கோலாலம்பூர், மார்ச் 7-
பத்து கேவ்ஸில் உள்ள ஸ்ரீ பாலா இல்லம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒரு சிறுவன் மீது உடல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாகக் கூறப்படும் புகாரை மஇகா பிரிகேட் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவன் மன உளைச்சல், தூக்கக் குறைவு மற்றும் கல்வி பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அவரின் தந்தை செய்த போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், அது மிகக் கொடூரமானதும் மனிதநேயமற்ற செயலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், போலீசார் உடனடி மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகா பிரிகேட் தலைவர் எண்ட்ரு டேவிட் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சமூக நலத்துறை நாடு முழுவதும் குழந்தைகள் இல்லங்களில் சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க தயாராக இருப்பதாகவும், அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பும் உளவியல் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments