கோலாலம்பூர், செப்.11-
கடலோர மீனவ மக்களின் வாழ்க்கை, பாரம்பரிய பாய்மரப் படகுப் போட்டி, நட்பு, காதல்மற்றும் பழிவாங்குதல் என பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியுள்ள புதியதிரைப்படம் ‘மண்டாடி’.
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். சத்யராஜ், மகிமா நம்பியார், சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகிலுள்ள கடலோர மீனவ கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டஇப்படத்தின் கதையில், அக்கிராம மக்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் பாய்மரப்படகுப் போட்டி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
படகுப் போட்டியில் சிறந்து விளங்கும் முத்துக்காளி என்ற காளி கதாபாத்திரத்தில் சூரிநடித்துள்ளார். கடந்த காலத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் சொந்த ஊரை விட்டுசென்னை செல்லும் காளி, அங்கு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்.
இந்நிலையில், சொந்த ஊரில் பழைய பகை காரணமாக உருவாகும் பிரச்சினை ஒன்றால் பலஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தனது கிராமத்திற்குத் திரும்ப வேண்டிய சூழல்அவருக்கு ஏற்படுகிறது.
கிராமத்திற்குத் திரும்பிய காளி, பழைய நண்பர்கள், கடந்த கால காதல் மற்றும் படகுப்போட்டி என தனது வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த பல சம்பவங்களை மீண்டும்எதிர்கொள்கிறார்.
ஒருகாலத்தில் சிறந்த படகுப் போட்டி வீரராக விளங்கிய காளி, மீண்டும் போட்டிக் களத்தில்இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குறிப்பாக, சுஹாஸ் ஏற்றுள்ளகதாபாத்திரத்துடனான பழைய நட்பு, மோதல் மற்றும் போட்டி ஆகியவை கதையைஅடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகின்றன.
கடலில் நடைபெறும் பரபரப்பான பாய்மரப் படகுப் போட்டிக் காட்சிகளுடன், மீனவ மக்களின்அன்றாட வாழ்க்கைப் போராட்டம், தனிப்பட்ட பகை, நட்பு மற்றும் காதல் ஆகியவை கதையில்ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
சூரியின் நடிப்பு படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. கடலோர கிராமத்து மனிதராகஅவரது உடல்மொழியும் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்த விதமும் கவனத்தைஈர்க்கின்றன.
கடலோர மக்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரியத்தையும் திரையில் பதிவுசெய்யும் வகையில் ‘மண்டாடி’ தனக்கென ஒரு இடத்தைப் பெறுகிறது.
உலகம் முழுவதும் நேற்று வெளியான இப்படம், மலேசியாவிலும் டாமான்சாரா பெவிலியன்வளாகத்தில் உள்ள திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
மலேசியாவில் இப்படத்தின் விநியோகப் பணிகளை 3 Dot Movie நிறுவனமும், சந்தைப்படுத்தல் பணிகளை DAK Evolution Trading நிறுவனமும் மேற்கொள்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments