கோலாலம்பூர், அக்.24-
நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சீன பள்ளி மண்டபத்தில் மது விருந்துகளுக்கு அரசாங்கம் தடை விதிப்பதாக ஒரு அறிவிப்பை செய்தார்.
உடனே அந்த சமூகம் பொங்கி எழுந்து அவர்களது எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில்
டி.ஏ.பி - எம்.சி.ஏ தங்களது எதிர்ப்பை கூறுயுள்ளனர்.
கல்வியை முன்னிறுத்தி அந்த வடிவத்தில் டத்தோஸ்ரீ அன்வார் எங்கள் முறைகளில் அடக்குமுறை காட்ட நினைக்கிறார். பாஸ் கட்சியின் ஆட்சியின் போது கூட பாஸ் இப்படிப்பட்ட விதிகளை சீன பள்ளிகள் மீது கொண்டு வரவில்லை.
ஆனால் டத்தோஸ்ரீ அன்வாரின் இந்த செயல் எப்படிப்பட்ட பின் விளைவை கொடுக்கும் என்பதை அன்வாரின் ஆட்சியை மிரட்டி பார்க்கும் விதமாக லிம் குவான் எங் ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.
அன்வாரின் இந்த முடிவு தேன் கூட்டில் கையை விடுவதற்கு சமம். செய்தால் விளைவு எப்படி இருக்கும் என அரசியல் ரீதியில் லிம் குவான் எங் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வாரின் இந்த ஆட்சிக்கு சீன சமுதாயம் பெரிய அளவில் பங்கு வகித்துள்ளது. இந்த பிரச்சினையில் அன்வார் அடம்பிடித்தால் சீன சமுதாயம் அவருக்கு எதிர்ப்பாக திரும்பும் காரணம் சீன மண்டபங்களின் வருமானம் பெரிய அளவில் அந்த சமுதாயத்தின் சமூக பணிக்கு பயன்படுத்தப் படுகிறது.
அடிமடியில் கையை வைத்தால் அது பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தும். அதனால் சீன சமூகமும் அரசியல் தலைவர்களும் ஆரம்ப கட்டத்திலேயே எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்த அரசாங்கத்தில் மிக பெரிய அளவில் எம்.பிகளை வைத்துள்ள டி.ஏ.பி கட்சி, தேன் கூட்டில் கையை விடாதே என லிம் குவான் எங் மூலம் ஒரு ஓலையை அனுப்ப ஆடி போனது அன்வாரின் அமைச்சரவை.
இன்று தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கொடுத்த அறிக்கையில் ,இன்று நடத்த அமைச்சரவை கூட்டத்தில் பழைய நடைமுறையை பயன்படுத்த அமைச்சரவை முடிவு செய்து உள்ளதாகவும் அதன் அடிப்படையில் சீன பள்ளி மண்டபத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் மது விநியோகத்திற்கு தடை இல்லை எனவும் கூறியுள்ளார்.
நேற்று பிரதமர் அறிவித்து இன்று அந்த பதில் U-TURN செய்யப்பட்டதற்கு காரணம் லிம் கொடுத்த எச்சரிக்கையா? அல்லது சீன சமுதாயம் கொடுத்த அழுத்தமா?
எது எப்படியோ இன்றைய அமைச்சரவையில் சீன சமுதாயம் தங்கள் மண்டபத்தில் விதிமுறை என்ற பெயரில் நடக்கவிருந்த திணிப்பை நிறுத்தியுள்ளனர் என சமுகவலைதள வாசிகள் வட்டாரத்தில் பேசிக் கொண்டு வருகின்றனர்.
அரசியலில் யார் குடிமி யார் கையில் என்பது சில பிரச்சினைகள் ஏற்படும்போதுதான் தெரிகிறது.
செய்தி : வெற்றி விக்டர்
0 Comments