loader
வாங்சா மாஜு மற்றும் செத்தியாவாங்சா பொதுபணி நலச்சங்கம் சார்பில் தீபாவளி நல நிகழ்ச்சி! ஆதரவற்றோர், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அன்பளிப்பு மற்றும் விருந்து வழங்கப்பட்டது.

வாங்சா மாஜு மற்றும் செத்தியாவாங்சா பொதுபணி நலச்சங்கம் சார்பில் தீபாவளி நல நிகழ்ச்சி! ஆதரவற்றோர், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அன்பளிப்பு மற்றும் விருந்து வழங்கப்பட்டது.

கோலாலம்பூர், அக். 24:
வாங்சா மாஜு மற்றும் செத்தியாவாங்சா பொதுபணி நலச்சங்கம் சார்பில் டானாவ் கோத்தா பகுதியில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

கடந்த அக்டோபர் 18ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு பிலோக் E அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்ப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் தீபாவளி அன்பளிப்புகளுடன் கூடிய சுவையான உணவு விருந்தும் வழங்கப்பட்டதோடு, மகிழ்ச்சியூட்டும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன என பொதுபணி நலச்சங்கத் தலைவர் வின்சன்ட் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் நோக்கம், தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதே. ஆதரவற்றோரும், மாற்றுத் திறனாளிகளும் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்வதில் எந்த குறையும் இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்றார் அவர்.

மேலும், இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற நற்பணிகளை தொடர்ந்து செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம். வாங்சா மாஜு மற்றும் செத்தியாவாங்சா பொதுபணி நலச்சங்கம் மக்களின் நலனுக்காக எப்போதும் செயலில் இருக்கும் என்றும் தலைவர் வின்சன்ட் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News