செப்டம்பர் 21 ஆம் தேதி தலைநகரில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 3.0.
2025-09-11 22:59:18கோலாலம்பூர் செப்- 12
கடந்த இரண்டு ஆண்டுகளாக. கருஞ்சட்டை இளைஞர் படை தந்தை பெரியார் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்தினர்.
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு தலைநகர் Chinese assembly hall மண்டபத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைப்பெறவுள்ளது.
இதற்கு முன் எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி இயங்கலை நிகழ்ச்சி நடைப்பெறவுள்ளது.
இரவு 8.30 மணிக்கு my periyaar முகநூல் அகப்பக்கத்தில் மலேசிய ,இலங்கை, அஸ்திரேலியா தமிழ் நாடு என பல பேச்சாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் தமிழக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி சிறப்புறை வழங்க இருக்கிறார்.
அதே நேரத்தில் 21 ஆம் திகதி சீன அசெம்பளி மண்டபத்தில் நடைப்பெறும் கருத்தரங்கு 2 பிரிவாக நடைப்பெறவுள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மலாய் அமர்வும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தமிழ் அமர்வு நடைப்பெறும் என ஏற்பாட்டாளர் நாகேன் தெரிவித்தார்.
கருஞ்சட்டை இளைஞர் படை குழு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திய பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு, இவ்வாண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
தன்னார்வ ஆய்வாளர் சாமிநாதன், ஊடகவியலாளர் இளவெனில் மற்றும் களப் பணியாளர் - கவிஞர் கெளசல்யா ஆகியோர் இதில் உரையாற்றுவார் கள்.
திராவிட மற்றும் பெரியார் சிந்தனையின் தேவை மலேசிய சமுதாயத்தில் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று ஏற்பாட்டுக் குழு தோழர் நாகேன் தெரிவித்தார்.
கருத்தரங்கில்
மலேசியர்களிடயே வலுத்துள்ள மத இன நல்லிணக்க பிரச்சனைகளை மாற்று சிந்தனையின் வழி எவ்வாறு கையாளலாம் என்று கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர்
தோழர் நாகேன் : 016-5910564
தோழர் யோகி : 016-5432572
தோழர் கௌசல்யா : 011-36321725 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.
புத்ராஜெயா, ஜூலை 26-
சிறுத்தொழில் வர்த்தகர்களையும் வளர்ந்து வரும் வர்த்தகர்களையும் அங்கீகரிக்கும் வகையில் ரிபுவான் முத்தியாரா செக்கால் ஹோல்டின்ங்ஸ் சென்.பெர்ஹாட் நிறுவனமும் இந்தியாவைச் சேர்ந்த ஒன்றுப்பட்ட இளைஞர் மன்றம் ஆகியவை இணைந்து விருது விழாவை நடத்தியது.
வர்த்தகர்கள் மட்டுமின்றி பிற துறைகளை சார்ந்த வளர்ந்து வரும் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது விழாவில் 4 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
சமூக வலைத்தளத்தில் முக்கியமான கருத்துகளை முன்வைத்து தலைமைத்துவத்தை கொண்டுள்ளவர்கள் இந்த விருது விழாவில் கௌரவிக்கப்பட்டதாக ரிபுவான் முத்தியாரா செக்கால் ஹோல்டிங்ஸ் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் தோற்றுநர் விஷாலினி பழனி தெரிவித்தார்.
மேலும் இந்த விருது விழாவில் இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனைப்படைத்து நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்த டத்தோ மகேந்திரன் மற்றும் டத்தோ மோகனதாஸுக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
நம் சமுதாயத்தில் வியாபாரத் துறையில் கால்பதித்து முன்னேறி வரும் வர்த்தகர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது விழாவை முதல் முறையாக எங்களின் நிறுவனத்தின் கீழ் ஏற்பாடு செய்துள்ளோம். தொடர்ந்து சமுதாயத்திற்கு நன்மையளிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதற்கிடையில் டிசிபி டத்தோ சசிகலா தேவி, தொழிலதிபர் டத்தோ சுரேஷ் ஆகியோருக்கு இந்த விருது விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தமாக 30 சாதனையாளர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக விஷாலினி பழனி தெரிவித்தார்.
செப்டம்பர் 21 ஆம் தேதி தலைநகரில் பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 3.0.
2025-09-11 22:59:18ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்! -டத்தோஸ்ரீ எம்.சரவணன்.
2025-09-04 08:28:18இந்திய சமுதாயத்தின் நலன் காக்கும் ஒரே கட்சி மஇகாதான்! -டான்ஸ்ரீ ராமசாமி.
2025-08-02 00:12:02சொந்த லாபத்திற்காக இனத்தை இழிவுப்படுத்தாதீர்! இந்து பணிக்குழு வலியுறுத்து.
2025-06-21 23:40:54இந்தியர் திருமண தொழில் துறையில் ஏற்படும் சவால்களை களைய WPAM அமைப்பு உதயம்!.
2025-06-13 00:47:55242 பயணிகளுடன் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளானது !.
2025-06-12 05:52:47இந்திய சமுதாய பிரச்சினைக்கு மஇகா மட்டுமே துணை நிற்கும்! -டத்தோ முருகையா.
2025-06-02 21:00:20பத்துமலைத் தமிழ்ப்பள்ளியில் இன்பம் பொங்கும் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்..
2025-05-19 03:49:26