loader
பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் வரை நான் தலைவன் அல்ல; சேவகன் மட்டுமே! -டத்தோ லோகா பால மோகன்

பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் வரை நான் தலைவன் அல்ல; சேவகன் மட்டுமே! -டத்தோ லோகா பால மோகன்

கோலாலம்பூர், மார்ச் 3-
பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைக்கும் வரை நான் கட்சியின் தலைவர் என நான் கூறிக் கொள்ளமாட்டேன். கட்சியின் சேவகராரகதான் இதுப்பேன். இந்த நிலை கண்டிப்பாக மாறும் என்று அவர் சூளுரைத்தார்.

இதுவரை கட்சி சுமுகமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் எங்களின் கொள்கை நிறைவேறும் வரை நாங்கள் அனைவரும் உழைப்போம் என அவர் சொன்னார்.

8 தொகுதிகளை வென்றோம் என்றால் எங்களின் முழு சேவையை மக்களுக்கு வழங்குவோம். என்களின் எதிர்ப்பார்ப்பு ஒரு நாள் நடக்கும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.

அவரின் 60ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று பத்து கேவ்ஸ் செங்கா மண்டபத்தில் விமரிசையாக நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின்போது அவருக்கான AI வடிவத்தில் பாடல் ஒளிப்பரப்பட்டது. சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் சுரேந்திரன் தன் தலைவருக்காக இந்த முயற்சியை ஏடுத்திருந்தார்.

இந்த பாடல் காட்சி வந்திருந்தவர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. அதன் பின்னர் டத்தோ லோகா பாலவிற்கு சிலாங்கூர் பிபிபியினர் பெரிய அளவிலான மாலையை அணிவித்தனர்.

மாலை அணிவிக்கு பிறகு டத்தோ லோகா பாலா பேசுவையில், இந்த கொண்டாட்டத்தையும் மாலையையும் ஏற்பதற்கான காலம் இது கிடையாது. பிபிபி கட்சிக்கு 8 நாடாளுமன்ற தொகுதிகள் கிடைத்த பின்னர் நான் இந்த சிறப்பை ஏற்றுக் கொள்கிறேன் என அவர் சொன்னார்.

0 Comments

leave a reply

Recent News