கோலாலம்பூர்,அக்.24-
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை தொடர்பான விவகாரத்தில் வியாபாரிகளின் நலனுக்கும் தமிழ்மொழிக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மஇகாதலைவர் டத்தோ ராஜா சைமன் வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை தொடர்பாக எழுந்துள்ள விவாதங்கள் குறித்து கருத்துரைத்தஅவர், கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹனா யோ பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தீபாவளியைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ சொல்லாக 'தீபாவளி' பயன்படுத்தப்படுவதாகக்குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுகூறுவது சரியான அணுகுமுறையா எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் சொல் பயன்பாடு குறித்த விவாதங்களைத் தாண்டி, அங்கு வியாபாரம்செய்து வரும் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் போதியவாடிக்கையாளர்கள் இல்லாததால் வருமானமின்றித் தவித்து வருவதாகக் குறிப்பிட்ட டத்தோராஜா சைமன், அவர்களின் வியாபாரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் ஏன் அரசு வானொலிமற்றும் தொலைக்காட்சி வாயிலாக விளம்பரங்களைச் செய்யவில்லை என்றும் கேள்விஎழுப்பினார்.
தீபாவளி சந்தை என்பது பண்டிகைக்கான பொருட்களை வாங்கும் இடமாக மட்டுமல்லாமல், சிறு வியாபாரிகளின் வருமானத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவளிக்கும் முக்கியமானவாய்ப்பாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனவே, சந்தைக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் வியாபாரிகளின்விற்பனையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் உரிய விளம்பர நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தையின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளவிளம்பரப் பதாகையில் தமிழ் மொழி இடம்பெறாதது குறித்தும் டத்தோ ராஜா சைமன்கேள்வி எழுப்பினார்.
மலேசியத் தமிழர்கள் பெரும்பான்மையாகக் கொண்டாடும் முக்கியமான பண்டிகையானதீபாவளியை முன்னிட்டு நடத்தப்படும் சந்தையில், விளம்பரப் பதாகைகளில் தமிழ் மொழிக்குஏன் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று அவர் வினவினார்.
தமிழ் மொழி என்பது மலேசிய இந்தியர்களின் அடையாளத்துடனும் பண்பாட்டுடனும்நெருங்கிய தொடர்புடையது என்பதால், தமிழர்களை இலக்காகக் கொண்ட பண்டிகைநிகழ்ச்சிகளிலும் சந்தைகளிலும் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்றும்அவர் வலியுறுத்தினார்.
மேலும், பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை தொடர்பான இந்த விவகாரத்தில் கூட்டரசுப் பிரதேசஅமைச்சர் ஹனா யோ குழப்பங்களை ஏற்படுத்துகிறார் என்றும் டத்தோ ராஜா சைமன்குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து சர்ச்சையாகக் கொண்டுசெல்லாமல், வியாபாரிகளின்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, சந்தைக்கு மக்களை ஈர்ப்பது, விளம்பரநடவடிக்கைகளை வலுப்படுத்துவது மற்றும் தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதுஆகியவற்றில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் என்பதே முக்கியம்என்றும் அவர் வலியுறுத்தினார்.
0 Comments