loader
350 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கிய ஸ்ரீ தர்ம சாஸ்த அன்புக் கரங்கள்!

350 குடும்பங்களுக்கு தீபாவளி அன்பளிப்பு வழங்கிய ஸ்ரீ தர்ம சாஸ்த அன்புக் கரங்கள்!

பத்துகேவ்ஸ், நவ.2-

பத்து கேவ்ஸ் வட்டாரத்தில் வசிக்கும் 350 இந்தியக் குடும்பங்களுக்கு ஸ்ரீ தர்ம சாஸ்த அன்புக்கரங்கள் சிலாங்கூர் அமைப்பின் சார்பில் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

 

அமைப்பின் தலைவர் எஸ். மருதையா தலைமையில் நடைபெற்ற தீபத் திருநாள்கொண்டாட்ட நிகழ்ச்சியில், பத்து கேவ்ஸ் வட்டாரத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்குதீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

 

இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டஎஸ். மருதையா, ஒவ்வோர் ஆண்டும் ஏழை மற்றும் தேவையுடைய குடும்பங்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

 

இந்த முயற்சிக்கு பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் தங்களால் இயன்ற நிதி மற்றும் பொருள்உதவிகளை வழங்கி ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

குறிப்பாக, டத்தோஸ்ரீ ஹரி, டத்தோ பார்த்திபன், டத்தோ பிரகாஷ், கோம்பாக் மஇகா தலைவர்கோபி, டத்தோ பாலமுருகன், செலாயாங் மாவட்ட நகராண்மைக் கழக உறுப்பினர் தேவாஉள்ளிட்டோர் வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 

மேலும், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு வகைகளில் உதவிக்கரம்நீட்டிய அனைவருக்கும் அமைப்பின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், எதிர்காலத்தில் இதைவிடப் பெரிய அளவில் தீபாவளி அன்பளிப்பு நிகழ்ச்சியை நடத்தத்திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

0 Comments

leave a reply

Recent News