நிதி ஒதுக்கீடு இல்லை, அதனால் செய்ய முடியாது என்று காரணம் கூற மாட்டேன் என்மக்கள் என் பொறுப்பு !
தாப்பாவில் விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் சோலார் LED விளக்குகள்!
இப்போது 20 கட்டம் கட்டமாக 200 திட்டம் வகுத்துவிட்டேன்
- டத்தோ ஸ்ரீ சரவணன்
தாப்பா: தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் விபத்துகள் அடிக்கடி நிகழும் பகுதியாகஅடையாளம் காணப்பட்டுள்ள சாங்சாட் பெத்தாய் முதல் தாப்பா சிறைச்சாலை வரையிலானசுமார் நான்கு கிலோமீட்டர் சாலைப் பகுதியில், அடுத்த மாத தொடக்கத்தில் 20 உயர் திறன்கொண்ட சோலார் LED மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.
இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக இந்தச் சாலைப் பகுதியில்அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருக்கானஒதுக்கீட்டைப் பயன்படுத்தி இந்தப் பகுதிகளை வெளிச்சமயமாக்கும் நடவடிக்கைமுன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
“இது மூன்று ஆண்டுகளுக்கான திட்டமாகும் நிதி ஒதுக்கீடு இல்லை, அதனால் செய்யமுடியாது என்று காரணம் கூற விரும்பவில்லை.
“தாப்பாவை வெளிச்சமயமாக்குவதற்காக மக்கள் பிரதிநிதிக்கான ஒதுக்கீட்டைப்பயன்படுத்துகிறேன். இந்தச் சாலையின் பல பகுதிகள் இரவு நேரங்களில் இருளாகஇருப்பதுடன், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன. மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமைஅளிக்கப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
தாப்பா மகாத்மா காந்தி மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பேசிய டத்தோஸ்ரீசரவணன், தாப்பா நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்டம்கட்டமாக 200 சோலார் LED மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை தாப்பா நாடாளுமன்றத் தொகுதி அழகுபடுத்தல் மற்றும்வெளிச்சமயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சாலைகள் மற்றும் இரவு நேரங்களில் வெளிச்சம்குறைவாக காணப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, மின்விளக்குகள் கட்டம்கட்டமாக பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தாப்பா நாடாளுமன்றத் தொகுதி அளவில் நடைபெற்ற 2026ஆம்ஆண்டுக்கான இயந்திரங்கள், உபகரணங்கள், இறுதிச்சடங்கு நல உதவி மற்றும் அரசு சாராஅமைப்புகளுக்கான (NGO) நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியில், டத்தோஸ்ரீ எம். சரவணன்மொத்தம் RM151,000 மதிப்பிலான நிதி மற்றும் உபகரணங்களை வழங்கினார்.
மக்களின் அன்றாட தேவைகள், சமூக நலன் மற்றும் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களுக்குதொடர்ந்து முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
0 Comments