பெட்டாலிங் ஜெயா, செப். 9 —
டாமான்சாரா டாமாய் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நித்யகல்யாணி உடனுறை ஓம் ஸ்ரீ கைலாயநாதர் ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 13ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.
அன்று காலை 6 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, பூர்வாங்கம், யாக பூஜைகள், மூலமந்திர மகா யாகம் மற்றும் வேத பாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை பூர்ணாஹுதி தீபாராதனை, பாலஸ்தாபன கும்பாபிஷேகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விழாவின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
இதனையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் மகா அபிஷேகம், ஆலய நித்திய பூஜை, திருமுறை பாராயணம் மற்றும் முகூர்த்தக்கால் ஊன்றுதல் நடைபெறும்.
செப்டம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, பூர்வாங்க பூஜைகள் மற்றும் திருமுறை பாராயணம் இடம்பெறும்.
கும்பாபிஷேக விழாவிற்கு பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஆலயப் பணிகளுக்கு ஆதரவு வழங்கி, பரம்பொருளின் திருவருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
நன்கொடை மற்றும் ஆலயப் பணிகளுக்கான வங்கி விவரம்:
வங்கி: CIMB Bank
கணக்கு எண்: 8003053427
கணக்கு பெயர்: Persatuan Penganut Dewi Sri Maha Mariaman Damansara Damai Petaling Jaya
மேலும் தகவல்களுக்கு:
தர்மேந்திரா – 019-299 3638 (தலைவர்)
தீபன் ராஜ் – 014-632 3655 (துணைத் தலைவர்)
வேலவன் – 016-263 6436 (செயலாளர்)
கதிரேசன் – 014-369 2104 (பொருளாளர்)
0 Comments