loader
சுங்கை‌ சிப்புட் மலையாளி சங்கம் ஏற்பாட்டிலான ஓணம் உற்சவத்திற்கு டான் ஶ்ரீ எம். இராமசாமி சிறப்பு வருகை

சுங்கை‌ சிப்புட் மலையாளி சங்கம் ஏற்பாட்டிலான ஓணம் உற்சவத்திற்கு டான் ஶ்ரீ எம். இராமசாமி சிறப்பு வருகை

ஈப்போ, செப் 8-

மலையாளி சமூகத்தினரின் பாரம்பரியத்தை ஓணம் கொண்டாட்டம் வழி பறைசாற்றும்பொருட்டு சுங்கை சிப்புட் மலையாளி சங்கம் ஓணம்  விழாவை மிக சிறப்பாக நடத்தினர்.

சுங்கை சிப்புட் மலையாளி சங்கத்தின் தலைவர்‌ சரோஜா குஞ்சுராமன் தலைமையிலானஇந்த நிகழ்விற்கு தேசிய ம.இ.கா கட்சியின் உதவித் தலைவர் டான் ஶ்ரீ இராமசாமி சிறப்புவருகை புரிந்தார்.

இதனிடையே, பாரம்பரியம் எதுவாக இருந்தாலும் மக்களின் ஒற்றுமையே மிகவும் முக்கியம்  என டான்  ஶ்ரீ இராமசாமி கூறினார்.

அதையடுத்து , மலையாளிகளின் பாரம்பரியத்தை எடுத்துரைத்த சுங்கை சிப்புட் மலையாளிசங்கத்திற்கு 5000 வெள்ளி தருவதாக அவர் தெரிவித்தார்.

அதையடுத்து, இந்த நிகழ்வில் மாலையாள பாடல்கள், படைப்புகள் வருகையாளர்களைகவரும் படியாக அமைந்தது.

இந்த நிகழ்வில் மலையாளிகளின் உணவு முறையில் உணவுகள் பரிமாறப்பட்டன.

தொடர்ந்து ,ஓணம் பண்டிகையை சிறப்பாக நடத்த ஆதரவு வழங்கிய செயலவைஉறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் சுங்கை சிப்புட் மலையாளிகள் சங்கத்தின் தலைவர்சரோஜா நன்றி கூறினார்.

0 Comments

leave a reply

Recent News