loader
சிறுவயது கனவை சொந்த தொழிலாக மாற்றிய விக்னேஸ்வரி: பென்சி அக்கடாமி மூலம் பேக்கரி துறையில் புதிய பயணம்!

சிறுவயது கனவை சொந்த தொழிலாக மாற்றிய விக்னேஸ்வரி: பென்சி அக்கடாமி மூலம் பேக்கரி துறையில் புதிய பயணம்!

கோலாலம்பூர்,செப்.11-

 சிறுவயது முதலே பேக்கரி மற்றும் கேக் தயாரிப்பில் கொண்டிருந்த ஆர்வத்தை விடாமல்தொடர்ந்து வளர்த்து, இன்று அதே துறையில் சொந்த தொழிலை உருவாக்கியுள்ளார்விக்னேஸ்வரி நாராஜா.

அவரது முயற்சியின் அடுத்த கட்டமாக ‘பென்சி அக்கடாமி’ என்ற பெயரில் பேக்கரி பயிற்சிநிலையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. OUG Parklane பகுதியில் அமைந்துள்ள இந்தஅக்கடாமி, பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு தங்களது திறமைகளைவளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும் நோக்கத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது.

தனது பயணம் குறித்து விக்னேஸ்வரி நாராஜா கூறுகையில், சிறுவயது முதலே பேக்கரிதுறையில் தனக்கு அதிக ஆர்வம் இருந்ததாக தெரிவித்தார். 

அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக் தயாரித்து விற்பனைசெய்யும் தொழிலில் ஈடுபட்டதாகவும், பின்னர் தனது அனுபவத்தையும் திறமையையும்மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு சிலருக்கு கேக் தயாரிப்பு தொடர்பான பயிற்சிகளைவழங்கியதாகவும் கூறினார்.

கேக் விற்பனையில் தொடங்கிய தனது பயணம், தற்போது பயிற்சி வழங்கும் அக்கடாமியைதொடங்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“சிறுவயதில் எனக்கு இருந்த விருப்பத்தை இன்று ஒரு சொந்த தொழிலாக மாற்றியுள்ளேன். ஆரம்பத்தில் சிறிய அளவில் கேக் வியாபாரத்தை மேற்கொண்டேன். அதன் பின்னர்என்னிடம் கற்றுக்கொள்ள விரும்பிய சிலருக்கு பயிற்சி வழங்கினேன். அந்த அனுபவத்தின்தொடர்ச்சியாகவே தற்போது பென்சி அக்கடாமியை ஆரம்பித்துள்ளேன்,” என விக்னேஸ்வரிதெரிவித்தார்.

அக்கடாமியின் திறப்பு விழா இன்று நடைப்பெறுகிறது. இதனை திறந்து வைக்ககோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் வி.கே.கே.ராஜாவருகையளித்திருந்தார். இந்த குறுகிய நிலையில், அதற்குள் 5 பேர் பயிற்சியில்இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இது தமது முயற்சிக்கு கிடைத்துள்ள ஆரம்பகட்ட வரவேற்பாக அமைந்துள்ளதாகவும் அவர்மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும், இந்த வார சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் பென்சிஅக்கடாமிக்கு நேரடியாக வந்து, அங்கு வழங்கப்படும் பயிற்சிகள், பாடத்திட்டங்கள் மற்றும்பேக்கரி துறை தொடர்பான முழுமையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும்அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அக்கடாமியின் தொடக்கத்தை முன்னிட்டு, அடுத்த ஒரு வாரத்தில் பதிவு செய்யும் புதியபயிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேக்கரி துறையில் ஆர்வம் கொண்டவர்கள், குறிப்பாக கேக் தயாரிப்பு மற்றும் அதனைதொழிலாக முன்னெடுக்க விரும்புவோர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பென்சிஅக்கடாமியை அணுகலாம் என விக்னேஸ்வரி நாராஜா தெரிவித்தார்.

சிறுவயது விருப்பத்தை விடாமுயற்சியுடன் வளர்த்து, சிறிய அளவிலான கேக்வியாபாரத்திலிருந்து பயிற்சி அக்கடாமி வரை தனது பயணத்தை முன்னெடுத்துள்ளவிக்னேஸ்வரி நாராஜாவின் இந்த முயற்சி, பேக்கரி துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு புதியவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

leave a reply

Recent News