கோலாலம்பூர் மார்ச் 27-
இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு மடானி அரசாங்கம் 5 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
சபா சரவாக் மாநிலங்கள் உட்பட நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்கள் இதற்கு முறையாக விண்ணப்பம் செய்யலாம்.
நாட்டில் உள்ள மாறுபட்ட சமயங்களின் நல்லிணக்கத்தை காக்கவும் ஒரு பல்லின சமுதாய அமைப்பை உறுதிப்படுத்தவும் இத்தகைய உதவிகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
ஒவ்வொரு வழிப்பாட்டு தளத்திற்கும் 2 லட்சத்து 50,000 வெள்ளி ஓதுக்கீடு செய்யப்படும்.
குறிப்பாக வழிபாட்டு தலங்களை பழுது பார்ப்பது, புரணமைப்பு செய்வது, புத்தாக்கம் செய்வது, பராமரிப்பது, புதிய கட்டடங்களை எழுப்ப இந்த தொகை வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
0 Comments