கோலாலம்பூர், மார்ச் 25-
ம.இ.காவின் மத்திய செயலவை இன்று நடைப்பெற்ற நிலையில் எல்லாரும் எதிர்பார்த்த வகையில் எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் ம.இ.கா எடுக்கவில்லை என்பதே பதில். ஆனால் ம.இ.கா இப்போதைக்கு தேசிய முன்னணியோடு பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேள்விக்கு ம.இ.கா தற்போது சொல்லியுள்ள காரணம், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆண்டு கூட்டத்தில் ம.இ.கா உறுப்பினர்கள் தேசிய முன்னணியை விட்டு ம.இ.கா வெளிய சென்று பெரிக்காத்தானில் இணைய வேண்டும் என தீர்மாணம் எடுத்த நிலையில், இறுதியான முடிவை ம.இ.கா மத்திய செயலவையிடம் அவர்கள் கொடுத்தனர்.
அந்த தீர்மாணம் எடுக்கப்பட்ட நேரத்தில் பெரிக்காத்தான் தலைவராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பதவி வகித்தார். அதன் அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் இப்போது அரசியல் சூழல் மாறியுள்ள நிலையில், பெரிக்காத்தான் தலைமைத்துவமும் மாறியுள்ள நிலையில் மீண்டும் கட்சி தொண்டர்களுடன் கலந்து பேச வேண்டிய சூழல் எழுந்துள்ளதால் இப்போதைக்கு ம.இ.கா தேசிய முன்னணி கூட்டணியில் நிலைத்து இருப்பதாக ம.இ.காவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் இன்று நடந்த மத்திய செயலவையில் எந்த முடிவையும் ம.இ.கா உறுதியாக எடுக்காத நிலையில் ம.இ.காவின் தலையெழுத்து எதிர்வரும் பொது தேர்தல் சமயத்தில் தான் தெரியவரும்.
போட்டியிடும் தொகுதி பங்கீட்டில் முரன்பாடு வந்தால்தான் ம.இ.கா எந்த கூட்டணியோடு கைகோர்க்கும் என்ற விடை தெரிய வரும். அதுவரை உறுதியான முடிவு கிடைக்காது என்றுதான் கூற வேண்டும்.
0 Comments