ஈப்போ, நவ 4-
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஜெலாப்பாங் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு தீபாவளி பலகாரங்களை அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான் வழங்கினார்.
ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகையின்போது இதுபோன்று மக்களுக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கி மகிழ்விப்பது வழக்கமான ஒன்று என அவர் தெரிவித்தார்.
இந்தப் பலகாரங்களை வழங்கிய நிகழ்வின்போது, பொதுமக்கள் அனைவருக்கும் தனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் சியா பாவ் ஹியான் தெரிவித்துக் கொண்டார்.
0 Comments