loader
அப்துல் கலாம் கனவை நனவாக்கும் முயற்சி: 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

அப்துல் கலாம் கனவை நனவாக்கும் முயற்சி: 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

கல்லுப்பட்டி: 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கண்ட பசுமையான இந்தியா என்ற கனவை நனவாக்கும் வகையில், கல்லுப்பட்டி சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி சார்பில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.

 

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை வளத்தை அதிகரித்தல் மற்றும் எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த மரக்கன்றுகள் நடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

 

நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியின் இயக்குநர் முனைவர் சேது பாஸ்கரன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News