கோலாலம்பூர்,அக்.24-
ராணி சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏற்பாட்டில், 1,000 ஆதரவற்ற இல்லக்குழந்தைகளுக்குத் தீபாவளி புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கடந்த12 ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த உன்னதமான சமூகப்பணியின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி அமைந்தது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, ஆதரவற்ற இல்லக் குழந்தைகளை நேரடியாக அழைத்துவந்து, அவர்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அவர்களே தேர்வு செய்துவாங்கிக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. குழந்தைகளின் விருப்பங்களுக்குமுக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு மகிழ்ச்சியையும் தீபாவளிப் பண்டிகையின்உண்மையான உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு அமைந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.இ.கா. தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், ராணி சில்க்ஸ் நிறுவனத்தின் சமூகப் பணியைப் பாராட்டினார். முன்னாள்காவல்துறை அதிகாரி டத்தோ சசிகலாவும் சிறப்பு வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
மேலும், ராணி சில்க்ஸ் நிறுவனத்தின் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்டு, ஆசியான் சாதனைப்புத்தகம் மற்றும் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின்போது விருதும் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை தொடர்பான சர்ச்சை குறித்து கருத்துரைத்தடத்தோஸ்ரீ எம். சரவணன், இத்தகைய முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக, அப்பகுதி மக்களுடனும் வியாபாரிகளுடனும் கலந்தாலோசிப்பது அவசியம் எனவலியுறுத்தினார்.
தாம் ஐந்து ஆண்டுகளும், டத்தோ லோகபாலா ஐந்து ஆண்டுகளும், டத்தோ எட்மண்ட்சந்தாரா இரண்டு ஆண்டுகளும் கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர்களாக பொறுப்புகளைவகித்த காலகட்டங்களில், இத்தகைய பிரச்சினைகள் எழவில்லை என்பதை அவர்சுட்டிக்காட்டினார்.
“ஒரு திட்டத்திற்காக எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது மட்டுமே முக்கியமல்ல. அந்தச்செலவினால் மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் உண்மையில் பயன் கிடைத்துள்ளதாஎன்பதுதான் முக்கியம். எனவே, முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக அப்பகுதி மக்களிடம்பேசி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்,” என்றார்.
மேலும், இதுபோன்ற விவகாரங்களில் ஏற்கெனவே அனுபவம் பெற்றவர்களின்ஆலோசனைகளையும் பெறுவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹனா யோவின் பணிகளைப் பொதுவாகப் பாராட்டியசரவணன், சில சிறிய விவகாரங்களில் உரிய கவனம் செலுத்தத் தவறுவதால் தேவையற்றபிரச்சினைகள் உருவாகின்றன என்றும் கருத்துரைத்தார்.
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை போன்ற மக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின்வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்களில், சம்பந்தப்பட்ட தரப்பினரின்கருத்துகளைக் கேட்டறிந்து, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதே அவரது கருத்தின் சாரமாக அமைந்தது.
0 Comments