கோலாலம்பூர்,செப்.9-
மலேசிய முத்தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் ‘முத்தமிழ் விழா ’26’ எதிர்வரும் செப்டம்பர்12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தனில்உள்ள டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் நடைபெறவுள்ளது.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநரும், மலேசிய முத்தமிழ்ச்சங்கத்தின்ஆலோசகருமான முத்தமிழ்க்காவலர் தமிழ்வேள் டத்தோ பா. சகாதேவன் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றவுள்ளார்.
இவ்விழாவில் தமிழ்நாடு மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இலக்கியவாதிகள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்பான இலக்கிய உரைகளை வழங்கவுள்ளனர். மேலும், தமிழ்நாடு திண்டிவனம் கம்பன் கழக அறக்கட்டளையின் பொறுப்பாளர்களும்விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘கலைமகள்’ இதழின் ஆசிரியர் கீழாம்பூர்சங்கரசுப்ரமணியன் தொகுத்துள்ள ‘மலேசிய சிறுகதைகள்’ நூல் வெளியீடும் விழாவில்நடைபெறவுள்ளது. தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுகதைகளைத் தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
விழாவில் இலக்கிய உரையாற்றவுள்ள சிறப்பு உரையாளர்களுக்கு மலேசியாவின் சோழன்உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் சிறப்பு இலக்கிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
மேலும், பத்துமலை கவிஞர் வைரகவி ‘மலேசியத் தமிழர்கள்’ என்ற தலைப்பில் கவிதைவழங்கவுள்ளார்.
விழாவில் இடம்பெறும் சிறப்பு இலக்கிய உரைகளும் உரையாளர்களும் வருமாறு:
- மேனாள் காவல்துறை ஆணையாளர் டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகன் – தமிழர் வாழ்வியலில்இலக்கிய மாண்புகள்
- தமிழ்நாடு பேராசிரியர் முனைவர் ஞானஜோதி சரவணன் – தமிழர் தம் அகவாழ்வு
- தமிழ்நாடு பேராசிரியர் முனைவர் கா. வேலம்மாள் – திருக்குறள் காமத்துப்பால் – வாழ்வியல் மருந்து
- கலைமாமணி கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் – பாரதியின் அகன்ற பார்வை
- பேராசிரியர் முனைவர் ரவி – உலக வரலாற்றில் தமிழ்ப்பண்பாடு – ஒரு தொல்லியல்பார்வை
- மலேசியா கரு கார்த்தி – கவிஞர் கண்ணதாசன் நினைவலைகள்
தமிழ் இலக்கிய மாண்புகளையும் மரபுகளையும் அறிந்துகொள்வதுடன், தமிழர்களின்வேர்கள் மற்றும் வரலாறுகளைப் புரிந்துகொள்ளும் வகையில் சங்க இலக்கியங்கள் முதல்இக்கால இலக்கியங்கள் வரையிலான பல்வேறு இலக்கிய உரைகளை வழங்குவதேஇவ்விழாவின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையொட்டி, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டுசிறப்பிக்குமாறு மலேசிய முத்தமிழ்ச்சங்கம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மலேசிய முத்தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கருபன்னீர்செல்வத்தை 012-3056799 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
0 Comments