கோலாலம்பூர்,அக்.16-
சமீபத்தில் மாணவர்களைச் சார்ந்த பல வன்முறைச் சம்பவங்கள், அதில் கொலை, பாலியல் வன்முறை மற்றும் குற்றவியல் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவுவது ஆகியவை பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக மஇகா பிரிகேட் தலைவர் எண்ட்ரு டேவிட் கூறினார்.
இத்தகைய வீடியோக்களைப் பதிவு செய்வது அல்லது பரப்புவது சட்ட விரோதமானது என்பதை அனைவரும் உணர வேண்டும். இச்செயல் இளைஞர்கள் மத்தியில் குற்ற உணர்வை சாதாரணமாக்கும் அபாயம் உண்டு எனவும் அவர் சொன்னார்.
குற்றச் செயல் விடியோக்களை பதிவு செய்வது செக்ஷன் 233 தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீகழ் குற்றமாகும். இச்சட்டத்தின் கீழ் அதிகபட்சம் வெ.50 ஆயிரம் அபராதம் அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். கூடுதலாக இரண்டுமே விதிக்கப்படலாம்.
இதுபோன்ற காணொளிகளை பகிர்வதை அனைத்து வயதினரும் செய்கின்றனர். இது சமூக வளைத்தள் வாசிகள் மத்தியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகின்றன.
சமூகத்தின் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருந்து, குற்றமற்ற தலைமுறையை உருவாக்க ஒன்றிணைய வேண்டும் என்று மஇகா பிரிகேட் சார்பில் அவர் வலியுறுத்தினார்.
0 Comments