கோலாலம்பூர் டிசம்பர் - 16
நாட்டின் அமைச்சரவையில் ஏற்பட்ட புதிய மாற்றத்தில் ஒற்றுமைத்துறை துணையமச்சராக செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரான யுவனேஸ்வரன் ராமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
அந்த அறிவிப்பில் ஒற்றுமைத்துறை துணையமைச்சராக யுவனேஸ்வரனின் பெயர் அறிவிக்கப்பட்டது.
இந்த பதவியை இதற்கு முன்னர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments