loader
மன நிம்மதியை உருவாக்கும் "சுகமளிக்கும் குருசேட்" நிகழ்வு 21ஆம் தேதியன்று ஸ்கூடாயில் நடைபெறுகிறது  பேராயர் டாக்டர் மேனன் தகவல்

மன நிம்மதியை உருவாக்கும் "சுகமளிக்கும் குருசேட்" நிகழ்வு 21ஆம் தேதியன்று ஸ்கூடாயில் நடைபெறுகிறது பேராயர் டாக்டர் மேனன் தகவல்

ஜோகூர்,பிப் 19-
ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல சிக்கல்கள், கஷ்டங்கள் , சவால்கள் வந்து போகும், அந்த அனைத்து இன்னல்களையும்  கடந்து மன நிம்மதியை தேடும் பயணத்தில் பலர் இருப்பார்கள். அந்த வகையில் மன நிம்மதியை அடிப்படையாக கொண்டு ஈப்போ தாவீதின் கூடாரத்தின் பேராயர் டாக்டர் மேனன் மானசா வரும் 21 ஆம் தேதியன்று "சுகமளிக்கும் குருசேட்" எனும் நிகழ்வினை ஜோகூர் ஸ்கூடாயில் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த அற்புத நிகழ்வு இங்குள்ள *குட் ஹோப் தங்கும் விடுதியில்* இரவு 7 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஈப்போ, தாவிதின் கூடாரத்தில் நடைபெற்ற உலக புகழ்பெற்ற பாடகர் பென்னி ஜோன்‌ ஜோசப் இசை நிகழ்விற்கு பின்னர்‌ பேராயர் டாக்டர் மேனன் மானசா  கூறினார்.

"குருசேட்" என்பது சிலுவைப்‌போர் அல்லது அறப்போர் என்று சொல்லலாம்.

மன நிம்மதியை அற வழியில் இயேசு கிறிஸ்துவின் வழிக்காட்டலில் கொண்டு வரும் இந்த "சுகமளிக்கும்" நிகழ்வில் அனைவரும் வந்து கலந்து கொள்ளலாம்.

இது தொடர்பான விவரங்கள் அறிய 01112409932 சகோதரி புஸ்பா என்பவரை கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுடன் அழைக்கலாம் என்றார்.

தொடர்ந்து இன்று தேவாலயமே அதிரும் படியாக தந்தை இயேசு‌ பற்றி பாடிய‌‌ பென்னிக்கு அவர் பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.

பாடல்கள் மத்தியில் தேவன் தம் வாழ்க்கையில் ஏற்படுத்திய சிறந்த மாற்றங்களை பென்னி ஜோன் ஜோசப் எடுத்துரைத்து அனைவருக்கும் பெரும் உற்சாகத்தை மூட்டியது.

ஜெபம், வழிப்பாடு தவிர்த்து பல நிகழ்வுகளையும் ஈப்போ, தாவிதின் கூடாரம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply

Recent News