loader
9 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ரத ஊர்வலம்! இப்போது நடத்தப்படாததற்குக் காரணம் தலைவரா?  அதிருப்தியில் மக்கள்! ஆலய நிர்வாக உறுப்பினர் கணபதி கேள்வி!

9 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ரத ஊர்வலம்! இப்போது நடத்தப்படாததற்குக் காரணம் தலைவரா? அதிருப்தியில் மக்கள்! ஆலய நிர்வாக உறுப்பினர் கணபதி கேள்வி!

சுபாங், அக்.16-

கடந்த 9 ஆண்டுகளாக சுபாங் ஜெயா ஸ்ரீ வரதராஜு பெருமாள் ஆலயத்தில் புரட்டாசிமாதத்தில் பூஜைகள் நடைபெற்று, மாத இறுதியில் ரத ஊர்வலம் நடப்பது வழக்கம். அந்தநேரத்தில் அவ்வட்டார மக்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, ரத ஊர்வலத்தில்கலந்துகொள்வது வழக்கம்.

 

ஆனால், இந்த முறை ரத ஊர்வலம் நடத்தப்படாது என்ற கடிதம் ஒன்று இப்போதுகிடைத்துள்ளதாகவும், அந்த முடிவை ஆலயத் தலைவர் எடுத்துள்ளதாகவும் ஆலயத்தின்நிர்வாகக் குழு உறுப்பினர் கணபதி தெரிவித்துள்ளார்.

 

இதனால் வட்டாரப் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகக் கூறிய கணபதி, ஆலயத்தில் உள்ளகப் பிரச்சினைக்கு ரத ஊர்வலத்தை ரத்து செய்வது தவறான முடிவு எனத்தெரிவித்தார்.

 

நாளை ரத ஊர்வலம் நடைபெறும் நாள். மக்களுக்காக ஆலயத் திருப்பணி வேலைகளைசெய்த நாம், மக்களுக்கு பல வசதிகளை ஏற்படுத்தி, அவர்கள் நல்ல முறையில் வழிபடஉறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.

 

எப்போதும் போல் ரத ஊர்வலம் நடைபெற ஆலயத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் எனகணபதி கேட்டுக்கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News