loader
ஐ.பி.எஃப் கட்சியின் 33ஆவது தேசிய பொது பேரவை;  துணை பிரதமர் தலைமையில் நடைப்பெறவுள்ளது!

ஐ.பி.எஃப் கட்சியின் 33ஆவது தேசிய பொது பேரவை; துணை பிரதமர் தலைமையில் நடைப்பெறவுள்ளது!

கோலாலம்பூர்,டிச.12-
நாட்டின் இந்திய கட்சிகளின் ஒன்றான ஐ.பி.எஃப் கட்சியின் 33ஆவது பொது பேரவை எதிர்வரும் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் மாலை 4 மணி வரை  செமிஞ்சே ஏகோஹில் கிளாப் 360 எனும் இடத்தில் நடைப்பெறுகிறது.

இந்த பேரவையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க தேசிய முன்னணி கட்சியின் தலைவரும் துணை பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஜாஹிட் ஹமிடி  சிறப்பு வருகை புரிய உள்ளதாக  கட்சியின் செயலாளர் மோகன் முத்துசாமி தெரிவித்தார்.
 
ஐ.பி.எஃப் கட்சி தேசிய முன்னணியின் தோழமை கட்சியாக  பல ஆண்டுகள் இருந்த வந்த நிலையில், உறுப்பு கட்சியாக உருமாற பல ஆண்டுகளாக போராடி வருகிறது.

அந்த வகையில், தற்போது தேசிய முன்னணியை விட்டு ம.இ.கா - ம.சீ.ச விலகும் சூழல் உருவாகி தலைவர்களிடையே கருத்து மோதல் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ம.இ.கா மாநாட்டில் தேசிய முன்னனி தலைவர் உட்பட பலருக்கு அழைப்பு இல்லை. இந்த கால சூழலில், இப்போது ஐ.பி.எஃப் மாநாட்டை திறந்து வைக்க தேசிய முன்னனி தலைவர் வருகிறார்.

அங்கு அவரது உரை எப்படி இருக்க போகிறது என அரசியல் வட்டாரம் காத்து கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக உறுப்பு கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்ற ஐ.பி.எஃப் கட்சியின் கனவுகளுக்கு இந்த பேரவை மேடை கதவை திறந்து விடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எது எப்படியாகினும், ஐ.பி.எஃப் மாநாட்டிற்கு  துணை பிரதமரின் வருகை  பெரிய எதிர்பார்ப்பையும் அவர் என்ன சொல்ல போகிறார் என்ற ஆர்வத்தையும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

leave a reply

Recent News