இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை முன்னிட்டு, ADR Music நிறுவனம் சார்பில் “இசைத் தமிழ்கோர் மணிமகுடம்” எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலை உணர்வுடன் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அலை ஓசை டாக்டர் அப்புதலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, வரும் 20ஆம் தேதிஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா சிவிக் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் சுமார் 300 இசைக் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மதிய உணவு வழங்கப்படுவதுடன், பிற்பகல் 2 மணி முதல்மாலை 7 மணி வரை இசை நிகழ்ச்சி நடைபெறும்.
மலேசியாவைச் சேர்ந்த 60 உள்ளூர் பாடகர்கள் இளையராஜாவின் படைப்புகளைவழங்கவுள்ளதுடன், 18 இசைக் கருவிக் கலைஞர்களும் தங்களது பங்களிப்பைவழங்கவுள்ளனர். சுமார் 1,000 பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளஇந்நிகழ்ச்சி பொதுமக்களுக்கு இலவசமாக நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள பாடகர் எம்.எஸ். பிரிட்டோ கூறுகையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பது தமக்கு பெருமையாக இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 50 ஆண்டுகளாக இளையராஜாவின் பாடல்களை பாடி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தஅற்புதமான இசை நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனஅழைப்பு விடுத்தார்.
மேலும், மலேசியாவின் பல்வேறு உள்ளூர் கலைஞர்களை ஒரே மேடையில் காணவும், அவர்களின் குரல்களை கேட்டு ரசிக்கவும் இந்த நிகழ்ச்சி சிறந்த வாய்ப்பாக அமையும் என்றும்அவர் தெரிவித்தார்.
ஜெயதீஸ் குமார் கூறுகையில், இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்திற்குவழங்கப்படும் மரியாதையாகவே இந்த இசை நிகழ்ச்சியை தாம் கருதுவதாக தெரிவித்தார்.
SD Harmoni Restoran உரிமையாளர் ஷர்மிலா, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராககலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். அற்புதமானஇந்நிகழ்ச்சிக்கு தமது முழுமையான ஆதரவு இருப்பதாகவும், பொதுமக்கள் அனைவரும்திரளாக வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சிந்து பைரவி இசைக்குழுவின் தலைவர் அசோகன் கூறுகையில், மலேசியஇசைத்துறையில் அலை ஓசை டாக்டர் அப்பு ஒரு முக்கியமான இசைக் கலைஞர் எனக்குறிப்பிட்டார். குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை மிகத் தெளிவாகவும் சிறப்பாகவும்இசைக்கக்கூடிய திறமை அப்புவுக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இசையின் மீது அதிக ஈடுபாடு கொண்ட டாக்டர் அப்பு, இளையராஜாவின் இசைக்கருவிஅமைப்புகளின் நுணுக்கங்களை உள்வாங்கி, அவற்றை இந்த நிகழ்ச்சியிலும்பயன்படுத்தியுள்ளதாக அசோகன் தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும்வகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் இலவசமாக கலந்து கொண்டுஉள்ளூர் கலைஞர்களின் இசைப் படைப்புகளை ரசிக்கலாம்.
0 Comments