loader
45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பத்திரிகைத் துறையில் பணியாற்றிய டாக்டர் பி.ஆர். ராஜனின் இறுதிச் சடங்கு!

45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பத்திரிகைத் துறையில் பணியாற்றிய டாக்டர் பி.ஆர். ராஜனின் இறுதிச் சடங்கு!

செலாயாங், அக்.26-

தமிழ்ப்பத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, பத்திரிகைஆசிரியராகத் திகழ்ந்த டாக்டர் பி.ஆர். ராஜனின் இறுதிச் சடங்கு இன்று (26ஆம் தேதி) நடைபெற்றது.

 

செலாயாங்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அன்னாருக்கு இறுதி அஞ்சலிசெலுத்தினர்.

 

இதனிடையே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார்டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அத்துடன் பல்லூடகத் துறைதுணையமைச்சர் தியோ நிங் சிங் ஆகியோர் மலர் வளையங்களைச் சமர்ப்பித்து தங்களதுஇரங்கலைத் தெரிவித்திருந்தனர்.

 

இல்லத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, அவரது உடல் செந்தூல்மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

 

தமிழ்ப்பத்திரிகைத் துறையில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய டாக்டர்பி.ஆர். ராஜனின் மறைவு, பத்திரிகைத் துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து வாடும்குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும்தெரிவித்துக் கொள்கிறோம்.

0 Comments

leave a reply

Recent News