கிள்ளான், அக். 27 –
முறையான பதிவு இல்லாத ஆலயங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு மானியம் வழங்காதுஎன்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
இதற்கான விதிமுறைகள் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதாகவும், தற்போது அவற்றைத்தமது தரப்பு முறையாகக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
முறையான பதிவு இல்லாத ஆலய நிர்வாகங்கள் தாராளமாகத் தங்களை அணுகலாம்என்றும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தாங்கள் தயாராக இருப்பதாகவும்அவர் தெரிவித்தார்.
ஆனால், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாமல், அரசு மானியம் வழங்கவில்லை என்று குறை கூறுவதில் நியாயமில்லை என்றும் அவர்சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், அண்மையில் ஓர் ஆலயத்தில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டசம்பவத்தைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறினார். இத்தகைய சம்பவம்ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்திற்கும் இழிவை ஏற்படுத்துவதாக அவர் வருத்தம்தெரிவித்தார்.
ஆலயங்கள் இடிக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில், இதுபோன்ற செயல்கள் ஆலயங்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும் அவர்குறிப்பிட்டார்.
எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும், புனிதத் தலங்களில் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில்ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாப்பா ராயுடுவலியுறுத்தினார்.
0 Comments