loader
அரசாங்கச் சேவைகளை ஒரே தளத்தில் பெற MyGOV Malaysia –அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மக்களவையில் பதில்

அரசாங்கச் சேவைகளை ஒரே தளத்தில் பெற MyGOV Malaysia –அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மக்களவையில் பதில்

மலேசிய மக்கள் அரசாங்கச் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும்பெறுவதற்கு MyGOVMalaysia செயலி முக்கியப் பங்காற்றி வருவதாகஇலக்கவியல்அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

 

பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் சேவைகளை ஒரேதளத்தில் ஒருங்கிணைக்கும் இந்தச்செயலி, மக்களின்நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துவதுடன், நாட்டின்அரசாங்கநிர்வாகத்தை மேலும் திறன்மிக்கதாகமாற்றுவதற்கும் உதவுவதாக அவர் கூறினார்.

 

அரசாங்கச் சேவைகளை இலக்கவியல் முறையில் விரைவாகமாற்றியமைப்பதற்காக, முழுஅரசாங்க அணுகுமுறையின்(Whole-of-Government – WoG) அடிப்படையில்செயல்படுத்தப்படும் அரசாங்கத்தின் முக்கிய உத்திபூர்வமுயற்சியே GovTech Malaysia ஆகும்.

 

இந்த அணுகுமுறை, பல்வேறு அமைச்சுகள் மற்றும்அரசாங்க நிறுவனங்களுக்குஇடையிலான தரவுப் பகிர்வு, பொதுவான இலக்கவியல் தளங்களின் பயன்பாடுமற்றும்அரசாங்கச் சேவைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்குமுக்கியத்துவம்அளிக்கிறது. இதன் வழி பொதுமக்களும்வணிகத் துறையினரும் அரசாங்கச் சேவைகளைமேலும்எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் பெறமுடியும்.

 

GovTech Malaysia முன்னெடுப்பின் கீழ் உருவாக்கப்பட்டMyGOV Malaysia, அரசாங்கத்தின்பல்வேறு இலக்கவியல்சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் செயலியாகும். MyDigital ID வழி ஒரே உள்நுழைவு முறையைப் (Single Sign-On) பயன்படுத்தி, பொதுமக்கள் பல்வேறுஅரசாங்கச்சேவைகளை அணுக முடியும்.

 

2026 அக்டோபர் 8ஆம் தேதி நிலவரப்படி, MyGOV Malaysia செயலி 31 இலட்சத்து 99 ஆயிரத்து 120 முறை பதிவிறக்கம்செய்யப்பட்டுள்ளது. மேலும், 30 இலட்சத்து 14 ஆயிரத்து96 செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ள இந்தச்செயலியில், 22 அரசாங்கநிறுவனங்களின் 62 சேவைகள்ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கோபிந்த் சிங்டியோதெரிவித்தார்.

 

இந்தச் செயலியின் வழி பொதுமக்கள் அபராதங்களைச்சரிபார்த்துச் செலுத்துதல், MyKad அடையாள அட்டைக்குப்பதிலாகப் புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், பொருட்களின்விலைகளைச் சரிபார்த்தல், பயணத்தகவல்கள் மற்றும் உரிமங்கள் தொடர்பானவிவரங்களைப்பெறுதல் போன்ற சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

 

மேலும், சுகாதாரச் சேவைகளுக்கான முன்பதிவுகளைநிர்வகித்தல், தேர்வு முடிவுகளைச்சரிபார்த்தல் மற்றும்உரிமை கோரப்படாத பணம் தொடர்பானவிவரங்களைஅறிந்துகொள்ளுதல் போன்ற வசதிகளும் இந்தச்செயலியில்இடம்பெற்றுள்ளன.

 

இதன் வழி பொதுமக்கள் ஒவ்வொரு சேவைக்கும் வெவ்வேறுஅரசாங்கஅலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம்குறைகிறது. குறிப்பாக, பயணச் செலவு, நேர விரயம் மற்றும்நீண்ட நேரக் காத்திருப்பு ஆகியவற்றைக் குறைப்பதற்குMyGOV Malaysia உதவுகிறது.

 

அதேவேளையில், இந்தச் செயலி பொதுமக்களுக்குமட்டுமின்றி, நாட்டின் அரசாங்கநிர்வாகத் திறனைமேம்படுத்துவதற்கும் முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது.

 

பல்வேறு அமைச்சுகளும் அரசாங்க நிறுவனங்களும்தங்களது சேவைகளை ஒரேஇலக்கவியல் தளத்தில்ஒருங்கிணைப்பதன் வழி, ஒரே மாதிரியானஅமைப்புகளைத்தனித்தனியாக உருவாக்க வேண்டிய தேவை குறைகிறது. இதன் வழிஅரசாங்கச் செலவினங்களையும் வளங்களையும்சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்.

 

MyGOV Malaysia செயலிக்கு அப்பால், செயற்கைநுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டுதகவல்களையும்உதவிகளையும் வழங்கும் TanyaKerajaan சேவையையும்GovTech Malaysia உருவாக்கியுள்ளதாக அமைச்சர்தெரிவித்தார்.

 

மேலும், பயனர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்பசேவைகளை வழங்கும் MyPersona மற்றும் சந்திப்பு நேரமுன்பதிவுகளை நிர்வகிக்கும் MyAppointment ஆகியசேவைகளும்எதிர்காலத்தில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

 

2026ஆம் ஆண்டு இறுதிக்குள் MyGOV Malaysia செயலியில்மேலும் அதிகமான அரசாங்கச்சேவைகளைஇணைப்பதற்கும், அரசாங்க நிர்வாகத்தில் செயற்கைநுண்ணறிவின்நடைமுறைப் பயன்பாட்டைவிரிவுபடுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும்என்றுகோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

 

இதில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி கூட்டங்களின்ஒலிப்பதிவு, உரை வடிவிலானபதிவுகளைத் தயாரித்தல், கூட்டக் குறிப்புகளைஉருவாக்குதல்மற்றும் தொடர் நடவடிக்கைகளைக்கண்காணித்தல் போன்ற பணிகளைத் தானியங்கிமுறையில்மேற்கொள்ளும் Agenda AI திட்டமும் அடங்கும்.

 

 

2027ஆம் ஆண்டு முதல், பல்வேறு அமைச்சுகளும் அரசாங்கநிறுவனங்களும்பயன்படுத்தக்கூடிய பொதுவானஇலக்கவியல் தளங்களை விரிவுபடுத்துவதுடன், அரசாங்கநிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பகிர்வையும்வலுப்படுத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதன் வழி பொதுமக்கள் ஒரே தகவலைப் பல்வேறுஅரசாங்க நிறுவனங்களிடம் மீண்டும்மீண்டும் வழங்கவேண்டிய அவசியத்தைக் குறைக்க முடியும்.

 

மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் Agentic AI தொழில்நுட்பங்களின் பயன்பாட்டைப்பொறுப்பானமுறையில் விரிவுபடுத்துதல், இணையப் பாதுகாப்பு, தனியுரிமை, தரவுநிர்வாகம் மற்றும் அரசாங்க ஊழியர்களின்இலக்கவியல் திறன்களை மேம்படுத்துதல்ஆகியவற்றுக்கும்முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 

2028 முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், குழந்தை பிறப்பு, பள்ளியில்சேருதல், வேலைவாய்ப்பைப்பெறுதல், தொழில் தொடங்குதல் மற்றும்ஓய்வுபெறுதல்போன்ற மக்களின் முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளுடன்தொடர்புடையஅரசாங்கச் சேவைகளை மேலும்ஒருங்கிணைந்த முறையில் வழங்குவதே GovTech Malaysia-வின் இலக்காகும்.

 

இதன் வழி பொதுமக்கள் பல்வேறு அரசாங்கநிறுவனங்களைத் தனித்தனியாக அணுகவேண்டியஅவசியமின்றி, தங்களுக்குத் தேவையான சேவைகளைஎளிதாகப் பெறுவதற்குவழிவகை செய்யப்படும்.

 

GovTech Malaysia-வின் நோக்கம் தற்போதுள்ள அரசாங்கநடைமுறைகளை வெறுமனேஇலக்கவியல் மயமாக்குவதுமட்டுமல்ல. மாறாக, அரசாங்கம் மக்களுக்குச்சேவைகளைவழங்கும் முறையையே மறுவடிவமைப்பதாகும்.

 

 

குறைவான நடைமுறைகள், குறைந்த எண்ணிக்கையிலானஆவணங்கள் மற்றும் குறுகியகாத்திருப்பு நேரத்துடன்பொதுமக்கள் அரசாங்கச் சேவைகளைப் பெறுவதேஇந்தமுயற்சியின் வெற்றிக்கான முக்கிய அளவுகோலாக அமையும்என்று அமைச்சர்விளக்கினார்.

 

MyGOV Malaysia மற்றும் GovTech Malaysia திட்டங்களின்சாதனைகள், மக்களுக்கும்வணிகத் துறையினருக்கும்கிடைக்கும் நன்மைகள், அத்துடன் இலக்கவியல்அரசாங்கச்சேவைகளை மேம்படுத்துவதற்கான எதிர்காலத் திட்டங்கள்குறித்து பெந்தோங்நாடாளுமன்ற உறுப்பினர் யங்சியெஃபுரா பிந்தி ஒத்மான் எழுப்பிய கேள்விக்கு, இலக்கவியல்அமைச்சர் கோபிந்த் சிங் டியோமக்களவையில் பதிலளிக்கையில் இந்தவிவரங்களைத்தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News