குவாந்தான் முகாமில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழந்த 22 வயது ராணுவ வீரர் ட்ரூப்பர் கே. இந்திரன் மரணம் தொடர்பாக இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஇகா பினாங்கு மாநில தலைவர் ஜே. தினகரன், ஆரம்ப அறிக்கையில் வெளிப்புற காயங்கள் இல்லை என கூறப்பட்டாலும், உட்புற காயங்கள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
குடும்பத்தினரின் சந்தேகத்தை முன்னிட்டு, உண்மையான மரண காரணம் தெரிய இரண்டாவது பிரேத பரிசோதனை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
0 Comments