கோலாலம்பூர் ஏப்ரல்-4
இந்த நாட்டில் மிக பழைமை வாய்ந்த இந்து சங்கத்தின் 60 ஆம் ஆண்டு வைர விழா தலைநகர் கலா மண்டபத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு சரியாக ஆரம்பித்த நேரத்தில் , சுமார் கால் பகுதி இடமே நிரப்பப்பட்டது.
சிறிது நேரம் கழித்து கூட்டம் வர தொடங்கியது அப்போதும் சபையில் பாதி இடம் நிரப்பப்பட்டது.
தலைவரின் தலைமை உரை முடிந்து செய்தியாளர் சந்திப்பு நடக்கும் வரை பாதி இடம் காலியாக இருந்தது.
மலேசிய முழுவதும் வட்டாரம் வைத்துள்ள ஒரு சங்கம். தனது 60 ஆண்டு வைர விழாவை கொண்டாடுகிறது. கூட்டம் இப்படியாகவா? இருக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது.
உறுப்பினர்களுக்கு தகவல் சென்றதா? அல்லது தலைவர் மீது உள்ள அதிருப்தியா? என தெரியவில்லை ஆனால் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பல உறுப்பினர்களின் முகம் வாடி புலம்ப தொடங்கியதை தமிழ் லென்ஸ் கண்காணித்து.
அதோடு மட்டுமல்லாமல் ஆங்காங்கே உறுப்பினர்கள் புலனத்தின் வாயிலாக தங்களது அதிருப்தியை தெரிவித்து வருவதாகவும் நமக்கு கிடைத்துள்ளது.
சிலருக்கு முறையான அழைப்பும் கிடைக்கவில்லை எனவும் தகவல் தெரியவந்துள்ளது.
எது எப்படியோ இந்து சங்கம் ஒரு சமய அமைப்பு ,அது அரசியல் கட்சியல்ல ஆனால் ஒரு பழமை வாய்ந்த சங்கத்தின் வைர விழா வெறிச்சோடி இருந்தது உறுப்பினர்களுக்கு மிக பெரிய வருத்தம் இது உண்மை.
சபை நிறைந்திருக்க வேண்டும்.
பதவி அரசியலில் ஒரு மாபெரும் இயக்கத்தின் விழா இப்படி பாதி சபை பாதி மனதோடு நிறைவுற்றது வருத்தம்.
இதை சம்பத்தப்பட்டவர் உணர வேண்டும் .
செய்தி : வெற்றி விக்டர்
0 Comments