loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (வயது46) உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.

சில தினங்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா பட துவக்க விழா தளத்தில் ரத்த வாந்தி எடுத்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர்.

தர்ம சக்கரம் படம் தொடங்கி, மாரி, இதற்குதானே ஆசைப்பட்டாய், தேசிங்குராஜா, புலி, விஸ்வாசம், இரும்புதிரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரோபோ சங்கர்.

ஜொகூர் பாரு, செப்.12-
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜொகூர் பாரு, பிலாஸா தாசேக் எல்எஃப்எஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டு முதல் நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் சுமார் 10,000 சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உள்ளனர். அன்றைய தினத்தில் சுமார் 200 பேர் முதல் காட்சியில் கலந்து கொண்டனர். இந்த முதல் நாள் சிறப்பு காட்சியை ஜொகூர் மாநில சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த கொண்டாட்டம் ஆடல் பாடல், அணிச்சல் வெட்டுதல், சிறுவர்களுக்கு பரிசு வழங்குதல் உட்பட இன்னும் பல்வேறு அம்சங்களுடன் நடைபெற்றது.

இளைஞர்களின் கூட்டமைப்பில் இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. இதுபோன்ற அமைப்புகளில் இந்திய இளைஞர்கள் இணைந்து செயலாற்றும்போது அவர்கள் மத்தியில் ஒற்றுமை மேலோங்குவதுடன் தீயச் செயல்களில் ஈடுபடும் போக்கு தவிர்க்கப்படும் என ஜொகூர் மாநில சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்தின் ஆலோசகர் ஜெயமலர் தெரிவித்தார்.

திரைப்படம் மிக சிறப்பாக இயக்கப்பட்டுள்ளது. இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்ததாக குறிப்பிடப்பட்டது

கோலாலம்பூர் செப்- 12
கடந்த இரண்டு ஆண்டுகளாக. கருஞ்சட்டை  இளைஞர் படை தந்தை  பெரியார் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தினர்.

தந்தை பெரியாரின் 147 ஆவது   பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி பன்னாட்டு  இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு தலைநகர்  Chinese assembly hall மண்டபத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைப்பெறவுள்ளது.

இதற்கு முன் எதிர்வரும் செப்டெம்பர்  17 ஆம் திகதி இயங்கலை நிகழ்ச்சி  நடைப்பெறவுள்ளது.

இரவு 8.30 மணிக்கு my periyaar முகநூல் அகப்பக்கத்தில் மலேசிய ,இலங்கை, அஸ்திரேலியா  தமிழ் நாடு என பல பேச்சாளர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.

இதில்  தமிழக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி  சிறப்புறை வழங்க இருக்கிறார்.

அதே நேரத்தில் 21 ஆம் திகதி சீன அசெம்பளி மண்டபத்தில்  நடைப்பெறும் கருத்தரங்கு 2 பிரிவாக நடைப்பெறவுள்ளது.

காலை 10 மணி முதல்  மதியம் 12 மணி வரை மலாய் அமர்வும், மதியம் 2 மணி  முதல் 4  மணி வரை  தமிழ் அமர்வு நடைப்பெறும் என  ஏற்பாட்டாளர் நாகேன்  தெரிவித்தார்.

கருஞ்சட்டை இளைஞர் படை குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திய பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு, இவ்வாண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

தன்னார்வ ஆய்வாளர் சாமிநாதன், ஊடகவியலாளர் இளவெனில் மற்றும் களப் பணியாளர் - கவிஞர் கெளசல்யா ஆகியோர் இதில் உரையாற்றுவார் கள்.

திராவிட மற்றும் பெரியார் சிந்தனையின் தேவை மலேசிய சமுதாயத்தில் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று ஏற்பாட்டுக் குழு  தோழர் நாகேன் தெரிவித்தார்.

கருத்தரங்கில்
மலேசியர்களிடயே வலுத்துள்ள மத இன நல்லிணக்க பிரச்சனைகளை மாற்று சிந்தனையின் வழி எவ்வாறு கையாளலாம் என்று கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர்
தோழர் நாகேன் :
016-5910564 
தோழர் யோகி : 016-5432572
தோழர் கௌசல்யா : 011-36321725 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

பெட்டாலிங் ஜெயா, செப்.9-
இசைத்துறையில் அதிலும் இந்திய இளைஞர்கள் மத்தியில் பல திறமையான DJ-க்கள் உள்ளனர். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பீட் தலைவன் போட்டி நடைப்பெறவுள்ளது.

இந்த போட்டியை செந்தோசா சட்டமன்ற தொகுதி, அஜெண்டா சூரியா, ரியல் ஜோக்கி, திரினித்தி சொலுஷன் நிறுவனம், செஜாத்ரா செந்தோசா சிலாங்கூர் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த போட்டியில் சுமார் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெ.12 ஆயிரம் மதிப்பிலான பரிசுகள் காத்து கொண்டிருக்கிறது.

இந்த போட்டிக்கான பதிவு நாளை 10ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடையும். அதனை தொடர்ந்து இம்மாதம் 26ஆம் தேதி முதல் கட்ட தேர்வு நடைப்பெறும். அதனை தொடர்ந்து அடுத்த மாதம் 5ஆம் தேதி இப்போட்டிக்கான அரையிறுதி சுற்று நடைப்பெறும். அடுத்ததாக தீபாவளி கொண்டாட்டம் கலந்து இந்த போட்டியின் இறுதிச் சுற்று 15ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைப்பெறவுள்ளது.

இசைத்துறையில் இந்திய இளைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளையும் கூடுதல் வருமானத்தை பெற்றுத் தர இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு 012-5803605 (மணி போய்), 017-3149462 (ஹார்டி பி) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.

 

கோலாலம்பூர், செப்.9-
சிலம்பம் போட்டி சுக்மாவில் இடம் பெறவில்லை என்றதும் பல தரப்பினர் இதன் தொடர்பில் குரல் கொடுத்தனர். அதன் பின்னர் சுக்மாவில் சிலம்பம் போட்டி இணைக்கப்பட்டது.

இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும் என்றால் நாம் நம் தற்காப்பு கலையான சிலம்பத்தை காக்க நாம் இணைந்து இந்த கலையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென மஇகா விளையாட்டுப் பிரிவுத் தலைவர் எண்ரூ டேவிட் தெரிவித்தார்.

அந்த வகையில் மலேசிய சிலம்ப கழகத்துடன் இணைந்து மஇகா விளையாட்டுப் பிரிவு டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிலம்ப கிண்ணத்தை இம்மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரை கெடா லுனாஸ், ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போட்டியில் நாடு தழுவிய அளவில் 300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த போட்டி 30 பிரிவுகளாக நடக்கவுள்ள வேளையில்,12 குழுக்கள் கலந்து கொள்ளவர். 

இந்த போட்டிக்கான பதிவு நடந்து முடிந்து விட்டது. மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மத்தியில் சிலம்பத்திற்கு அதிக வரவேற்பு இருப்பது இந்த போட்டியில் பதிவு செய்துள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை நமக்கு எடுத்து காட்டுகிறது.

நமது பாரம்பரிய கலைகள், தற்காப்பு கலை ஆகியவற்றை வளர்ப்பதற்கும் பாதுகாக்கவும் மஇகா தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளை நடத்தும் என எண்ரூ டேவிட் தெரிவித்தார்.

இந்த சிலம்ப போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா 14ஆம் தேதி நடைப்பெறவுள்ளதாகவும் அதனை அதிகாரப்பூர்வமாக மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தொடக்கி வைப்பார் என எண்ரூ தெரிவித்தார்.

இந்த போட்டி தொடர்பான செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் இன்று செராஸில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ்வுடன் கழக பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.