loader
கல்வி, வணிகம் மற்றும் விளையாட்டுத் துறையினரைக் கௌரவித்த BNP அமைப்பு!  200 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிப்பொருள்கள்; 100-க்கும் மேற்பட்ட கல்விமான்கள், வியாபாரிகளுக்கு விருது!

கல்வி, வணிகம் மற்றும் விளையாட்டுத் துறையினரைக் கௌரவித்த BNP அமைப்பு! 200 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிப்பொருள்கள்; 100-க்கும் மேற்பட்ட கல்விமான்கள், வியாபாரிகளுக்கு விருது!

கோலாலம்பூர்,அக்.24-

 

இந்தியச் சமூகத்தினரிடையே வணிக ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு, கல்வி மற்றும்விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவோரைக் கௌரவிக்கும் நோக்கில் BNP அமைப்பின் விருது விழா பத்துமலையில் உள்ள செங்கா மண்டபத்தில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் நான்கு தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கல்விஉதவிப்பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும், மூத்த பூப்பந்து விளையாட்டு வீரர்களும்அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 

BNP அமைப்பு தொடங்கப்பட்டு 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கல்வி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 100-க்கும்மேற்பட்ட கல்விமான்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்ச்சியில் பேசிய BNP அமைப்பின் தோற்றுநர் கலைவாணன், இந்தியச் சமூகத்தைச்சேர்ந்த வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதேஅமைப்பின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.

 

“இந்திய வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வணிகத்துறையில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும். வியாபாரிகளுக்கு இடையேஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்தி, அவர்களின் வளர்ச்சிக்கான தளமாக BNP அமைப்பு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும்” என்று அவர்வலியுறுத்தினார்.

 

BNP அமைப்பு வணிகத் துறையினருக்கான ஒரு தளமாகச் செயல்படுவதுடன், கல்வி மற்றும்சமூக நலனிலும் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டது.

 

குறிப்பாக, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விஉதவிப்பொருள்கள் வழங்குவது, சமூகத்தில் சிறப்பாகச் செயல்படுவோரைக் கௌரவிப்பதுமற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவது போன்றநடவடிக்கைகள் மூலம் சமூக முன்னேற்றத்திற்குப் பங்களித்து வருகிறது.

 

24 ஆண்டுகாலப் பயணத்தைத் தொடர்ந்து வரும் BNP அமைப்பு, இந்தியச்சமூகத்தினரிடையே வணிக ஒற்றுமையை மேம்படுத்துவதோடு, கல்வி மற்றும் சமூக நலச்சேவைகளையும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply

Recent News