மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச. விக்னேஸ்வரன் – புவான் ஸ்ரீ டத்தின் ஸ்ரீ சுசிலா தம்பதியரின் புதல்வி துஹினா விக்னேஸ்வரனுக்கும், டத்தோ இன்ஜினியர் தனராஜா கனகரத்தினம் – டத்தின் விமலீஸ்வரி ராஜேந்திரன் தம்பதியரின் புதல்வர் திவேஷ் ராஜ் தனராஜாவுக்கும் இடையிலான திருமண வைபவம் நேற்று பத்துமலை, ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இத்திருமண விழாவில், லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், அக்குழுமத்தின் இயக்குநர்களான டத்தோ ரெனா ராமலிங்கம் மற்றும் டத்தோ ரெனா நாகசுந்தரம் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்தனர்.
அதேவேளையில், மஇகாவின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் பலரும் இத்திருமண விழாவில் கலந்து கொண்டு, புதுமணத் தம்பதியரை வாழ்த்திச் சிறப்பித்தனர்.
மேலும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இவ்விழாவில் பங்கேற்று, மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
0 Comments