loader
வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு அபராதம் வேண்டாம்; நேரடியாகச் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்!  சட்டத் திருத்தம் செய்ய அரசாங்கத்திடம் பிரகாரன் வலியுறுத்தல்!

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு அபராதம் வேண்டாம்; நேரடியாகச் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்! சட்டத் திருத்தம் செய்ய அரசாங்கத்திடம் பிரகாரன் வலியுறுத்தல்!

கோலாலம்பூர், அக்.21— 

நாட்டில் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் புனிதப் பொருட்களைச் சேதப்படுத்துவோருக்கு அபராதம்விதிப்பதற்குப் பதிலாக, நேரடியாகச் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில்திருத்தம் செய்ய வேண்டும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன்வலியுறுத்தியுள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்றஅவர், குற்றவியல் சட்டத்தின் 295ஆவது பிரிவில் உள்ள அபராதம் விதிக்கும் தண்டனைமுறையை நீக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

 

தற்போது, இச்சட்டப் பிரிவின்கீழ் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்படுபவருக்கு அதிகபட்சமாகஇரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்துவிதிக்கப்படலாம்.

 

இந்நிலையில், வழிபாட்டுத் தலங்களை அவமதிப்பது மற்றும் அங்குள்ள புனிதப்பொருட்களைச் சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம்விதிப்பதற்குப் பதிலாக, சிறைத்தண்டனையை மட்டுமே தண்டனையாக வழங்க வேண்டும்என்று பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

 

கோலாலம்பூர், நியூ பந்தாய் விரைவுச்சாலைக்கு (NPE) அருகிலுள்ள ஆலயத்தில்அண்மையில் நடைபெற்றதாகக் கூறப்படும் அத்துமீறல் சம்பவத்தையும் அவர்நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

 

ஒரே நபருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இதுபோன்ற சம்பவங்கள் லங்காவி, ராவாங்மற்றும் கோலாலம்பூர் என மூன்று இடங்களில் நிகழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

குறிப்பாக, கோலாலம்பூர் ஜாலான் கிள்ளான் லாமாவில் உள்ள ஓர் ஆலயத்திற்குள் அத்துமீறிநுழைந்து, இந்து சமயத்தினர் வழிபடும் சிலைகளைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படும்சம்பவம் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

 

இத்தகைய செயல்கள் மதங்களுக்கு இடையிலான பதற்றத்தை ஏற்படுத்தி, நாட்டின்அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை உருவாக்கக்கூடும் என்பதால், அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

“சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படுவோருக்கு அபராதம் விதிக்கவேண்டிய அவசியமில்லை. அவர்களை நேரடியாகச் சிறையில் அடைக்க வேண்டும். இதுமதம் தொடர்பான வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என நான் வலியுறுத்துகிறேன்” என்று பிரபாகரன் தெரிவித்தார்.

 

மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு பிணை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள்விவகாரத்தை மேலும் சிக்கலாக்கக்கூடும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

 

இதற்கிடையில், அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ள ஆலயங்கள் தொடர்பானபிரச்சினைகளைச் சட்டப்படி அதிகாரிகள் கையாள வேண்டும் என்றும், பொதுமக்கள்தாங்களாகவே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் பிரபாகரன்வலியுறுத்தினார்.

 

லங்காவியில் உள்ள பழைய ஆலயத் தளத்தில் இந்து சமயத்தினரின் புனிதப் பொருளானசூலத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் என்பவர்மீது ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

 

கடந்த ஜூலை 21ஆம் தேதி லங்காவி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுவாசிக்கப்பட்டபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், அவருக்கு இரண்டுஉத்தரவாததாரர்களுடன் 10,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டது. கடவுச்சீட்டைநீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஆஜராகவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

 

இதற்கிடையில், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஜாலான் கிள்ளான் லாமா ஆலயத்தில் நான்குசிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, தமிம்தஹ்ரி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் காவல் பிணையில்விடுவிக்கப்பட்டதாகவும் மலேசியாKini செய்தி வெளியிட்டுள்ளது.

 

நாட்டில் அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்என்பதுடன், மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படிஉறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பிரபாகரனின் கோரிக்கையாகும்.

0 Comments

leave a reply

Recent News