loader
தமிழ்நாட்டு சாதி கலாச்சாரம் மலேசிய இந்துக்களுக்கு தேவை இல்லை! இந்து சங்கம் வன்மையாக கண்டிக்கிறது !

தமிழ்நாட்டு சாதி கலாச்சாரம் மலேசிய இந்துக்களுக்கு தேவை இல்லை! இந்து சங்கம் வன்மையாக கண்டிக்கிறது !

கோலாலம்பூர் ஏப்ரல்-4

இன்று கலா மண்படத்தில்  நடைப்பெற்ற மலேசிய இந்து சங்கத்தின்  60 -ஆம் ஆண்டு வைரவிழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த விழாவில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், வட்டார பொருப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.

ம.இ.காவின்  முன்னாள் தேசியத் தலைவர்  டான் ஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் சிறப்பு வருகை புரிந்தார்.

நிகழ்ச்சியின் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் பேசுகையில்,  தமிழ் நாட்டில் மேலோங்கி இருக்கும் சாதி கலாச்சாரம் மலேசியாவில் ஊடுருவி வருகிறது. இதை தடுத்து நிறுத்த இந்து சங்கம் போராடும் என்றார்.

மலேசியாவில் தமிழர், தெலுங்கர், மலையாளி என பல இனத்தை சார்ந்த இந்துகள் இருந்தாலும் எங்களை நாங்கள் இந்துகளாக அடையாள படுத்தி வருகின்றோம்.
மலேசிய இந்துகளுக்கு சாதி அடையாளம் தேவை இல்லை  என தங்க கணேசன் தெரிவித்தார்.

இந்த சாதி கலாச்சாரத்தை நிறுத்த இந்து சங்கம் போராடும் என தங்க கணேசன் திட்டமிட்டமாக தெரிவித்தார்.

செய்தி: வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News