இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நமது நாடு உட்பட உலகம் முழுவதும் உருவாக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் வரலாற்றை அறிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும். தொழிலாளர் வர்க்கம் நிலைத்திருக்கும் வரை தொழிற்சங்கங்களின் அவசியமும் தொடர்கிறது என்பது காலத்தின் நியதி.
இன்றைய சூழலில், தொழிற்சங்கங்களின் தோற்றம், அதன் பின்னணி, அதை உருவாக்கிய முன்னோடிகள் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக, மக்கள் தலைவர்களாகப் போற்றப்படும் பி. வீரசேனன் மற்றும் எஸ்.ஏ. கணபதி யார்? அவர்களின் போராட்ட வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்கு விளக்கம் வழங்கும் நோக்கில், “வீரசேனன் - மலாயா கணபதி போராட்டமும் வரலாறும் 2.0” என்ற வரலாற்று நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் நாளை முன்னிட்டும், மலாயா கணபதி மற்றும் வீரசேனன் போராட்டவாதிகளின் நினைவுநாளை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த விழா 09.05.2026 அன்று ஜொகூர், காரைநகர் நட்புறவு மையத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் முக்கிய நிகழ்வுகளாக வரலாற்று ஆவணக் கண்காட்சி , சிறப்பு காணொளி வெளியீடு மற்றும் பேச்சுமன்றமும் நடைபெறும். முக்கிய விருந்தினராக மதிப்பிற்குரிய ரவின்குமார் கிருஷ்ணசாமி, ஜொகூர் மாநில ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு குழுவின் தலைவர் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவார்.
முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
🗓️ 09.05.2026
⏰ மாலை 6.00 முதல் இரவு 10.00 வரை
📍 காரைநகர் நட்புறவு மையம்
🎯 ஊடக நண்பர்கள் இந்நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
📞 தொடர்புக்கு:
யோகி – 016-5432572
பிரவீன் – 016-7297975
மோகன் – 017-7540597
சங்கத்தமிழன் – 011-17992633
0 Comments