ராவாங், அக்.25-
விலை உயர்ந்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களால் பொதுமக்கள் எதிர்நோக்கும்சுமையைக் குறைக்கும் நோக்கில், வவாசான் கட்சியின் செலாயாங் தொகுதி பொருளாளர்டத்தோ சுரேஷ் ராவ், இம்முறை கட்சி சார்பில் 100 பேருக்குத் தீபாவளி அன்பளிப்புகளைவழங்கினார்.
கடந்த 20 ஆண்டுகளாகத் தனது சொந்த முயற்சியில் தீபாவளி காலத்தில் உதவிகள் வழங்கிவருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாண்டு கட்சி சார்பில் இந்த உதவித் திட்டத்தைமுன்னெடுத்ததாகத் தெரிவித்தார்.
தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளும் அதிகரித்து வருகின்றன. இதனைக் கருத்தில்கொண்டு, உதவி பெற்றவர்கள் அடுத்த இரு வாரங்களுக்குத் தேவையான அடிப்படைஉணவுப் பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவை வழங்கப்பட்டதாக அவர்கூறினார்.
மேலும், நாட்டில் நிலவி வரும் புகை மூட்டத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள்தங்களது சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்வலியுறுத்தினார்.
குறிப்பாக, தேவையற்ற வெளிப்புறப் பயணங்களைக் குறைத்துக் கொள்வதுடன், புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளஉரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் டத்தோ சுரேஷ்ராவ் கேட்டுக்கொண்டார்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் தேவையுடைய மக்களுக்கு உதவுவதுடன், அவர்களின்அன்றாடத் தேவைகளுக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகஅவர் தெரிவித்தார்.
0 Comments