loader
மாநில மாநிலமாக நாங்கள் இருவரும் இரு கட்சி பொறுப்பாளர்களை சந்திக்க போகிறோம்! அனைவரும் தயாராக இருங்கள்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

மாநில மாநிலமாக நாங்கள் இருவரும் இரு கட்சி பொறுப்பாளர்களை சந்திக்க போகிறோம்! அனைவரும் தயாராக இருங்கள்! -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்


போர்ட்டிக்சன்,மார்ச் 29-

ம.இ.கா-வும் மக்கள் சக்தியும் ஒரே குடும்பமாக இந்திய சமுதாயத்திற்காக களத்தில் நிற்கும் என ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் டத்தோஸ்ரீ தனேந்திரன்  அவர்களும் ஒருமித்த குரலாக இந்திய சமுதாயம் சார்ந்த முடிவுகள் எடுத்து வருகிறோம்.

அந்த வகையில் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த இரு கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்து  பயணக்க வேண்டும் என இன்று நடைப்பெற்ற மக்கள் சக்தியின் தேர்தல் பணிப்படை பயிற்சி நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று 50 பேர்களாக சிறிய அளவில் நடந்தப்பட்ட இந்த பயிற்ச்சியை 500 பேராக உருமாற்றுங்கள் நான் அதன் முழு செயலவை ஏற்கிறேன் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த  நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மக்கள் சக்தி கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுக்கு என்னிடம் ஏதாவது கேள்விகள் உள்ளதா என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு தளத்தை அவர்களுக்கு வழங்கினார்.

அப்போது பெருவாரியான உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி என்னவென்றால்  டான்ஸ்ரீ இந்த ஒற்றுமை எல்லா நிலையிலும் ம.இ.கா - மக்கள் சக்தியிடம் இருக்க வேண்டும். அந்த ஒத்துழைப்பு இருக்கிறாதா? என்றால் ஒற்றுமை சற்று குறைவாக உள்ளதாக தெரிவித்தனர்.

அனைத்தையும் கேட்டு அறிந்த டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் 
கவலை வேண்டாம் நானும் டத்தோஸ்ரீ தனேந்திரன் அவர்களும் மாநிலம் மாநிலமாக இரு தரப்பு கட்சி உறுப்பினர்களை சந்திக்க வருகின்றோம். அனைவரும் தயாராக இருங்கள் என தெரிவித்தார்.

இந்த தேர்தலை இந்திய சமுதாயம் ஒற்றுமையாக ஒரு மித்த குரலாக சந்திக்க வேண்டும்.

அதற்கு நமது பணிப்படை தயாராக இருக்க வேண்டும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  தெரிவித்தார்.

ஒற்றுமையான ஒரு சமுதாயமாக தேர்தலை நிர்ணயம் செய்யும் சக்தியாக மீண்டும்  உருவெடுப்போம் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News