loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பெர்சத்து அதிபர் முகைதீன் யாசினுடன் தாம் பேசியதாகவும், பெர்சத்து வேட்பாளராக அடுத்த பிரதமராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்த விவாதம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மகாதீரின் இந்தக் கூற்று மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பான்மையான எம்.பி.க்கள் முகைதீனைத் தேர்ந்தெடுத்தால் தாமும் ஏற்றுக்கொள்வதாக மகாதீர் கூறியுள்ளார்.

அம்னோவுடன் பணியாற்றுவதில் தனக்கும் முகைதீனுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட மகாதீர், அம்னோவை ஒரு கூட்டணிக் கட்சியாக  ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

மேலும், பெர்சத்து தலைவராக நீடிக்க ஒப்புக் கொண்டதையும் மகாதீர் உறுதிப்படுத்தியுள்ளார்.மூன்று நாட்களுக்கு முன்பே கட்சி, தம்மைத் தலைவராகத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதாக மகாதீர் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பானில் மீண்டும் பெர்சத்து சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, அது குறித்து மகட்சியுடன் விவாதிக்க வேண்டும் என்றார்!

 

கோலாலம்பூர், பிப், 27-

ஸ்தாப்பாக் ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் உட்பட 3 இரும்புக் கடைகள் இன்று உடைக்கப்பட்டதில், அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்ற அறிவிப்பு எதுவும் இன்றிநேற்று முன்தினம் (26.2.2020) காலையில்  கோலாலம்பூர் மாநகர் மன்றம், நில அலுவலக அதிகாரிகள் ஆலயத்தையும் கடைகளையும் உடைத்ததாக ஆலயத் தலைவர் ஶ்ரீ ரமேஷ் தெரிவித்தார்.

பிபிஆர் அடுக்ககத்தின் அருகில் அமைந்திருந்த ஆலயத்தை, மேம்பாட்டு பணி காரணமாக தற்போது இருந்த இடத்தில் நில அலுவலகம் தங்களுக்கு மாற்று இடத்தை வழங்கியதோடு, ஆலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதோடு ஆலயத் திறப்பு விழாவில் நில அலுவலக துணை இயக்குநரும் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் 3 இரும்புக் கடைகளுக்கும் மாற்று இடமாக ஆலயம் அமைந்திருந்த இடத்திற்கு அருகில் இடத்தை வழங்கியது நில அலுவலகம்.

ஆனால்,  2017-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி, ஆலயத்தையும் கடைகளையும் காலி செய்ய வேண்டும் என்று நில அலுவலகம் நோட்டீஸ் வழங்கியிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து தாம் நீதிமன்ற வழக்குத் தொடுத்ததாக  ஶ்ரீ ரமேஷ் கூறினார். 

இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதுமட்டுமின்றி இது போன்ற விவகாரங்கள் தொடர்பில் நீதிமன்றத்திற்குச் சென்று விட்டால் நீதிமன்ற வழங்கும் கடிதத்தை வைத்துதான் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். ஆனால், நீதிமன்ற உத்தரவு இன்றி அனைத்தையும் உடைத்துவிட்டனர்.

இவ்விவகாரத்தில், செத்திய வங்சா, வங்சா மாஜூ ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்பு அதிகாரிகள் தலையிட்டும் ஆலயத்தையும் கடைகளையும் காப்பாற்ற முடியவில்லை.

இதனால் ஆலயம், சாமி சிலைகள், இரும்புக் கடைகளின் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? என்று ஸ்தாப்பாக் வட்டாரப் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

ஆலயத்திற்கு நோட்டீஸ் வழங்கிய பின்னர்,  இந்த ஆலயத்தை உடைக்கக் கூடாது என்று பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூட்டரசுப் பிரதேச அமைச்சருக்கு கடிதம் வழங்கியிருந்தார். ஆனால் எவ்வித ஆதாரங்களும் இன்றி அனைத்தையும் உடைத்துவிட்டனர்.

இது சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய விருக்கிறோம். இதே இடம் அல்லது மாற்று இடம், சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு நஷ்ட ஈடு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து வழக்குப் பதிவு செய்யப்படும். அதுவரையில் இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ஶ்ரீ ரமேஷ் கூறினார்!

கோலாலம்பூர்: நாட்டில் அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் அரங்கேறும் நாடகங்களால் மக்கள் குழம்பிப்போயுள்ளனர். மகாதீரின் ஆடு புலி ஆட்டம்தான் பெரும் குழப்பமாய் இருக்கிறது இங்கே.

கடந்த திங்களன்று பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து அதிரடியாய் விலகினார்  துன் டாக்டர் மகாதீர் முகமட். அம்னோவுடன் கைகோர்க்கும் பெர்சாத்துவின் போக்கு பிடிக்காததால் விலகியதாகச் சொல்லப்பட்டது. பின்னர் கட்சிகள் அற்ற அரசாங்கம் அமைப்பதற்குத் தலைமை தாங்குவேன் என புது ஸ்கிரிப்ட் ரெடி செய்தார்.

இதனை அடுத்து மகாதீரை விட்டுக்கொடுக்காமல் இருந்த பிகேஆர் தரப்பு அன்வாரே பிரதமர் என புதிய கீதம் இசைத்தது.

இதன் எதிரொலியோ என்னவோ, இப்போது மீண்டும் பெர்சாத்துவின் தலைவர் பதவியில் மகாதீர் அமர இருப்பதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

பெர்சாத்து பொதுச்செயலாளர் மார்சுகி யஹ்யா இதனை உறுதிப்படுத்தியதாகத் தெரிகிறது!

ரஜினி கட்சி தொடங்குவது குறித்து தமிழ்ப்புத்தாண்டில் தெரிவிப்பார்  என்றும், கட்சி தொடங்குவதற்கு முன்பு தங்களது சொந்த கிராமமான வேப்பனஹள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பத்திற்கு அவர் நிச்சயம் வந்து செல்வார். இதற்காக மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் முயற்சி செய்து வருவதாகவும் ரஜினியின் அண்ணன் சத்தியநாராண ராவ் தெரிவித்தார்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். மக்களிடம் சகோதரத்துவம் இல்லாதநிலை உருவாகி உள்ளது. சி.ஏ.ஏ. சட்டம் குறித்து பிரதமர் மோடி சிறப்பாகச் செய்து வருகிறார். சில நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விடும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

டெல்லியில் ஏற்பட்ட கலவரம் எதிர்கட்சிகள் அல்லது யாருடைய தூண்டுதல் பேரிலோ ஏற்பாடு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது நல்லதல்ல. இதுமிகவும் தவறு என அவர் தெரிவித்தார்!

 

தாம் பதவி விலகுவதற்கு பல காரணங்கள் உள்ளதாகவும், இருப்பினும் பல தரப்புகளின் ஆதரவும் தமக்கு இருப்பதை உணர்வதாகவும் இன்று மகாதீர் தெரிவித்துள்ளார்.


நான் பதவியை விட்டு விலக மாட்டேன் என்றும குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. எனவே நான் பதவி விலகினேன். எனக்குப் பதவி ஆசை இல்லை என மகாதீர் கூறினார்.

குறிப்பிட்ட குறிக்கோளை அடைவதற்கு மட்டுமே  அரசியல் பதவிகள் இருக்க வேண்டும்.  மக்களின் நலனைக் காப்பதில் மட்டுமே அரசியல்வாதிகளின் எண்ணம் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கட்சிகள் சார்பற்ற அரசாங்கத்தை இரு தரப்பும் ஆதரித்தால், தாம் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிக்க முடியும் என்றார்.

அரசியல் மற்றும் அரசியல் கட்சிகளை இப்போதைக்கு ஒதுக்கி வைக்க வேண்டும்.
முடிந்தால் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக இல்லாத ஓர் அரசாங்கத்தை நிறுவ முயற்சி செய்ய வேண்டும் அவர் கூறினார்!