குளுவாங், அக்.20-
ஜோகூர் மாநிலம், குளுவாங் பகுதியில் அமைந்துள்ள மெங்கிபோல் தோட்டத்தமிழ்ப்பள்ளியின் புதிய வளாகத்திற்கான நில விவகாரம், 2017ஆம் ஆண்டு நிலம்கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டும், இதுவரை தீர்வுகாணப்படாமல் இருப்பது ஏன் என ஜோகூர் மாநில அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஒன்பது ஆண்டுகளாகியும் நில உரிமை தொடர்பான நடைமுறைகள் நிறைவடையாததுமிகுந்த கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள மக்கள் நீதிக் கட்சியின் (KEADILAN) மத்தியதலைமை மன்ற உறுப்பினரும், அகிலப் பொதுச் செயலாளர் துணைச் செயலாளருமானசிவமலர் கணபதி, இவ்விவகாரத்தில் மாநில அரசு பொறுப்பேற்று உரிய விளக்கமளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
2017ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி வெளியிடப்பட்ட ஜோகூர் மாநில அரசிதழில், நிலம்கையகப்படுத்துதல் சட்டம் 1960இன் பிரிவு 8இன் கீழ், அறிவிப்பு எண் 2652 மூலம்இப்பள்ளியின் புதிய வளாகத்திற்காக 1.210 ஹெக்டர் நிலத்தைக் கையகப்படுத்துவதுகுறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குளுவாங் வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த நிலம், மலேசியக் கல்வி அமைச்சின்பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படுவதாக அரசிதழில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஒன்பது ஆண்டுகளாகியும் நில உரிமை தொடர்பான நடைமுறைகள் ஏன்முடிவடையவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை மலேசியக் கல்வி அமைச்சு ஏற்கெனவேசெலுத்திவிட்டதாகக் கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், நில உரிமையைஇறுதிப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மாநில அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, நில விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன, நில அலுவலகம் இதுவரைமேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன, நடைமுறைகளை நிறைவு செய்வதில் உள்ள தடைகள்யாவை என்பன குறித்து பள்ளி நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெளிவானவிளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரம் இன்று மக்களவையிலும் குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினரால்எழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சிவமலர் கணபதி, ஒரு பள்ளியின் நிலப் பிரச்சினைக்குத்தீர்வு காண நாடாளுமன்றத்தில் மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலைஏற்படுவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.
ஜோகூர் மந்திரி பெசார் இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, குளுவாங் நிலஅலுவலகம் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவும், தீர்வுக்கான காலஅட்டவணையை வகுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
14 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ விளக்கம்!
நில விவகாரம் தொடர்பாக ஜோகூர் மாநில அரசு அடுத்த 14 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வவிளக்கத்தை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள சிவமலர் கணபதி, இப்பணிகளை ஒருங்கிணைக்கப் பொறுப்பான அதிகாரி ஒருவரை நியமிப்பதுடன், நிலஉரிமை நடைமுறைகளை நிறைவு செய்வதற்கான இலக்குத் தேதியையும் அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், இந்நடவடிக்கைகளில் ஏதேனும் தடைகள் இருந்தால், அவற்றைக் களைவதற்கானகுறிப்பிட்ட திருத்த நடவடிக்கைகளையும் அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.
புதிய பள்ளி வளாகத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், மாநிலநிர்வாகம் தனது செயல்திறனை நடைமுறையில் நிரூபிக்க வேண்டும் என்றும், நீண்டகாலத்தாமதத்தால் மாணவர்களும் பெற்றோர்களும் தொடர்ந்து பாதிக்கப்படக் கூடாது என்றும்அவர் கேட்டுக்கொண்டார்.
0 Comments