கோலாலம்பூர், ஏப்.18-
அரசியல் என்றால் அதில் அனைவருக்கும் ஒரு கனவு அல்லது எதிர்கால சிந்தனை இருக்கலாம். ஆனால் கூட்டணி என்று வந்துவிட்டால் அதில் விசுவாசம் இருப்பது அவசியம் என தேசிய முன்னணியின் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி தெரிவித்தார்.
அந்த வகையில் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்து அதன் பின்னர் மீண்டும் தேசிய முன்னணிக்குள் வருவதாக அறிவிப்பது சம்பந்தப்பட்ட கட்சி கூட்டணிக்கு உண்மையாக இல்லை என்பதை காட்டிவதாக அவர் சொன்னார்.
மேலும் சம்பந்தப்பட்ட கட்சி இன்னும் இருக்கிறதா அல்லது செயலிழந்து விட்டதா என்பது தெரியவில்லை என்ற அவர், எந்த கட்சி என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என மறைமுகமாக கூறினார்.
கிம்மாவின் 46ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று தலைநகர் உலக வாணிப மையத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தை அதிகாரப்பூரவாக வினைக்கு வைத்த அவர் இவ்வாறு கூறினார்.
பல ஆண்டுகளாக ஒரு கூட்டணியிலிருந்து விட்டு அந்த கூட்டணியை விட்டு விலகுவதாக கூறிவிட்டு மற்ற கூட்டணியில் இணைய திட்டம் வகுப்பது மாபெரும் துரோகமாகும் என அவர் மேலும் அழுத்தமாக கூறினார்.
அந்த வகையில் தேசிய முன்னணியின் தோழமை கட்சியாக இருக்கும் கிம்மா கூட்டணிக்கு உண்மையாக இருப்பதாக அவர் பெருமையாக கூறினார்.
0 Comments