பூச்சோங், மே 3 –
கல்வி அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் திறமையான மனிதவளத்தை உருவாக்க முடியும் என ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா தெரிவித்தார்.
இன்று காசிபீல்ட்ஸ் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஸ்ரீ முருகன் பூச்சோங் நிலையத்தின் “கல்வி யுத்தம்” நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியை கல்வி அமைச்சர் பட்லினா சீடேக் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். 1,000க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், இந்திய மாணவர்களுக்கு 2,500 மெட்ரிகுலேசன் இடங்களை ஒதுக்க கல்வி அமைச்சு முன்வர வேண்டும் என ஸ்ரீ முருகன் நிலையம் வலியுறுத்தியது.
இதன் மூலம் கல்வியில் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அண்மையில் வெளியான எஸ்பிஎம் தேர்வின் முடிவில் நன்னெறிக் கல்வியின் தேர்வு முடிகளில் சில சர்ச்சைகள் எழுந்துள்ளதை தொடர்ந்து அதனை மறு ஆய்வு செய்ய வேண்டுமென சுரேன் கந்தா கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, நன்னெறிக் கல்வி தேர்வின் முடிவுகள் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 10,000 மாணவர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையங்களில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments