loader
ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

ஹலால் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அவசியம் - பெர்மிம்

கோலாலம்பூர், நவம்பர் 4 – 

புச்சோங்கில் செயல்பட்டு வந்த ஒரு கோழி இறைச்சி விநியோக நிறுவனத்தில் ஹலால்நடைமுறைகள் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்டஉடனடி நடவடிக்கையை பெர்மிம் (மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை) வரவேற்றுள்ளது.

 

பொது மக்களின் நம்பிக்கையையும் நாட்டின் ஹலால் சான்றிதழ் அமைப்பின் மதிப்பையும்பாதுகாக்கும் நோக்கில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு விரைவாக நடவடிக்கை எடுத்தமலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்), சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை(ஜாய்ஸ்) மற்றும் அது தொடர்புடைய அமலாக்க அதிகாரிகளுக்கு பெர்மிம் தனதுபாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டது.

 

அதேசமயம், ஹலால் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மீறுவோர் மீது மிகக்கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பெர்மிம் வலியுறுத்தியது. இத்தகைய குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் மற்றவர்களுக்கு பாடமாகவும்எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும் என அது தெரிவித்தது.

 

மலேசியா இன்று உலக அரங்கில் ஹலால் துறையின் முன்னணி நாடாக விளங்குகிறது. மலேசிய ஹலால் சான்றிதழ் உலகளாவிய அளவில் உயர்ந்த நம்பகத்தன்மையையும்மரியாதையையும் பெற்றுள்ளது. இதனை பாதிக்கும் எந்தவொரு அலட்சியமோ அல்லதுவேண்டுமென்றே செய்யப்பட்ட விதிமுறை மீறலோ நாட்டின் நற்பெயருக்கு சேதத்தைஏற்படுத்தக்கூடும்.

 

பெர்மிம் தேசியத் தலைவர் முகம்மது அஸ்மான் ஷா கூறுகையில்:

 

"ஹலால் சான்றிதழ் என்பது ஒரு வணிக அனுமதி மட்டுமல்ல. அது முஸ்லிம் சமூகத்தின்நம்பிக்கையோடும் இஸ்லாமிய மதிப்புகளோடும் தொடர்புடைய ஒரு புனிதமானபொறுப்பாகும். ஹலால் நடைமுறைகளை மீறுவோர் மீது எவ்வித சமரசமும் இன்றிகடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தகைய நடவடிக்கைகளே மற்றதொழில்துறையினருக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக அமையும்."

 

மேலும், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால் மலேசியாவின் இஸ்லாமியஅடையாளத்திற்கும் உலகளாவிய ஹலால் மையம் என்ற அந்தஸ்திற்கும் பாதிப்புஏற்படுவதுடன், ஹலால் சான்றிதழ் மீதான உள்ளூர் மற்றும் சர்வதேச நுகர்வோரின்நம்பிக்கையும் குறையக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

எனவே, ஹலால் வழங்கல் சங்கிலியில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும்விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், அரசாங்கமும் அமலாக்கஅமைப்புகளும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெர்மிம்கேட்டுக்கொண்டுள்ளது.

0 Comments

leave a reply

Recent News