சிகமாட், அக். 30-
எதிர்வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசியமுன்னணியின் வெற்றிக்கு பிபிபி கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்றுஅக்கட்சியின் தேசிய இளைஞர் அணித் தலைவர் சத்தியா தெரிவித்தார்.
தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு பிபிபி தொடர்ந்து தனது முழு ஆதரவை வழங்கிவருவதாகக் குறிப்பிட்ட அவர், மலாக்கா மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணிவேட்பாளர்களின் வெற்றிக்காக விலாயா மாநில பிபிபி கட்சி களமிறங்கிப் பணியாற்றும்என்றார்.
இதன் ஒரு பகுதியாக, மலாக்காவில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் விலாயாமாநில பிபிபி கட்சியினர் 14 நாட்கள் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
தேசிய முன்னணியின் வெற்றிக்கு தங்களால் இயன்ற அனைத்து ஒத்துழைப்புகளையும்வழங்குவதுடன், தேர்தல் களத்தில் முழுமையாகப் பணியாற்றுவோம் என்றும் அவர்உறுதியளித்தார்.
மேலும், சிகமாட் தொகுதி பிபிபி கட்சித் தலைவர் டத்தோ வினோத்தின் மக்கள் சேவைகள்தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் சத்தியா குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சிகமாட் தொகுதி பிபிபி கட்சியின் ஆண்டுப் பொதுக்கூட்டம் இன்றுநடைபெற்றது. இதில் பிபிபி தேசிய உதவித் தலைவர் இளையப்பன் முத்துசாமி, தேசியஇளைஞர் அணித் தலைவர் சத்தியா உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலை தலைவர்கள்கலந்து சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய தொகுதித் தலைவர் டத்தோ வினோத், கட்சியின் அனைத்துநிலைத் தலைவர்களும் தமக்கும் தொகுதி நிர்வாகத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பைவழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்றைய நிகழ்ச்சியில் 10 சக்கர நாற்காலிகள் தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டும் இதேபோன்ற மக்கள் நலச் சேவையின் மூலம் 32 சக்கர நாற்காலிகள்வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட டத்தோ வினோத், தொடர்ந்து மக்களுக்குத் தேவையானஉதவிகளை வழங்குவதில் பிபிபி கட்சி முனைப்புடன் செயல்படும் என்றார்.
0 Comments