loader
கும்பாபிஷேகத்திற்கு தலைமைத்தாங்கி மாலை அணிந்து கொள்ளும் தலைவர்கள் அன்றே ஆலய பதிவை பற்றி கேட்டு அறிந்திருந்தால் இன்று இந்த பிரச்சினை தொடர்ந்திருக்காது! -புரட்சி உமாகாந்தன்

கும்பாபிஷேகத்திற்கு தலைமைத்தாங்கி மாலை அணிந்து கொள்ளும் தலைவர்கள் அன்றே ஆலய பதிவை பற்றி கேட்டு அறிந்திருந்தால் இன்று இந்த பிரச்சினை தொடர்ந்திருக்காது! -புரட்சி உமாகாந்தன்

கோலாலம்பூர், மார்ச் 25-
அன்று ஆலய கும்பாபிஷேகத்திற்கு சென்று மாலைகளை மட்டும் அணிந்து கொண்ட அரசியல் தலைவர்கள், சென்ற ஆலயங்களின் பதிவுகளை கேட்டிருந்தால் இன்று ஆலய பிரச்சினைகள் எழுந்திருக்காது என புரட்சி இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் தெரிவித்தார்.

அதேபோல் 1960ஆம் ஆண்டுகளில் உருவாகி மலேசிய இந்து சங்கமும் நாட்டிலுள்ள அனைத்து ஆலயங்களின்  முழுமையான ஆவணங்களை இதுவரை கொண்டிருக்கவில்லை. இன்னமும் இந்து சங்கத்தை நம்புவதில் எந்த பயனும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

ஆலய சர்ச்சைகளுக்கு உண்மையான காரணங்களை கண்டறிய தான் சமாதான கூட்டத்தில் பங்கேற்றதாகவும் அதனை விளக்கும் வகையில் இன்று ஊடக சந்திப்பை நடத்தியதாகவும் அவர் சொன்னார்.

நாட்டில் ஆலயம் தொடர்பான சர்ச்சைகள் பரவலாக நடந்தது.

இதற்கு தீர்வு காண வேண்டும் அடிப்படையில் தான்  புத்ராஜெயாவில் ஒரு சமாதான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன் என அவர் சொன்னார்.

உடனே நான் ஆலயங்கள் உடைத்ததற்கு காரணமானவர்களுடன் கைகுலுக்கி விட்டோம். அவர்களுடன் சாப்பிட்டோம் என பல குற்றச்சாட்டுகள்கள் எழுந்துள்ளது.

ஆனால் அதில் உள்ள உண்மைகள் யாருக்கும் தெரியாது. முதலில் இக்கூட்டம் போலிஸ் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் வேளையில் ஆலய சர்ச்சைகளுக்கு உண்மையிலேயே என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் இக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டன் என அவர் மேலும் சொன்னார்.

அக்கூட்டத்தில் யாரும் சமாதானமாக பேசவில்லை. எங்களின் ஆதங்களையும் நாங்கள் வெளிப்படுத்தினோம்.

குறிப்பாக ஜம்ரி வினோத், செக்கு சந்திரா உட்பட பலர் பேசுவதும் செய்வதும் இந்துக்களை பாதிக்கிறது என்பதை எடுத்துக் கூறவே நான் அங்கு சென்றேன்.

ஆகையால் சமூக ஊடங்களில் பொய்யான தவறுகளை பரப்ப வேண்டாம். உண்மை என்னவென்று தெரியாமல் பேச வேண்டாம் என்று உமாகாந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News