவியார் ஜோனய்னா பிந்தி நோர்டின் ஆகியோர் உயரிய மில்லியன் ஸ்டார் டபுள் டையமண்ட் பட்டத்தைப் பெற்றனர்.

அவர்களுக்கு RM962,623 மதிப்புள்ள பரிசுகளான போனஸ் டையமண்ட், பங்களா நிதி, சொகுசு கார் நிதி, மற்றும் தலைமைத்துவ ஊக்குவிப்பு தொகை ஆகியவை வழங்கப்பட்டன. உலகம் முழுவதும் 20 இலட்சம் தங்க சேகரிப்பவர்களை முன்னெடுத்து வந்த இவர்களின் தலைமையாற்றல், தொடர்ச்சியான முயற்சி பப்ளிக் கோல்டின் வளர்ச்சிக்கு வலு சேர்த்துள்ளது.

பப்ளிக் கோல்ட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இவ்வாண்டு ஒரே நேரத்தில் மூன்று 5-ஸ்டார் டையமண்ட் விருதுகள் வழங்கப்பட்டன.

அஜீஸா பிந்தி ஹசன் (Public Gold Iron Lady), ஹாஜி ஹபிசுல் ஹகிம் பின் முகமது கெர்டா & ஹாஜ்ஜா அலிஃபா ரபினி பிந்தி அப்துல்லா (Raja Borneo), மார்லியா பிந்தி ரம்லி &  அகமது ஃபுவாட் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு வெற்றியாளரும் RM604,000 மதிப்பில் தலைமைத்துவ ஊக்குவிப்பு தொகை, பங்களா நிதி, மற்றும் சொகுசு கார் நிதி ஆகியவை பெற்றனர்.

இதனை தொடர்ந்து அடுத்த விருதுகளான 4-ஸ்டார் ரூபி விருதை மஸ்லிஃபா பிந்தி ஓமர் பெற்றார். அவருக்கு RM9,000 தலைமைத்துவ ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது.

3-ஸ்டார் ஜேட் விருதை  நூர்மரியா சாபிகா & பெங்கிரான் அப்துல் அசிஸ் ஆகியோர் பெற்றனர்.

2-ஸ்டார் ஜேட் விருதை அமீர் பைரூஸ் பின் அப்துல் அசிஸ் பெற்றார். அதனை தொடர்ந்து 3-ஸ்டார் பேர்ல் விருதை  நொர்சுஸிலாவதி & முகமது சுகூர் பெற்றனர்.

ஸ்டார் பேர்ல் விருதை அமிருல் பார்ஹான் &  அஸ்ஸுரா அஸ்லியனா,  ஷம்சுல் & நோரா, கஷிகா நாகராஜன் ஆகியோர் பெற்றனர்.

எங்கள் PGBO-க்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி பப்ளிக் கோல்டின் மேன்மையை பிரதிபலிக்கிறது. உண்மையான செல்வம் என்பது நாம் வைத்திருப்பதில் அல்ல, நாம் பகிரும் அறிவிலும், நாம் ஊக்குவிக்கும் வாழ்க்கைகளிலும் உள்ளது.

பப்ளிக் கோல்ட் வழங்கும் இவ்விருதுகள் தங்கச் சேமிப்பை பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதோடு, தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்து முன்னேறிய ஆயிரக்கணக்கான PGBO-க்களின் சாதனைகளுக்கு ஒரு வண்ணமிகு சின்னமாக திகழ்கின்றது என டத்தோஸ்ரீ லுவிஸ் எங் தெரிவித்தார்.

கோலாலம்பூர்,நவ.16-
நாட்டின் இன்றை அரசியல் சூழ்நிலையில் மஇகா யாருக்கும் பயப்படாது. அதேவேளையில் கையேந்தி வாழ வேண்டிய தேவையும் எங்களுக்கு இல்லை என கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சூளுரைத்தார்.

எங்களுக்கு மானம்தான் வேட்டிச் சட்டை மற்றதெல்லாம் வாழைமட்டை என்ற பாடல் வரியை அவர் மேடையில் கூறினார்.

அரசாங்கத்தில் எந்த பதவி இல்லை என்றாலும் எங்களால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியும். ஆகையால் யாரையும் நம்பி வாழும் நிலை எங்களுக்கு இல்லை.

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டதும் அனைவரும் அம்னோவை குஷ்ட நோயாளியை போல பார்த்தார்கள். தேசிய முன்னணியில் மசீசவை தொடர்ந்து இருக்க வேண்டும் என இழுத்து பிடித்ததும் மஇகாதான். இதனை மறந்துவிட வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

மஇகாவிடம் உள்ள மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி, சட்டமன்றம், கவுன்சலர் பதவிகள் எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுக்கு மானமும் மரியாதையையும்தான் முக்கியம். ஆகையால் எங்களின் முடிவு அதன் அடிப்படையில்தான் இருக்கும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

கோலாலம்பூர், நவ.16-
நாட்டு அரசியலில் அன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆட்சியில் இருந்த மஇகாவை காலம் காலமாக குறைக்கூறி வந்த அன்றைய எதிர்க்கட்சி இந்திய தலைவர்கள் இன்று குரல் இல்லாமல் ஆட்சியில் அமர்ந்துள்ளதாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.

அரசியலில் கேள்வி கேட்பது சுலபம். ஆனால் பதில் சொல்லும் இடத்தில் இருக்கும்போதுதான் அதன் கஷ்டம் புரியும் என்பதை அவர்கள் இன்று உணர்ந்திருப்பார்கள்.

நாட்டின் சுதந்திரம் முதல் இந்திய சமுதாயத்தின் அடிப்படை தேவைகள், நமது உரிமை அனைத்தையும் கேட்டு பெற்றுத் தந்தது மஇகாதான். தமிழ்ப்பள்ளி விவகாரம், ஆலயம் விவகாரம், கல்வி மேம்பாடு, தோட்ட மேம்பாடு என பலவற்றை இந்திய சமுயாத்திற்கு பெற்று தர போராடி கட்சி மஇகாதான். ஆனால் மன்சாட்சி இல்லாதவர்கள் இன்று மஇகா என்ன செய்தது என்று கேட்கிறார்கள் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

அதேவேளையில் மஇகாவை வீழ்த்தினால்தான் இந்தியர்களின் வாக்கை பெற முடியும் என்று முடிவெடுத்து வேலை செய்தவர்கள், மஇகா இல்லை என்றால் இந்திய சமுதாயம் தத்தளிக்கும் என்பதை மறந்துவிட்டார். அதனை செய்து விட்டு அவர்களும் இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு மௌனம் சாதிக்கின்றனர் என அவர் மஇகாவின் 79ஆவது தேசிய பொது பேரவையில் கூறினார்.

செய்தி: காளிதாசன் காளிதாசன்

கோலாலம்பூர்,நவ.16-
தற்போது அரசாங்கத்திற்கு வேலை செய்வதற்கு சரியான இந்திய கட்சி இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என்னிடமும் டத்தோஸ்ரீ சரவணனிடம் கூறியதாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.

இந்தியர்களுக்காக செயல்பட இன்றை ஆட்சியில் முறையான இந்திய கட்சி இல்லை என பிரதமர் எங்களிடம் கூறினார். பிரதமர் இந்திய சமுதாயத்திற்கு உதவ தயாராக இருக்கிறார்.

ஆலயங்களுக்கு மானியம் தேவை என்ற கோரிக்கையை நான் இதற்கு முன்னவர் அவரிடம் முன்வைத்தேன். தற்போது ஆலயங்களுக்கான மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவருடனான சந்திப்பின்போது இதற்கு முன்னர் எம்ஐஇடி கீழ் 25 மில்லியன் வெள்ளி மானியம் வழங்குவதாக அறிவித்திருந்தீர்கள். அது இன்னும் கிடைக்கவில்லை என்றேன். உடனடியாக அதன் தொடர்பில் பேசி அந்த மானியத்தை எம்ஐஇடி-க்கு வழங்கினார்.

தற்போது அவர் இந்திய சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய உதவிகளை முறையாக செய்யவும் அந்த திட்டங்களையும் வழிநடத்தவும் முறையான தளம் இல்லை என்பதை அவர் எங்களிடம் கூறினார்.

இந்த தகவலி டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவையில் மேடையில் பேசியபோது கூறினார்.


செய்தி: காளிதாசன் தியாகராஜன்

Recent News