loader
சிரம்பானில் 120 சிறு வியாபாரிகளுடன் தீபாவளி சந்தை! அக்டோபர் 29 முதல் நவம்பர் 7 வரை நடைபெறும்; இரு சந்தைகளுக்கும் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்! -முகுந்தன்

சிரம்பானில் 120 சிறு வியாபாரிகளுடன் தீபாவளி சந்தை! அக்டோபர் 29 முதல் நவம்பர் 7 வரை நடைபெறும்; இரு சந்தைகளுக்கும் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்! -முகுந்தன்

சிரம்பான், அக். 21 –

சிரம்பானில் சிறு வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு ஏ.எஸ்.டி. பகுதியில் தீபாவளி சந்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச்சந்தையில்சுமார் 120 சிறு வியாபாரிகள் தங்களது பொருள்களை விற்பனை செய்வதற்கான வசதிகள்ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆறு ஆண்டுகளாக இரண்டு இடங்களில் தீபாவளி சந்தையை நடத்தி வந்தநிலையில், இவ்வாண்டு ஆட்சி மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தாங்கள் தீபாவளிசந்தையை நடத்துவதில்லை என முடிவு செய்திருந்ததாக சிரம்பான் ஜெயா சட்டமன்றஉறுப்பினர் முகுந்தன் தெரிவித்தார்.

இருப்பினும், சிறு வியாபாரிகள் தங்களை அணுகி தீபாவளி சந்தையை நடத்துமாறுகேட்டுக்கொண்டதன் அடிப்படையில், மாநகர் மன்றத்திடம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, ஏ.எஸ்.டி. பகுதியில் தீபாவளி சந்தையை நடத்துவதற்கு அனுமதிகிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.இந்தத் தீபாவளி சந்தை இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7ஆம் தேதி வரைநடைபெறவுள்ளது.

சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய வியாபாரவாய்ப்புகளையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இதற்கிடையில், மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டிலும் மற்றொரு தீபாவளி சந்தைநடத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் இரண்டு இடங்களிலும் நடைபெறும் தீபாவளிசந்தைகளுக்கும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தத் தீபாவளி சந்தையில் பொருள்கள் விற்பனை மட்டுமின்றி, பொதுமக்களைக் கவரும்வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர்கலைஞர்கள் தங்களது கலைப் படைப்புகளை நிகழ்ச்சிகளின் வாயிலாகப் படைக்கவுள்ளனர்.

மேலும், சந்தைக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக வாகன நிறுத்துமிடவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருள்கள் வாங்குவதற்கும், சிறு வியாபாரிகளுக்குஆதரவு வழங்குவதற்கும் பொதுமக்கள் இந்தச் சந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனஅவர் சொன்னார்.

0 Comments

leave a reply

Recent News