மொரீஷியஸ், செப் 9-
13-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் உலகளாவிய பொருளாதார உச்சிமாநாடு நாளை செப்டம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரைவில் மொரீஷியஸில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், உலகத் தமிழர்பொருளாதார அறக்கட்டளையின் (WTEF) தலைவரும், சென்னை மெட்ராஸ் டெவலப்மென்ட்சொசைட்டி (MDS) இன் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், தனது குழுவினருடன்மொரீஷியஸை சென்றடைந்தார்.
மொரீஷியஸ் சென்றடைந்த டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் மற்றும் அவரது குழுவினரை, மொரீஷியஸ் அரசின் வெளியுறவுத்துறை இளைய அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர்ராஜன் நர்சிங்கன் அன்புடன் வரவேற்றார்.
மொரீஷியஸில் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச்சேர்ந்த அரசாங்கப் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளர்கள், உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்முறை வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் சர்வதேசத் தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள், சர்வதேச வர்த்தகம், தொழில்முனைவோர் வளர்ச்சி, வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் சர்வதேசத் தொழில்தொடர்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக மாநாட்டில்கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
மாநாட்டின் இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு ஒருங்கிணைப்பதற்காக டாக்டர்வி.ஆர்.எஸ். சம்பத் மற்றும் அவரது குழுவினர் முன்கூட்டியே மொரீஷியஸ் சென்றுள்ளனர்.
இந்த மாநாட்டை உலகத் தமிழர் பொருளாதார அறக்கட்டளை (WTEF) மற்றும் சென்னைமெட்ராஸ் டெவலப்மென்ட் சொசைட்டி (MDS) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்கின்றன. மொரீஷியஸைச் சேர்ந்த இந்தியன் பிசினஸ் கவுன்சில் உள்ளூர் கூட்டாளராகசெயல்படுகிறது.
0 Comments