loader
மக்கள் தொகையில் குறைந்தாலும் பொருளாதார பலத்தில் உயர வேண்டும்* *, 20 ஆண்டுகளில் வலுவான வர்த்தக சமூகமாக இந்தியர்கள் உருவெடுக்க முடியும் – டத்தோஸ்ரீ எம். சரவணன்

மக்கள் தொகையில் குறைந்தாலும் பொருளாதார பலத்தில் உயர வேண்டும்* *, 20 ஆண்டுகளில் வலுவான வர்த்தக சமூகமாக இந்தியர்கள் உருவெடுக்க முடியும் – டத்தோஸ்ரீ எம். சரவணன்

கோலாலம்பூர், அக். 21 –

மலேசிய இந்தியர்கள் மக்கள் தொகை எண்ணிக்கையில் குறைந்து வந்தாலும், பொருளாதார பலம் மிக்க சமூகமாக உருவெடுக்க வேண்டும் என்று மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்தினார்.

 

அந்த இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணித்தால், இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகளில்பொருளாதார ரீதியில் வலிமை பெற்ற சமூகமாக இந்தியர்கள் உயர முடியும் என்று அவர்நம்பிக்கை தெரிவித்தார்.

 

“நாம் பொருளாதார பலம் பெற்ற சமூகமாக மாறிவிட்டால், முடிவுகளை நாமே எடுக்கக்கூடியநிலை உருவாகும். யாரிடம் பொருளாதார பலம் இருக்கிறதோ, அவர்களைத் தேடித்தான்மற்றவர்கள் வருவார்கள்,” என்று சரவணன் குறிப்பிட்டார்.

 

கோலாலம்பூர், செந்தூல், ஜாலான் கோயில் ஹிலீரில் நேற்று மாலை “கயல்”  பேரங்காடிமையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத்தெரிவித்தார்.

 

சமயப் பணிகளிலும் தர்ம காரியங்களிலும் தொடர்ந்து சேவையாற்றி வரும் கதிரேசனுக்குச்சொந்தமான கயல் பேரங்காடி மையத்தைத் திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக்குறிப்பிட்ட சரவணன், இந்தியர்கள் அதிகளவில் வர்த்தகத் துறையில் ஈடுபடத்தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றார்.

 

ஒரு காலத்தில் ஜாலான் ஈப்போ சாலையில், குறிப்பாகச் செந்தூல் பகுதியில், “மெட்ராஷ்காபே”  உணவகத்தைத் தவிர இந்தியர்களுக்குச் சொந்தமான கடைகளைக் காண்பதுஅரிதாக இருந்தது. ஆனால், தற்போது அப்பகுதியில் இந்தியர்களின் கடைகளும் வர்த்தகமையங்களும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

 

செந்தூலில் மட்டுமின்றி, கம்போங் காசிப்பிள்ளை பகுதியிலும் அதிகமான கடைகள்திறக்கப்பட்டுள்ளன. சாலையோரங்களில் முறையான கடைகளை அமைக்க முடியாதசூழலிலும், குறைந்தபட்சம் ஒரு மேசையை வைத்தாவது பலர் வியாபாரம் செய்துவருவதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியர்கள் தொழில் முனைவில் காட்டும் ஆர்வத்தை இதுவெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

 

“இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில் இந்தியர்கள்வலிமை மிக்க வர்த்தக சமூகமாக உருவெடுக்க முடியும் என்பதற்கான நல்லதொடக்கமாகும்,” என்றார் அவர்.

 

பொருளாதார வலிமை என்பது தனிப்பட்ட முன்னேற்றத்துடன் நின்றுவிடக் கூடாது; அதுசமூகத்திற்கும் பயனளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய சரவணன், “நல்லவர்களின்கைகளில் பணம் இருந்தால்தான் அவர்கள் மற்றவர்களுக்கு உதவ முடியும்,” என்று கூறினார்.

 

அந்த வகையில், நற்சேவையாளராக விளங்கும் கதிரேசனின் கயல் பேரங்காடி மையத்தைத்திறந்து வைப்பதில் தாம் பெருமகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட அவர், குத்துவிளக்கேற்றிமையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்வில் சிறப்பான சமய உரையை நிகழ்த்திய அம்பாங் ஸ்ரீ ஆதி சங்கரர் திருமடத்தின்தோற்றுநர் சுவாமி மகேந்திர குருக்களுக்கு சரவணன் பொன்னாடை போர்த்திச் சிறப்புச்செய்தார்.

 

வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு செந்தூல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளிவிற்பனைக் கடைகளையும் சரவணன் பார்வையிட்டு, வியாபாரிகளுக்கும்பொதுமக்களுக்கும் தமது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

இந்நிகழ்வில் மஇகா கூட்டரசுப் பிரதேசத் தலைவர் டத்தோ ராஜா சைமன், டத்தோ பாஸ்கரன், டி. குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

0 Comments

leave a reply

Recent News