கோலாலம்பூர், டிச 4-
பள்ளி விடுமுறை தொடங்கவிருக்கும் இந்த காலக்கட்டத்தில் அடுத்த வருடம் பள்ளி பொருட்கள் வாங்கும் செலவும் பெற்றோர்களுக்கு உண்டு. அந்த வகையில் பெற்றோர்கள் வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு உதவும் நோக்கத்தில் ஒரே நோக்கம் சங்கம் நேற்று
கூட்டரசு பிரதேச முதியவர், சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிக்கான பொருட்களை வழங்கினர்.
பள்ளிச் சீருடை தொடங்கி காலணி வரை அனைத்துமே ஒரே நோக்கம் சங்கம் தங்கள் செலவில் வாங்கி கொடுத்தனர்.
இதனிடையே , இந்த சங்கத்தின் தலைவர் ஆனந் குணசேகரன், துணைத் தலைவர் ரேமன் பிரான்சிஸ் அப்பிள்ளைகளிடம் நேரடியாக பள்ளி பொருட்களை ஒப்படைத்தனர்.
அதனுடன் , மாணவர்களுக்கு வாழையிலை உணவும் வழங்கப்பட்டது.
இது சங்கத்தின் 114 ஆவது சமூகப்பணி என ரேமன் கூறினார்.
எங்களால் இயன்றவரை ஆதரவற்ற பிள்ளைகள், முதியவர்கள், பேர் குறைந்தவர்களுக்கு உதவி வருகிறோம் என ரேமன் கூறினார்.
இவ்வேளையில் எங்களுடன் இணைந்து இந்த நிகழ்வினை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றி என்றார் அவர்.
0 Comments