loader
செந்தூல் குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடையை அதிகாரப்பூர்வமாக திருந்து வைத்தார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்!

செந்தூல் குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடையை அதிகாரப்பூர்வமாக திருந்து வைத்தார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்!

 

கோலாலம்பூர், செப்.25-
செந்தூல், ஜாலான் ஈப்போ அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள செந்தூல் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடையை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

தற்போதைய சூழ்நிலை இந்திய இளைஞர் அதிகமாக வியாபாரத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். உணவகம், முக ஒப்பனை நிலையங்கள், ஜவுலிக் கடைகள் என பல துறைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செந்தூல், ஜாலான் ஈப்போவில் மகாராஜா ஜவுலிக்கடைக்கு அருகில் தற்போது செந்தூல் ஸ்ரீ குமரன் சில்க்ஸ் ஜவுலிக்கடை திறக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தில் பல ஜவுலிக்கடைகள் இருந்தால்தான் பெண்களுக்கு பிடிக்கும். அவர்களுக்கு தேவையானவற்றை அவர்கள் ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ள முடியும்.

இதே போன்றுதான் பல காலமாக சீனர்கள் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நம் இனத்தவர்களும் இதேபோன்று ஒற்றுமையாக ஒரே இடத்தில் பல வியாபாரங்களை மேற்கொள்வதை வரவேற்பதாக ஜவுலிக்கடை திறப்பு விழாவின் போது அவர் சொன்னார்.

தீபாவளியை முன்னிட்டு இன்று செந்தூல் ஸ்ரீ குமரன் திறக்கப்பட்டுள்ளது. பட்டு சேலைகள், பஞ்சாபி சூட், சிறுவர்களுக்கான பாரம்பரிய உடைகள் என புதிய டிசைன்களில் பல வகை உடைகள் செந்தூல் ஸ்ரீ குமரன் ஜவுலிக்கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் திரளாக வந்து இந்த கடையில் வாங்கிக் கொள்ளலாம்.

0 Comments

leave a reply

Recent News